என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருங்கடல்"

    • கருங்கடல் பாதுகாப்பு வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ரஷியா கூறியுள்ளது.
    • கருங்கடலில் உக்ரைனின் மூன்று ஆளில்லா விரைவுப் படகுகளையும் ரஷியா அழித்துள்ளது.

    ரஷியாவிற்கு எதிராக உக்ரைன் ராணுவத்தை பயன்படுத்துவதால் கருங்கடல் பாதையில் கப்பல்கள் செல்வதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    மேலும், கருங்கடல் பாதுகாப்பு வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ரஷியா கூறியுள்ளது.

    இந்நிலையில், கருங்கடலில் உக்ரைனின் மூன்று ஆளில்லா விரைவுப் படகுகளையும் ரஷியா அழித்துள்ளது. இதன் வீடியோவை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    முன்னதாக, ரஷிய போர்க்கப்பலான இவான் குர்ஸை உக்ரைன் தாக்க முயற்சித்ததை அடுத்து உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் படகுகள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து செய்தி தொடர்பாளர் ஒருவர்,"போஸ்பரஸ் ஜலசந்தியிலிருந்து வடகிழக்கே 140 கிமீ தொலைவில் ரஷிய கடற்படைக் கப்பலின் நிலையான ஆயுதங்களிலிருந்து உக்ரைனின் அனைத்து படகுகளும் அழிக்கப்பட்டன" என்றார்.

    • கப்பலை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • மோசமான வானிலை காற்று காரணமாக கப்பலை தேடும் பணியில் தொய்வு.

    துருக்கியில் புயலுக்கு மத்தியில் 12 பணியாளர்களுடன் கருங்கடல் கடற்கரையில் சென்றுக் கொண்டிருந்த துருக்கியின் சரக்குக் கப்பல் மாயமாகியுள்ளது.

    இந்த கப்பலை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வடமேற்கு துருக்கியின் சோங்குல்டாக் மாகாணத்தில் உள்ள எரெக்லியில் கப்பல் நகர்ந்து கொண்டிருந்ததாக துருக்கி கொடியிடப்பட்ட காஃப்கமெட்லர் கப்பலின் கேப்டன் தெரிவித்ததாக மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இப்பகுதி நேற்று சக்திவாய்ந்த புயல்களால் பாதிக்கப்பட்டது. மோசமான வானிலை, காற்று காரணமாக கப்பலை தேடும் பணி சவாலாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதனால், கப்பலை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாகவும். வானிலை சற்று தெளிவான பிறகு மீட்பு நடவடிக்கை தொடங்க குழுக்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரஷியாவுக்கும், கிரீமியாவுக்கும் இடையில் கெர்ச் ஜலசந்தியில் (Kerch Strait) உள்ளது
    • இந்த விபத்தில் 1 ஊழியர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கருங்கடலில் 29 ஊழியர்கள் சென்ற 2 ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் புயலில் சிக்கி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் இருந்து எண்ணெய் கசிந்து வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) ரஷ்யாவுக்கும், கிரீமியாவுக்கும் இடைப்பட்ட கெர்ச் ஜலசந்தியில் (Kerch Strait) ஏற்பட்ட கடுமையான புயலின் போது 15 ஊழியர்களுடன் ஆயிரக்கணக்கான டன் எரிபொருள் எண்ணெய்யை ஏற்றிச் சென்ற ரஷ்ய எண்ணெய் கப்பல் [வோல்கோனெப்ட் 212] இரண்டாக பிளந்து அதில் இருந்த எண்ணெய் கடலில் கசியத் தொடங்கி உள்ளது. இந்த விபத்தில் 1 ஊழியர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

     14 ஊழியர்களுடன் சென்ற இரண்டாவது டேங்கர் கப்பலும் [வோல்கோனெப்ட் 239] புயலால் சேதம் அடைந்து அதே பகுதியில் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் இழுவைப் படகுகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பணியாளர்களை உள்ளடக்கிய குழு மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாக ரஷிய ஊடகம் தெரிவித்துள்ளது.

    ×