search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிப்ஸ்டிக்"

    • உதடுகள் வறைசி அடையாமல் தடுக்க லிப் பாம் அவசியம்.
    • வெடிப்பு அபாயம் ஏற்படாமல் தடுப்பதற்கும் லிப் பாம்கள் உதவுகிறது.

    பொதுவாக குளிர்காலத்தில் தான் உதடுகள் வறைசி அடையாமல் தடுக்க லிப் பாம் அவசியம். ஆனால் கோடை காலங்களிலும் லிப் பாம் அவசியம் என்கிறார்களே என்றால், கோடை காலத்தில் உதடுகளில் ஏற்படும் வறட்சியை தடுக்க இந்த லிப் பாம் பெரிதும் உதவுகிறது.

    குளிர் காலத்தில் உதடுகள் வறண்டு காணப்படும் என்பதால் பலரும் லிப் பாம் போடுவதற்கு மறப்பதில்லை. இதே பிரச்சினை கோடை காலத்தில் இருக்கும் என்பதாலும் லிப் பயன்படுத்தலாம்.

    ஆனால் கோடை காலத்தில் பயன்படுத்தும் லிப் பாம் போல அதிக அடர்த்தி இல்லாமல் லேசாக இருக்கக்கூடிய மற்றும் சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்கக்கூடிய லிப் பாம்களை பயன்படுத்துவது நல்லது.

    கோரமைட், ஹையாலரோனிக் ஆசிட் போன்றவை சேர்ந்த லிப் பாம்கள் நன்று வேலை செய்யும் என்றும் கூறப்படுகிறது.

    சூரியனிடம் இருந்து காத்துக்கொள்ள மிகவும் முக்கியம். உடல் திடீரென தண்ணீர் வறட்சியால் வறண்டு போகும் போது அது நேரடியாக எதிரொலிப்பது உதட்டில் தான். எனவே உதடுகள் வறட்சி அடையாமலும், கருத்துப்போகாமலும், வெயிலினால் பாதிப்படையாமலும் பாதுகாப்பதற்கு இந்த லிப் பாம்கள் உதவுகின்றன.

    சூரிய வெப்பக்காற்றினால் உதடுகள் பாதிக்கப்பட்டு வெடிப்பு அபாயம் ஏற்படாமல் தடுப்பதற்கும் லிப் பாம்கள் உதவுகிறது.

    வயோதிகத்தை முதலில் சொல்வது உதடுகளும், சருமமும் தான். எனவே அவற்றை நல்ல முறையில் பராமரித்தால் தான் என்று இளமையாக இருக்க முடியும்.

    மேலும் உதடுகளின் பராமரிப்புல் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு முக்கியத்துவம் பெறுவதால் கோடைகாலத்தில் நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    • பவுண்டேஷன் மிகவும் அவசியமானவை.
    • நண்பகல் அளவில் உங்கள் மேக்கப்பை டச்சப் செய்வது அவசியம்.

    நீங்கள் மேக்கப்பை நேசிப்பவரா? மிகவும் நுட்பமாக மேக்கப் செய்து கொண்டு, அலங்காரமாக காட்சி தருவதில் விருப்பம் கொண்டவரா? தினமும் பணிக்கு செல்வதற்கு முன், முகத்தை முழு அலங்காரம் செய்து கொள்ள போதிய நேரமும் இருக்கிறதா?

    உங்கள் காலை நேரத்தை உடனடியாக அழகாக்கி, உங்கள் வாழ்க்கையை எளிமையாக்கும் நான்கு அழகு சாதன பொருட்கள். இவை பயணத்திற்கும் ஏற்றவை என்பதோடு மற்ற வேலைகளையும் கவனிக்கலாம். இவற்றை உங்கள் கைப்பையில் வைத்துக்கொண்டால் எப்போது வேண்டும் என்றாலும் எளிமையாக தயாராகலாம். பிசியாக இருக்கும் பெண்கள் தங்கள் முகத்தை பொலிவாக வைத்திருக்க கைவசம் வைத்திருக்க வேண்டிய அழகுசாதன பொருட்களை பற்றி பார்க்கலாம்...

     பவுண்டேஷன் கிரீம்

    பவுண்டேஷன் மிகவும் அவசியமானவை. அதிலும் குறிப்பாக உங்களுக்கு நேர்த்தி குறைவான சருமம் இருந்தால், அவை மிகவும் அவசியம். ஆனால் இங்கு உண்மையை ஒப்புக்கொள்வோம். காலை நேரத்தில் முழுமையான பவுண்டேஷனை பயன்படுத்துவதற்கான நேரம் உங்களுக்கு இல்லை. அதாவது நீங்கள் தூக்கத்தை நேசிப்பவர் என்றால், உங்கள் குறைகளை மறந்து, பூசிக்கொள்ள அதிக நேரம் தேவைப்படாத பொருளை தான் நீங்கள் நாட வேண்டும். உங்கள் சருமத்தின் மீது லேசாக அமரக்கூடிய பிபி கிரீம் அல்லது சிசி கீரிமை போடலாம். அதற்கு குஷன் பவுண்டேஷனையும் பயன்படுத்தலாம். நீங்கள் விரும்பும் பவுண்டேஷனை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

    காம்பேக்ட் பவுடர்

    வெளியே செல்லும் எல்லா பெண்களின் கைப்பையிலும் இருக்க வேண்டிய பொருள் காம்பேக்ட் பவுடர். வியர்வை, ஈரப்பதம் மற்றும் முகத்தை தொடுவது போன்றவை பவுண்டேஷனை பாதிக்கிறது. எனவே நண்பகல் அளவில் உங்கள் மேக்கப்பை டச்சப் செய்வது அவசியம். ஆக, உங்கள் கைப்பையில் காம்பேக்ட் பவுடர் வைத்திருப்பது மிகவும் உதவியாக இருக்கும். காம்பேக்ட் பவுடர் உங்கள் சருமத்திற்கு மென்மையான பளபளப்பை தருவதோடு, பவுண்டேஷன் நீடித்து இருக்கவும் உதவுகிறது. வெப்பம் மிகுந்த நாட்களில் வெளியே செல்வதால் உண்டாகும் பாதிப்பாக துளைகளையும் அடைக்கிறது.

    மஸ்காரா

    பெண்களுக்கு மிகவும் தேவையான பொருட்களில் மஸ்காராவும் ஒன்று. இவை உங்கள் கண்களுக்கு உடனடியாக தீர்க்கமான தன்மையை அளித்து, உங்கள் கண் இமைகள் புத்துணர்ச்சியுடன் இருக்க வழி செய்கிறது. எப்போது உங்கள் கண்களை மெருகேற்ற மஸ்காரா தேவைப்படும் என்று தெரியாது என்பதால், அதை எப்போதும் கைப்பையில் வைத்திருப்பது நல்லது. மேலும், சுருளான மைகள் தேவை எனில், லாக்மே கர்லிங் மஸ்காராவை முயற்சிக்கவும். அதே போல இமைகளை நீளமாக தோன்ற வைக்க விரும்பினால் தி லாக்மே பிளட்டர் சீக்ரெட்ஸ் டிராமட்டிக் ஐஸ் மஸ்காரா ஏற்றதாக இருக்கும்.

    லிப்ஸ்டிக்

    வாய்ப்புள்ள போதெல்லாம் உங்கள் கைப்பையில், ஒரு சில ஷேட் லிப்ஸ்டிக்குகளை வைத்திருக்கவும். 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒரு முறை லிப்ஸ்டிக்கை மீண்டும் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். மனநிலை அல்லது சூழலுக்கு ஏற்ப பொருத்தமான ஷேடை பயன்படுத்தலாம். எப்போது எந்த வண்ண லிப்ஸ்டிக் தேவை என சொல்ல முடியாது. கைவசம் சில வண்ணங்களை வைத்திருக்க வேண்டும்.

    • துணிகள், காகிதங்கள் போன்றவற்றில் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் அனைத்துப் பொருட்களிலும் கலக்கப்பட்டுவிட்டது.
    • உணவு மற்றும் மருந்து நிர்வாகக் கழகமும் குறிப்பிட்ட அளவில்தான் நிறத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வரையறை கொடுத்துள்ளது.

    லிப்ஸ்டிக், நகப்பாலீஷ், முகத்திற்குப் பூசப்படும் அழகு சாதன பொருட்கள், மருந்துகள், மாத்திரைகள், டானிக்குகள், மேல் பூச்சு மருந்துகள்... இப்படி அனைத்தையும், அனைத்திலும் சிவப்பு நிறத்தை பார்க்கும் நாம், அது எவ்வாறு செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளவதில்லை.

    மேற்கூறிய அனைத்துப் பொருட்களிலும் சிவப்பு நிறத்திற்காகக் கலக்கப்படும் நிறமி ஒரு வகையான பூச்சிகளிலிருந்து எடுக்கப்படுகிறது.

    கோச்சினீல் பக் என்னும் ஒரு வகையான ஒட்டுண்ணி பூச்சியில்தான் இந்த சிவப்பு நிறமி இருக்கிறது. காக்ட்ஸ் வகை (கள்ளி) செடிகளில் வெள்ளை நிற கூட்டுடன் வாழும் இப்பூச்சிகளை கசக்கினால், கைகளில் சிவப்பு நிறம் கிடைக்கும். உலர வைத்த இப்பூச்சிகளை அலுமினியம் அல்லது கால்சியம் உப்புடன் சேர்த்துப் பின் பக்குவப்படுத்தி தயாரிக்கப்படும் சிவப்பு நிற மைக்கு "கார்மைன்" அல்லது "காக்கினியல் மை" என்று பெயர் வைத்துள்ளார்கள்.

    துணிகள், காகிதங்கள் போன்றவற்றில் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் அனைத்துப் பொருட்களிலும் கலக்கப்பட்டுவிட்டது.

    உணவுப் பொருட்கள் உள்ளிட்ட எந்த பொருட்களானாலும் அதனுடைய மேல் அட்டையில் (லேபிள்) E 120, Natural Red 4, Carmine, Cochineal, Carminic acid என்று ஏதாவது ஒன்றை கண்டிப்பாகக் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

    ஒருவேளை இந்த சிவப்பு நிறமே செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு இருந்தால் E 124 என்று குறிப்பிடவேண்டும்.


    உணவு மற்றும் மருந்து நிர்வாகக் கழகமும் குறிப்பிட்ட அளவில்தான் இந்த நிறத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வரையறை கொடுத்துள்ளது. ஆனால், கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், குழந்தைகளைக் கவரவேண்டும் என்பதற்காகவே ஜெல்லி மிட்டாய்கள், கேண்டீஸ், சாக்லேட், போன்றவை அதிக அளவில் சிவப்பு நிறத்திலேயே தயாரிக்கப்படுகின்றன.

    பதப்படுத்தப்பட்ட மாமிசம், குளிர்பானங்கள், பழ ரசங்கள், ஆற்றல் தரும் பானங்கள், உணவுப் பொடிகள், இனிப்பு தயிர், பால் பொருட்கள், ஐஸ்கிரீம், சூயிங்கம், சாக்லேட், கற்கண்டு வகை இனிப்புகள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட பழங்கள், உலர் சூப் பொடி, கெச்சப், மதுபானங்கள்...... என்று இவை அனைத்திலும் இந்த நிறம் இருக்கும்.

    ஒருவேளை.... அழகு சாதன பொருட்கள் உபயோகிக்கும்போது ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் அது இந்த பூச்சியினாலேயே இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    -வண்டார் குழலி

    ×