search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதிதிராவிடர் - பழங்குடியினர்"

    • வயது வரம்பு 18 வயது பூர்த்தியாகியிருத்தல் வேண்டும்.
    • மொத்த திட்ட தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாகவும் 35 சதவீதம் முன்முனை மானியமாகவும் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்ததொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல்அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இத்திட்டத்தின்கீழ் ஆர்வமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களுக்கு உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த (நேரடி வேளாண்மைதவிர்த்த) தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிகடன் வழங்கப்படும்.இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு கல்வித்தகுதிதேவையில்லை. வயது வரம்பு 18 வயது பூர்த்தியாகியிருத்தல் வேண்டும். 55 வயதுக்குமிகாமல் இருத்தல் வேண்டும். வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. மொத்த திட்டத்தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாகவும் 35 சதவீதம் (அதிகபட்சம் ரூ.150 லட்சம்வரை) முன்முனை மானியமாகவும் வழங்கப்படும். எனவே பயனாளர்கள் சொந்தமூலதனம் செலுத்த தேவையில்லை. 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோரால் நடத்தப்படும்தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம்.

    சொந்த முதலீட்டில் ஆரம்பிக்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கும், விரிவாக்கத்திற்கும்இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம் .35 சதவீதம் (அதிகபட்சம் ரூ.150 லட்சம் வரை)பின்முனை மானியமாகவும் வழங்கப்படும்.

    தொழில் முனைவோர் மேம்பாட்டுபயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பானசிறப்புபயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில் முனைவோர் மேம்பாடுமற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.இத்திட்டத்தின்கீழ் பயன்பெற திட்டஅறிக்கை மற்றும் ஆவணங்களுடன்www.msmeonline.tn.gov.in என்ற தளத்தில் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கவேண்டும். ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தேவையான ஆலோ சனைகள்,வழிகாட்டுதல்கள், திட்டஅறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள்மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும். கடன்பெறுவது தொடர்பாக நிதிநிறுவனங்களுடன் இணைப்பு பாலமாகவும் மாவட்ட தொழில் மையம் விளங்கும்.திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினதொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின்கீழ்விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கேட்டு கொண்டுள்ளார். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை 0421-247507, 9500713022 என்ற எண்களின் மூலம்தொடர்புகொள்ளலாம்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×