என் மலர்
நீங்கள் தேடியது "உலக முதலீட்டாளர் மாநாடு"
- தெற்காசியாவிலேயே, முதலீடுகளை ஈர்த்திட உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.
- எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள், தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து, தங்கள் திட்டங்களை இங்கு நிறுவியுள்ளனர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஜப்பான் நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் சுமார் 80 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் ஏர்பேக் இன்பிளேடர் தயாரிப்பு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டைசல் நிறுவனத்தின் வணிக இயக்கப் பிரிவுத் தலைவர் கென் பாண்டோவும், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணுவும் கையெழுத்திட்டனர்.
அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் மற்றும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக ஜப்பான் நாட்டு நிதி உதவியை பெறுவதற்காக 2008-ஆம் ஆண்டு நான் டோக்கியோ நகருக்கு வருகை தந்ததை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். மெட்ரோ ரெயில் திட்டமாக இருந்தாலும், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு மிக மிக முக்கியமான திட்டங்கள்.
அப்போது ஜப்பானை நம்பி உதவிகள் கேட்டோம். ஜப்பான் நாடு எங்களைக் கைவிடவில்லை.
அந்தக் காலக்கட்டத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 840 நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி நிறுவனங்களை நடத்தி வந்தன.
அதில் தமிழ்நாட்டில் மட்டும் 170 நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையை நடத்தி வந்தன. அதற்கு ஒரு அலுவலகமாக அப்போது திறந்து வைக்கப்பட்டது. அதில் பேசும்போது, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன். அப்போது பேசிய ஜப்பான் அமைச்சர் மசாயூகி நாஷிமா, "சென்னை என்பது ஆசிய நாடுகளின் நுழைவாயிலாக அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.
அதே, ஆசிய நாடுகளின் நுழைவாயிலான சென்னையில் இருந்து நான் வருகை தந்துள்ளேன். 'உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2024' ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அந்த, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நிகழ்வுக்கு, கூட்டாளர் நாடாக ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இரு நாடுகளுக்கு இடையேயான, பொருளாதார உறவுகள், சமீப காலங்களில் மிகப்பெரும் எழுச்சி கண்டுள்ளது. இந்திய சந்தைக்குள் நுழையும் ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்குள், தமிழ்நாடு தான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக முன்னணியில் விளங்குகிறது.
தெற்காசியாவிலேயே, முதலீடுகளை ஈர்த்திட உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள், தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து, தங்கள் திட்டங்களை இங்கு நிறுவியுள்ளனர்.
நிசான், தோஷிபா, யமஹா, கோமேட்ஸு, யோரோசு, யமஹா ஹிட்டாச்சி மற்றும் யூனிப்ரெஸ் போன்ற மிகப்பெரும் நிறுவனங்கள், தங்கள் உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் அமைத்துள்ளன. இது நீண்டு கொண்டே போகும் பட்டியல்.
ஜப்பான்-இந்தியா முதலீடு மேம்பாட்டுக் கூட்டாண்மை திட்டத்தின்கீழ் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரியங்களில், 3 நகரியங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்திடுவதில் முக்கியப் பங்காற்றிடும் விதமாக, 2030 நிதியாண்டிற்குள், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான ஒரு இலட்சிய இலக்கினை நிர்ணயித்து, அந்தப் பாதையில் பயணித்து வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே இதுவரை 5 ஆயிரத்து 596 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4244 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 5 ஜப்பானிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
டைசல் கார்ப்பரேஷன், மிட்சுபிஷி, மதர்சன் ஆட்டோ சொல்யூஷன்ஸ், ரெனோ-நிஸ்ஸான் விரிவாக்கத் திட்டம் மற்றும் மக்கினோ போன்ற பல நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை நிறுவுவதற்காக, சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன.
இன்னும் பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான பல்வேறு தொழிற்கொள்கைகளையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம்.
இதன் பொருட்டே, முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக, தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. அதனால்தான் எங்களுடன் இணைந்திடுமாறு, உங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். ஜப்பானிய நிறுவனங்கள் பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த துறைகளில் மட்டுமே முதலீடு மேற்கொள்ள விழைகின்றன.
இந்நிலையை சற்றே விரிவுபடுத்தி, மேம்பாட்டு திட்டங்களிலும் முதலீடு மேற்கொள்ள வருமாறு, இத்தருணத்தில் உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில், புதிய தொழில் பூங்காக்களை அமைத்து வருகிறோம்.
மேலும், மருத்துவ சாதனங்கள் பூங்கா, உணவுப் பூங்காக்கள், மின் வாகனங்களுக்கான பூங்கா மற்றும் வருங்கால நகர் திறன் பூங்கா, மின்னணுவியல் உற்பத்தித் தொகுப்புகள், ஒருங்கிணைந்த ஆடை மற்றும் ஜவுளி பூங்கா, தோல் காலணிகள் மற்றும் உப பொருட்களின் உற்பத்தித் தொகுப்புகள் மற்றும் நிதி நுட்ப நகரம் என்று பல்வேறு துறை சார்ந்த உட்கட்டமைப்புகளை நாங்கள் வலுப்படுத்தி வருகிறோம்.
இத்துறைகளில், உங்களின் மேலான முதலீடுகளை நாங்கள் வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜப்பான் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான மதிய உணவுடன் கூடிய சந்திப்பு நிகழ்வில், ஒசாகா மாகாணத்தின் துணை கவர்னர் நோபுஹிகோ யமாகுஜிவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
- பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது.
- நமது மாநிலம் வழங்கும் அபரிமிதமான ஆற்றலைப் பயன்படுத்துவதிலும் எங்களுடன் சேருங்கள்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வருகிற 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது.
இதையொட்டி வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024 நெருங்கி வருவதால், எதிர்பார்ப்புடன் கூடிய காற்று வீசுகிறது.
30,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன், நம் பிரச்சாரங்கள், டைட்டன்ஸ் ஆப் தமிழ்நாடு மற்றும் ஓன் மில்லியன் ட்ரீம்ஸ் ஆகியவை உற்சாகத்தைத் தூண்டியுள்ளன.
#GIM2024-ல் 450+ சர்வதேச பிரதிநிதிகள், 170 உலகப் புகழ் பெற்ற பேச்சாளர்கள் மற்றும் 50 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வதுடன், தமிழ்நாட்டின் தொழில் வளத்தை அடிக்கோடிட்டுக் காட்டும்.
நாங்கள் 26 சிந்தனை தலைமை அமர்வுகளை வரிசைப்படுத்தியுள்ளோம். எங்களிடம் ஒரு எம்எஸ்எம்இ பெவிலியன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைப்பு பெவிலியன், பல நாட்டு அரங்குகள் மற்றும் ஸ்டார்ட்அப் டிஎன் பெவிலியன் ஆகியவை உள்ளன.
பிரதிநிதிகள் மாநிலத்தின் தொழில்துறை அதிசயத்தைக் காணவும் வணிக ஒத்துழைப்புகளை வளர்க்கவும் ஒரு அருமையான வாய்ப்பை வழங்குகிறது.
தமிழ்நாட்டின் தொழில்துறை மரபைக் கொண்டாடுவதிலும், நமது மாநிலம் வழங்கும் அபரிமிதமான ஆற்றலைப் பயன்படுத்துவதிலும் எங்களுடன் சேருங்கள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
- மத்திய ஜவுளி, வர்த்தக தொழில் துறை மந்திரி பியூஷ்கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார்.
சென்னை:
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் சுற்றுப்ப யணம் செய்து புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழக பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடையும் நோக்கில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை மாநாட்டின் தொடக்க விழா நடைபெறுகிறது. விழாவில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றுப் பேசுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
மத்திய ஜவுளி, வர்த்தக தொழில் துறை மந்திரி பியூஷ்கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார்.
மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. உற்பத்தி தொடர்பான கண் காட்சியும் நடைபெறுகிறது. இதில் தொழில் துறை அரங்குகளும் இடம் பெறுகின்றன. 450-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக பதிவு செய்துள்ளனர்.
சிங்கப்பூர், ஜப்பான், கொரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் மாநாட்டில் பங்கேற்கின்றன. 35 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டு கருத்தரங்கில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன், மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், இஸ்ரோ தலைவர் சோமநாத் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர்.
மாநாட்டின் போது நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்படுவதுடன் ரூ.5.5 லட்சம் கோடிக்கணக்கான முதலிடுகளை ஈர்க்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஒசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக 7 ஆயிரம் கோடி ருபாய் முதலீட்டில் ஐ-போன் உதரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு நாளை சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் வெளியிடப்படுகிறது.
இதன் மூலம் 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.
ஐ-போனை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான முதல் இந்திய நிறுவனமாக கடந்த நவம்பர் மாதம் டாடா எலக்ட்ரானிக் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
தற்போது ஒசூரில் ஐ-போன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கூடுதலாக 7 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய யூனிட் அமைக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகள் மற்றும் ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
நாளை நடைபெற உள்ள இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொழில் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் உள்ளிட்ட சில நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார்.
- உலக முதலீட்டாளர் மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
சென்னை:
தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார முன்னேற்றத்தை பெற்றிருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதற்கேற்ற வகையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் உள்ளிட்ட சில நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார்.
மேலும், தமிழகத்திற்கு உலக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இந்நிலையில் உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டு தொடக்க விழா மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் முன்னிலையில் நடைபெறுகிறது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
- மத்திய ஜவுளி, வர்த்தக தொழில் துறை மந்திரி பியூஷ்கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சென்னை:
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் சுற்றுப்ப யணம் செய்து புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார்.
தமிழக பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இதற்கிடையே, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றுப் பேசினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
மத்திய ஜவுளி, வர்த்தக தொழில் துறை மந்திரி பியூஷ்கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ஜவுளி, வர்த்தக தொழில்துறை மந்திரி பியூஷ்கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை நினைவுப் பரிசை வழங்கினார்.
இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொழில் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
- தொழில் துறையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
- வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு.
சென்னை:
உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தொழில் துறையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
* இந்தியாவில் வாகன உற்பத்தி துறையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
* ஏற்றுமதிக்கான குறியீட்டு எண்ணில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
* வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு.
* நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
* தமிழ்நாட்டில் 230 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் உள்ளோம்.
* தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் சீராக வளர வேண்டும் என்பது முதல்வரின் இலக்கு.
இவ்வாறு அவர் கூறினார்.
- கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலம், அதனால் சிறந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் உண்டு.
- 2030க்குள் 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை தமிழகம் எட்டும்.
சென்னை:
உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரை ஆற்றினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ஜவுளி, வர்த்தக தொழில்துறை மந்திரி பியூஷ்கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை நினைவுப் பரிசை வழங்கினார். இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பியூஷ் கோயல் உரையாற்றினார்.
இதையடுத்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதால், தற்போது கோட் சூட் அணிந்துள்ளேன்.
* இன்று சென்னையில் பெய்யும் மழை போல முதலீடும் மழையாக பெய்யும் என நம்புகிறேன்.
* முதலமைச்சராக மட்டுமின்றி சகோதரனாக உங்களை வரவேற்கிறேன்.
* தனித்த தொழில்வளம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.
* பழங்காலத்திலேயே கடல் தாண்டி வணிகம் செய்தவர்கள் தமிழர்கள்.
* திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழி தமிழில் உண்டு.
* கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலம், அதனால் சிறந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் உண்டு.
* எங்கள் அழைப்பை ஏற்று வந்துள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் நன்றி. வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், தொழில் கூட்டமைப்பினருக்கு நன்றி.
* எனது அழைப்பை ஏற்று வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு நன்றி. வங்கிப் பணியாளராக இருந்து நிதி, வர்த்தகத்துறையில் சிறந்து விளங்குபவர் பியூஸ் கோயல்.
* அமெரிக்க உள்ளிட்ட 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரராக உள்ளன.
* தொழில் வளர்ச்சிக்கு இந்த மாநாடு வழிவகுக்கும். பல சாதனைகளை மிஞ்சக்கூடிய மாநாடாக இது இருக்கும்.
* இந்திய பொருளாதாரத்தை வடிவமைப்பதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும்.
* 2030க்குள் 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை தமிழகம் எட்டும்.
* பொருளாதார வளர்ச்சிக்கு சட்டம் ஒழுங்கு பேணப்பட்டு, அமைதி நிலவ வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும்.
* 2021ல் பொறுப்பேற்ற பிறகு இந்த வசதிகளை சிறப்பாக மேம்படுத்தி வருகிறோம்.
* திறமையான இளைஞர் சக்தியை உருவாக்குவதில் தமிழகம் உறுதியாக இருக்கிறது என்று கூறினார்.
- பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
- இன்றும், நாளையும் இந்த மாநாட்டில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
சென்னை:
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
* கடந்த 2 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
* ஜவுளி, மின்னணு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.
* தமிழகம் முழுவதும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
* தமிழகம் முழுவதும் தொழில்களை துவங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
* ஏற்கனவே தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை விரிவுபடுத்தி உள்ளன. இதுவே தமிழகத்தில் தொழில் தொடங்க சிறந்த சூழல் உள்ளதற்கு சான்று.
* எல்லா துறைகளிலும் திறமையான பணியாளர்களை தமிழகம் கொண்டுள்ளது.
* இன்றும், நாளையும் இந்த மாநாட்டில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் சிறப்பு அமர்வுகள் நடைபெற உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோத்ரேஜ் நிறுவனம்-ரூ.515 கோடி முதலீடு (செங்கல்பட்டில் உற்பத்தி மையம) 446 பேருக்கு வேலை.
- பெகட்ரான்-ரூ.1000 கோடி (நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையம்)-8 ஆயிரம் பேருக்கு வேலை.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் கோடிகளை கொட்டி முதலீடு செய்துள்ளன. எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்துள்ளன என்பது பற்றிய விவரம் வருமாறு:-
1. ரிலையன்ஸ் ஜியோ-ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலை)
2. கோத்ரேஜ் நிறுவனம்-ரூ.515 கோடி முதலீடு (செங்கல்பட்டில் உற்பத்தி மையம) 446 பேருக்கு வேலை.
3. டாடா எலெக்டரானிக்ஸ்-ரூ. 12 ஆயிரத்து 82 கோடி முதலீடு (கிருஷ்ணகிரியில் செல்போன் உற்பத்தி மையம்) 40 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
4. பெகட்ரான்-ரூ.1000 கோடி (நுகர்வோர் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மையம்)-8 ஆயிரம் பேருக்கு வேலை.
5. வே.எஸ். டபிள்யூ-ரூ.12 ஆயிரம் கோடி (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் 6,600 பேருக்கு வேலை)
6. டி.வி.எஸ். குழுமம்-ரூ.5 ஆயிரம் கோடி (தமிழகம் முழுவதும் திட்டங்கள் 500 பேருக்கு வேலைவாய்ப்பு)
7. சீன நாட்டின் மிட்சுபிஹி நிறுவனம்-ரூ.200 கோடி (கும்மிடிப்பூண்டியில் மோட்டார் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது)
8. வியட்நாம் நாட்டின் முன்னணி மின் வாகன தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட்-ரூ.16 ஆயிரம் கோடி (தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைகிறது)
9. ஹூண்டாய்-ரூ.6 ஆயிரம் கோடி (காஞ்சிபுரத்தில் பெட்ரோலிய மின்சார வாகன கார் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்படுகிறது)
10. குவால்காம் நிறுவனம்-ரூ.177.27 கோடி முதலீடு செய்துள்ளது.
- முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி-பசுமை ஹைட்ரஜன் தொழில் தொடங்கப்பட உள்ளது.
சென்னை:
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி கலந்து கொள்ளவில்லை. வீடியோ மூலம் அவர் உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
முதலீட்டாளர்கள் மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாடு அறிவுசார், பாரம்பரியத்தில் சிறந்து விளங்கும் மாநிலம். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழகம் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக உள்ளது.
ஜியோ நிறுவனம் தமிழகத்தில் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி-பசுமை ஹைட்ரஜன் தொழில் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆலை அடுத்த வாரம் தொடங்கப் பட உள்ளது.
தமிழகத்தில் ஜியோவின் 300 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. ஜியோ வாடிக்கையாளர்களாக 3.5 கோடி பேர் உள்ளார்கள். இதில் ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளோம்.
தமிழகத்தில் ஜியோ நிறுவனம் 5 ஜி சேவையை கடந்த மாதமே முழுமையாக வழங்க தொடங்கிவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
#WATCH | On the Tamil Nadu Global Investors Meet – 2024 in Chennai, Reliance Industries Chairman and MD Mukesh Ambani says, "...Under the leadership of Thiru Stalin, Tamil Nadu has become one of the most business-friendly states in the country. Therefore, I have every reason to… pic.twitter.com/Pg5PUuiIxQ
— ANI (@ANI) January 7, 2024
- காஞ்சிபுரத்தில் மின்சார கார் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் தொடங்கப் படுவதன் மூலம் அங்கும் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரியிலும் டாடா நிறுவனம் தங்களது தொழிற் சாலையை விரிவாக்கம் செய்ய உள்ளது.
சென்னை:
சென்னையில் இன்று நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங் களில் கையெழுத்து போட்டுள்ளன. முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், ஹூண்டாய் நிறுவனம் என பல்வேறு நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை தமிழகத்தில் முதலீடு செய்துள்ளன.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இரும்பு தயாரிப்பு தொழிற்சாலை அமைய இருப்பதன் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் மின்சார கார் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் தொடங்கப் படுவதன் மூலம் அங்கும் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் ஹூண்டாய் நிறுவனம் ஆலை விரிவாக்க பணியை மேற்கொள்ள உள்ளது. கிருஷ்ணகிரியிலும் டாடா நிறுவனம் தங்களது தொழிற் சாலையை விரிவாக்கம் செய்ய உள்ளது.
இதனால் அந்த மாவட்ட மக்களும் பயன் அடைய உள்ளனர். கோத்ரேஜ் நிறுவனம் செங்கல்பட்டில் புதிய ஆலையை தொடங்க உள்ளதன் மூலம் அங்கும் வேலைவாய்ப்பு பெருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படி உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக முதலீடுகள் குவிந்துள்ளதால் 40,500 பேருக்கு வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
- புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் கோடிகளை கொட்டி முதலீடு செய்துள்ளன.
இந்நிலையில், எரிசக்தி துறையில், 1 லட்சத்து 37 ஆயிரம் கோடி முதலீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளன.
பேச்சு வார்த்தை நிறைவு பெற்றுள்ள நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்சாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.