என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தோஷ் சிவன்"

    • விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் மும்பைக்கர்.
    • ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தமிழில் கடந்த 2017-ல் வெளியான மாநகரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகம் ஆன இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷான், ரெஜினா கசான்ட்ரா, சார்லி, ராம்தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கைந்து இளைஞர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் காரணமாக ஒரே புள்ளியில் அவர்கள் சந்திப்பதை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.


    மும்பைக்கர் 

    மாநகரம் திரைப்படம் இந்தியில் மும்பைக்கர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி, விக்ராந்த் மாசே, ராகவ் பினானி, தான்யா மணிக்ட்லா, ரன்வீர் ஷோரே, சச்சின் கேட்கர், சஞ்சய் மிஸ்ரா, ஹிரித்து ஹருண், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தை ஜோதி தினேஷ் பாண்டே, ரியா ஷிபு இணைந்து தயாரித்துள்ளனர். சலீல் அம்ருதே மற்றும் ராம் சுரேந்தர் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.


    மும்பைக்கர் போஸ்டர்

    ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மும்பைக்கர் திரைப்படம் வருகிற ஜூன் 2-ஆம் தேதி நேரடியாக ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய் சேதுபதி இந்தியில் அறிமுகமான திரைப்படம் 'மும்பைகர்'.
    • இப்படத்தை இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கினார்.

    புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மும்பைகர்'. இப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாநகரம்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இதில் விஜய் சேதுபதி, விக்ராந்த் மாசே, ஹிருது ஹாரூண், ரன்வீர் ஷோரே, தன்யா மானிக்தலா, சஞ்சய் மிஸ்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜோதி தேஷ்பாண்டே மற்றும் ரியா ஷிபு ஆகியோர் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

    மும்பையின் பரபரப்பான தெருக்களின் பின்னணியில் அமைக்கப்பட்ட 'மும்பைகர்' திரைப்படம் பல்வேறு தொடர்பற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையை பின்னிப்பிணைத்து சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர காலகட்டத்தில் நடக்கும் பல நிகழ்வுகளை திடீரென ஒன்றிணைக்கும் முக்கிய கதாபாத்திரங்களின் பயணத்தை படம் விவரிக்கிறது.


    இந்நிலையில், 'மும்பைக்கர்' திரைப்படம் முதல் முறையாக நவம்பர் 5-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது.

    இப்படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, இந்திய நடிகர்களுக்கு இது ஒரு உற்சாகமான நேரமாக இருக்கிறது. பல்வேறு மொழிப் படங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் எங்களுக்கு வருகின்றன. வெப் சீரிஸில் நான் நடித்ததற்காக மக்களின் அன்பு, பாராட்டுகளை பெற்றுள்ளேன். இந்த திரைப்படம் எனது முதல் இந்தி திரைப்பட அறிமுகமாக அமைந்துள்ளது. இப்படம் தமிழில் வெளியாவதன் மூலம் தமிழ் ரசிகர்கள் இப்படத்தை விரும்புவார்கள் மற்றும் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

    • மோகன்லால் L360, லூசிஃபர் 2, எம்புரான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
    • இந்நிலையில் மோகன்லால் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இது இவர் இயக்கும் முதல் படமாகும்.

    மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்லால். கடந்த ஜனவரி மாதம் லிஜொ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் நடித்தார் மோகன்லால். படம் வெளிவந்து மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத் தொடர்ந்து மோகன்லால் L360, லூசிஃபர் 2, எம்புரான் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் மோகன்லால் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்திற்கு 'பரோஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.

    குழந்தைகளைக் கவரும் விதமாக உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைக்கிறார். 3டி-யில் உருவாகும் இந்தப் படம், பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது.

    வாஸ்கோட காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதைதான் இந்தப் படம் என்கிறார்கள். இந்நிலையில், இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்திய ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவனுக்கு ‘தி பியர் ஆஞ்ஜெனியக்ஸ் எக்ஸ்லன்ஸ் இன் சினிமாடோகிராஃபி’ என்ற கவுரவ விருதை வழங்கியுள்ளனர்.
    • இது ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர்களுக்கு கொடுக்கப்படும் கவுரவ விருதாகும்.

    2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் அடுத்தடுத்து இந்திய குறும் படங்களுக்கும், திரைப்படங்களுக்கும், நடிகருக்கும் அங்கீகாரம் கிடைத்த நிலையில் தற்பொழுது இந்திய ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவனுக்கு 'தி பியர் ஆஞ்ஜெனியக்ஸ் எக்ஸ்லன்ஸ் இன் சினிமாடோகிராஃபி' என்ற கவுரவ விருதை வழங்கியுள்ளனர்.

    இது ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர்களுக்கு கொடுக்கப்படும் கவுரவ விருதாகும். சந்தோஷ் சிவன் அவருக்கென ஒரு ஸ்டைலில் கதையை ஒளிப்பதிவில் காண்பிக்கும் திறனுள்ளவர். ஒரு குழந்தை எப்படி இந்த உலகை வியந்தும், புதுமையாக ஒவ்வொரு விஷயத்தை பார்க்கிறதோ. அதுப்போல தான் சந்தோஷ் சிவனின் காட்சிபதிவு இருக்கும்.

    இவரின் இந்த காட்சிபதிவு திறனுக்கு இவரின் அப்பா மிக முக்கிய காரணம். இவரது தந்தையான  சிவசங்கரன் நாயர் பிரபலமான மலையாள இயக்குனர் ஆவார். இவர் ஒரு போட்டோ ஸ்டூடியோவை சொந்தமாக வைத்து இருந்தார். சிறு வயதில் இருந்தே தன் அப்பாவுடன் போட்டோ ஸ்டூடியோக்கு செல்வதும், அவர் எடுக்கும் போட்டோ ஷூட்டுகளுக்கு உதவி செய்து வந்து, ஒளிப்பதிவின் மீது ஆர்வம் பற்றிக் கொண்டது.

    1986 ஆம் ஆண்டு வெளியான `நிதியுடே கதா' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தனது ஒளிப்பதிவாளர் பயணத்தை தொடங்கினார். மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா மற்றும் தளபதி படங்களில் இவரது ஒளிப்பதிவின் திறமை அபாரமாக இருக்கும்.

    ரோஜா படத்தில் வரும் இயற்கை காட்சிகள், தளபதி படத்தில் ரஜினி கதாப்பாத்திரத்திற்கும் சூரியனுக்கும் ஒரு தொடர்பு இருந்துக் கொண்டே இருக்கும், அதை மிக அழகாக காட்சி படுத்திருப்பார். இவர் ஒளிப்பதிவில் உருவான சாருக்கான் ஓடும் ரெயிலில் ஆடிய 'சையா சையா' பாடல் இன்று வரை மக்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

     

    இந்தியன் சொசைட்டி ஆஃப் சினிமாடோகிராஃபர்ஸ் என்ற சங்கத்தை தொடங்கி வைத்தது சந்தோஷ் சிவன் ஆகும்.அமேரிகன் சொசைட்டி ஆஃப் சினிமாடோகிராஃபர்ஸ் பட்டியலில் இடம் பெற்ற முதல் ஆசிய ஒளிப்பதிவாளர் பெருமை இவரே சேறும். இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் 50-மேற்பட்ட டாக்குமண்டரிகளுக்கும் ஒளிப்பதிவு ஆற்றியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

    சர்வதேச அளவில் இதுவரை பல பிரபல ஒளிப்பதிவாளர் பெற்ற இந்த கேன்ஸ் கவுரவ விருதை நம் இந்தியாவை சேர்ந்த சந்தோஷ் சிவன் தற்பொழுது பெற்றுள்ளது மிகப் பெரிய ஒரு அங்கீகாரம் இந்திய சினிமா பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×