என் மலர்
நீங்கள் தேடியது "ஆந்திர விபத்து"
- விபத்தில் லாரியின் பின்புறம் அமர்ந்து சென்ற தொழிலாளர்கள் மீது கட்டுமான கற்கள் விழுந்தது.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், மாச்சர்லாவில் இருந்து கட்டுமான பணிக்கு தேவைப்படும் கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ரேப்பள்ளி நோக்கி சென்று கொண்டு இருந்தது.
ரவி அனந்தபுரம் என்ற இடத்தில் சென்றபோது, லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரியின் பின்புறம் அமர்ந்து சென்ற தொழிலாளர்கள் மீது கட்டுமான கற்கள் விழுந்தது.
இதில் கற்களுக்கு அடியில் சிக்கி சிந்தர்லா பாசர்ல பாடு பகுதியை சேர்ந்த சென்ன கேசவல்லு (வயது 48), சாம்பைய்யா (60), வாலி (41) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் டிரைவர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ரேப் பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.