என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சர்வதேச மாடலிங் போட்டி"
- தேசிய அளவிலான மாடலிங் போட்டி ைஹதராபாத்தில் நடந்தது.
- வருகிற செப்டம்பர் 21-ந் தேதி தாய்லாந்து நாட்டில் நடைபெறும் போட்டியில், பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட போயம்பாளையத்தை சேர்ந்தவர் ரவிக்குமார், டெய்லர். இவரது மனைவி ஜோதிமணி. இந்த தம்பதியரின் மூத்தமகன் உபநிஷாந்த். இளையமகன் திஷாந்த். சகோதரர்கள் இருவரும் மாடலிங் துறையில் சாதிக்கவேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டுள்ளனர்.
தேசிய அளவிலான மாடலிங் போட்டி ைஹதராபாத்தில் நடந்தது. இப்போட்டியில் 13 - 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் உபநிஷாந்த், 8 - 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் திஷாந்த் பங்கேற்றனர்.புதுமையான ஆண்கள் ஆடை ரகங்களை அணிந்து, பேஷன்ஷோவில் கேட்வாக் செய்தனர், நடனமாடினர்.அதன்பின் நேர்முகத்தேர்வில் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அவ்வகையில் தேசிய அளவிலான மாடலிங் போட்டியில் உபநிஷாந்த் முதலிடம், திஷாந்த் மூன்றாமிடம் பிடித்தனர்.இதனால் சர்வதேச அளவிலான மாடலிங் போட்டி வருகிற செப்டம்பர் 21-ந் தேதி தாய்லாந்து நாட்டில் நடைபெறும் போட்டியில், பங்கேற்கும் வாய்ப்பை உபநிஷாந்த், திஷாந்த் பெற்றுள்ளனர்.இருவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் டீன் சூப்பர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க விரைவில் தாய்லாந்து செல்கின்றனர்.சர்வதேச போட்டியில் பங்கேற்க உள்ள மாடலிங் சகோதரர்களை திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் பாராட்டினார்.