என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுசேமிப்பு திட்டம்"

    • முதிர்வு காலம் முடிந்த பின்னரும் பல முதலீட்டுத்தாரர்கள் அதற்கான பணத்தை வாங்க வராமல் இருந்ததும் தெரியவந்தது.
    • முதலீட்டுதாரர்கள் பற்றிய பட்டியலை வருமான வரித்துறை அதிகாரிகள் திரட்டினர்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் வருமான வரி ஏய்ப்பை தடுக்க வருமான வரித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இது தொடர்பாக வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ள தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்களில் ஏராளமானோர் பணம் முதலீடு செய்திருப்பதை கண்டு பிடித்தனர்.

    இவர்களின் முகவரிகளை ஆய்வு செய்த போது அவற்றில் பலவும் போலி என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், இந்த முதலீடுகள் குறித்த முழு விபரங்களையும் தபால் துறையிடம் கேட்டு வாங்கியது.

    தபால் துறை அளித்த தகவல்களின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தபால் துறையின் சிறுசேமிப்பு திட்டம் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் ஆகியவற்றில் முதலீடு செய்தவர்களில் பலரும் தங்கள் குழந்தைகள் பெயரிலும், வீட்டில் வேலை செய்வோர் உள்பட பினாமிகள் பேரிலும் முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் முதிர்வு காலம் முடிந்த பின்னரும் பல முதலீட்டுத்தாரர்கள் அதற்கான பணத்தை வாங்க வராமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த முதலீட்டுதாரர்கள் பற்றிய பட்டியலை வருமான வரித்துறை அதிகாரிகள் திரட்டினர்.

    இது தொடர்பாக வருமான வரித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்களில் பினாமி பெயர்களில் பலர் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக ரூ. 50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பணம் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

    இவர்களில் முதல் கட்டமாக 150 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தபால் நிலையங்களிலும் முதலீட்டாளர்கள் குறித்த விபரங்கள், அவர்களின் ஆவணங்களை உடனே சரிப்பார்க்கவும் உத்தரவிட்டுள்ளோம், என்றார்.

    இந்த நடவடிக்கைக்கு பிறகு மேலும் பலருக்கு வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பும் என்று தெரிகிறது.

    • சேமிப்பு வைப்புத்தொகை வட்டி 4 சதவீதமாகவும், ஓராண்டுக்கான வைப்பு நிதிக்கான வட்டிவிகிதம் 6.9 சதவீதமாகவும் தொடர்கிறது.
    • 2 மற்றும் 3 ஆண்டு வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7 சதவீதமாகவும், 5 ஆண்டு வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமாகவும் உள்ளது.

    புதுடெல்லி:

    அஞ்சல் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் டிசம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    இதில் முக்கியமாக 5 ஆண்டுக்கான தொடர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரம் சேமிப்பு வைப்புத்தொகை வட்டி 4 சதவீதமாகவும், ஓராண்டுக்கான வைப்பு நிதிக்கான வட்டிவிகிதம் 6.9 சதவீதமாகவும் தொடர்கிறது.

    2 மற்றும் 3 ஆண்டு வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7 சதவீதமாகவும், 5 ஆண்டு வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமாகவும் உள்ளது.

    மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட வட்டிவிகிதம் 8.2 சதவீதம் எனவும், மாதாந்திர வருவாய் கணக்கு திட்ட வட்டி விகிதம் 7.4 சதவீதம், பொது வருங்கால வைப்பு நிதி திட்ட வட்டி விகிதம் 7.1 சதவீதம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    கிசான் விகாஸ் பத்திரங்களின் வட்டி விகிதம் 7.5 சதவீதம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி கணக்குக்கான வட்டி விகிதம் 8 விகிதமாக நீடிப்பதாகவும் நிதியமைச்சக அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • முந்தைய காலாண்டில் அமலில் இருந்த வட்டி விகிதமே நீடிக்கும் என்றும் கூறியுள்ளது.
    • அனைத்துக்கும் பழைய வட்டிவிகிதங்களே நீடிக்கும்.

    புதுடெல்லி:

    வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் நடைமுறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை 3 மாதங்களுக்கு ஒருதடவை மத்திய அரசு மாற்றி அமைத்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் 4-வது காலாண்டுக்கான (ஜனவரி 1-ந் தேதி முதல் மார்ச் 31-ந் தேதிவரை) சிறுசேமிப்பு திட்ட வட்டிவிகிதம் குறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், முந்தைய காலாண்டில் அமலில் இருந்த வட்டி விகிதமே நீடிக்கும் என்றும் கூறியுள்ளது.

    எனவே, செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு 8.2 சதவீதம், தேசிய சேமிப்பு பத்திரத்துக்கு 7.7 சதவீதம், கிசான் விகாஸ் பத்திரத்துக்கு 7.5 சதவீதம் என அனைத்துக்கும் பழைய வட்டிவிகிதங்களே நீடிக்கும். இதன்மூலம், கடந்த 4 காலாண்டுகளாக வட்டி விகிதம் மாற்றப்படவில்லை.

    ×