search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயல் அதிகாரி"

    • தமிழகத்தின் 8-ம் படைவீடு என்று முருக பக்தர்களால் வணங்கி வரும் இக்கோவில் கலை அம்சத்துடன் அமைந்துள்ளது
    • ஈரோட்டில் இருந்து கூடுதலாக செயல் அலுவலர் கவனித்து வருகிறார்.

    காங்கயம்:

    காங்கயம் சிவன்மலையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான முருகர் - வள்ளி, தெய்வானை கோவில் உளளது.தமிழகத்தின் 8-ம் படைவீடு என்று முருக பக்தர்களால் வணங்கி வரும் இக்கோவில் கலை அம்சத்துடன் அமைந்துள்ளது.500 படிக்கட்டுகளில் ஏறி கோவிலுக்கு செல்ல வேண்டும்.

    தைப்பூசம்,வைகாசி விசாகம் ,கந்த

    சஷ்டி உள்பட முக்கிய விழா காலங்களில் பக்தர்கள் நேரில் வந்து தரிசனம் செய்கின்றனர். பல லட்சம் ரூபாய் வரை நன்கொடை , பொருள் உபயம் (தங்கம், வெள்ளி ) உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.உண்டியலில் காணிக்கையும் செலுத்தி வருகின்றனர்.தங்க ரதம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.2 முறை மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் கடந்த 1 1/4 வருடமாக பல முறை கோரிக்கை விடுத்தும் சிவன்மலை கோவில் நிர்வாகத்திற்கு என ஒரு செயல் அதிகாரி நியமிக்கப்படவில்லை.

    ஈரோட்டில் இருந்து கூடுதலாக செயல் அலுவலர் கவனித்து வருகிறார் . அவரும் மாதம் 2முறை மட்டுமே சிவன்மலை கோவில் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். .இதனால் பக்தர்கள் ,சமூக ஆர்வலர்கள் ,சேவகர்கள் ,உபய தாரர்கள் மற்றும் கோவிலின் அலுவலர்கள் ,ஊழியர்கள் என பலதரப்பட்டோரும் சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும் கோவிலின் செயல்பாடுகள் ,நடைமுறை தகவல்கள் ஆகியவற்றை அறிய முடியாத நிலையும் நிலவி வருகிறது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து செயல் அலுவலர் நியமிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    ×