search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பன்றிகள் தொல்லை"

    • பன்றிகள் தொல்லை பற்றி இ.இ.நகர் பகுதி மக்கள் செங்கல்பட்டு கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
    • மாநகராட்சி பகுதிக்குட்பட்ட இடங்களில் பன்றிகள் வளர்க்க கூடாது என்று தடை உள்ளது.

    சென்னை பல்லாவரத்தில் இங்கிலீஷ் எலக்ட்ரானிக் நகர் உள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் அந்த நகரில் உள்ளன.

    இங்கிலீஸ் எலக்ட்ரானிக் கம்பெனி என்ற தொழில் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் மனைகள் வாங்கி அங்கு வீடு கட்டி குடியேறினார்கள். இதனால் அந்த பகுதி இங்கிலீஸ் எலக்ட்ரானிக் நகர் என்று பெயர் பெற்றது.

    அந்த நகரின் ஒரு பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. அங்கு அடர்ந்த புதர்களும் உள்ளன. இதை பயன்படுத்தி அங்கு சிலர் பன்றிகளை வளர்த்து வருகிறார்கள். நூற்றுக்கணக்கான பன்றிகள் அங்கு உள்ளன.

    அந்த பன்றிகளால் கடும் இடையூறு ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் பல மாதங்களாக புகார் சொல்லி வருகிறார்கள். பன்றிகள் தொல்லையால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் சொல்கிறார்கள்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு பன்றிகள் தொல்லை பற்றி இ.இ.நகர் பகுதி மக்கள் செங்கல்பட்டு கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பன்றிகள் அங்கு இருந்து அகற்றப்பட்டன.

    ஆனால் கடந்த சில மாதங்களாக மீண்டும் அங்கு பன்றிகள் வந்து விட்டன. கடந்த ஜனவரி மாதம் நிறைய பன்றிகள் உயிரிழந்து துர்நாற்றம் வீசியதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.

    மாநகராட்சி பகுதிக்குட்பட்ட இடங்களில் பன்றிகள் வளர்க்க கூடாது என்று தடை உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பன்றிகளை அகற்ற வேண்டும் என்று இ.இ.நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×