என் மலர்
நீங்கள் தேடியது "குற்றச்சம்பவங்கள்"
- காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டு, இன்று அவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழலில் கொண்டு நிறுத்தியிருக்கிறது.
- வாக்களித்த தமிழக மக்களின் நலனைக் குறித்துச் சிந்திப்பாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ?
தமிழகமெங்கும் மதுவாலும், போதைப் பொருள்களாலும் குற்றச் செயல்கள் பல மடங்கு அதிரித்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநரான, முதல் நிலைக் காவலர் முத்துக்குமார், இன்று டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், கல்லைத் தலையில் போட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழகமெங்கும், மதுவாலும், போதைப் பொருள்களாலும் குற்றச் செயல்கள் பல மடங்கு அதிகரித்து விட்டன. ஆனால் முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருக்கிறார். குற்றங்களைத் தடுக்க முடியாமல் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டு, இன்று அவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழலில் கொண்டு நிறுத்தியிருக்கிறது.
உண்மையில் சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அக்கறை இருந்திருக்குமேயானால், மது விற்பனையை முறைப்படுத்தி இருக்க வேண்டும், போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், தனது கட்சியினரின் வருமானம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதன் விளைவு, தமிழகத்தில் பெருகி வரும் குற்ற செயல்களும், உயிர்ப்பலிகளும்.
இனியாவது தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் நலனைக் குறித்துச் சிந்திப்பாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அலாரம், சிசிடிவி கேமரா ஆகியவை செயல்படவில்லை.
- தமிழகத்தில் கோயில்களின் பாதுகாப்புக்காக ஆண்டுதோறும் ரூ.44 கோடி செலவு செய்யப்படுகிறது.
அவினாசி:
திருப்பூா் மாவட்டம், அவிநாசிலிங்கேஸ்வரா் கோவிலில் அண்மையில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில் முன்னாள் ஐ.ஜி.யும், உலக சிவனடியாா்கள் திருக்கூட்டத்தின் மாநில தலைமை ஆலோசகருமான பொன்மாணிக்கவேல் அவிநாசிலிங்கேஸ்வரா் கோவிலை பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:- அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற திருட்டுச் சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்த அவிநாசி போலீசாருக்கு பாராட்டுகள். இச்சம்பவம் தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா், ஆணையா் ஆகியோா் ஆய்வு செய்திருக்க வேண்டும்.
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அலாரம், சிசிடிவி கேமரா ஆகியவை செயல்படவில்லை. இதை கவனிக்காமல் இருந்த கோயில் இணை ஆணையா், செயல் அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும், இருவருக்கும் குறைந்தபட்சம் 6 மாதம் வரை 50 சதவீத சம்பளம் மட்டுமே வழங்க வேண்டும். இச்சம்பவத்தில் பிடிபட்ட குற்றவாளி உண்மையில் மனநோயாளியா என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கோயில்களின் பாதுகாப்புக்காக ஆண்டுதோறும் ரூ.44 கோடி செலவு செய்யப்படுகிறது. ஆனால், பாதுகாப்பு பணிக்கு உடல் தகுதியில்லாத முதியவா்கள் நியமிக்கப்படுகின்றனா். இவா்கள் தூங்கிவிட்டு சம்பளம் வாங்கிச் செல்கின்றனா். அதேநேரம் கோயில் அா்ச்சகா்கள் மற்றும் மங்கள வாத்தியக்காரா்களுக்கு முறையாக சம்பளமும் வழங்கப்படுவதில்லை. எந்தெந்த கோயிலில் அா்ச்சகா்கள் உள்ளிட்டவா்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளதோ, அந்தக் கோயிலில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும். மேலும், தமிழகத்தில் எந்தவொரு கோயிலிலும் குற்றச் சம்பவங்கள் நடக்கக் கூடாது என்றாா்.