search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெப்போ ரேட்"

    • முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • கடந்த இரண்டு ஆண்டுகளாக சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் கீழே உள்ளது.

    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும். நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

    அந்நிய செலாவணி கையிருப்பு தேவையான அளவு உள்ளது. இந்த நிதியாண்டின் வளர்ச்சியானது 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் இரண்டாம் காலாண்டில் 6.5 சதவீதம், மூன்றாம் காலாண்டில் 6 சதவீதம், நான்காம் காலாண்டில் 5.7 சதவீதம் என ஜிடிபி வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது.

    சில்லறை பணவீக்கமானது, முன்பு மதிப்பிடப்பட்ட 5.2 சதவீதத்திலிருந்து 2024 நிதியாண்டில் 5.1 சதவீதமாகக் குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் கீழே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து இரண்டாவது முறையாக ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

    ×