search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு உதவிபெறும் பள்ளி"

    • அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும், கனடா, இலங்கை ஆகிய நாடுகளிலும் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
    • காமராஜர் பிறந்தநாளான வரும் 15-ம் தேதி திருவள்ளூரில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளில் பலர் காலை உணவை தவிர்த்து சோர்வாக தினமும் பள்ளிக்கு வருவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கண்டார். அதனைத் தொடர்ந்து, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், காலை உணவுத் திட்டத்தை கொண்டுவருவதாக அறிவித்தார்.

    'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' என்ற பெயரிலான இந்த திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

    முதல்கட்டமாக, 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.33 கோடியே 56 லட்சம் செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

    காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் வருகை அதிகரித்ததுடன் அவர்களின் ஊட்டச்சத்தும், கற்றல் திறனும் மேம்பட்டதாக ஆய்வுகள் தெரிவித்தன. மேலும், அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும், கனடா, இலங்கை ஆகிய நாடுகளிலும் அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் கடல் தாண்டியும் பிரபலம் அடைந்த நிலையில், 2023-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்து 992 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் 15 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடையும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து, இந்த திட்டத்தை தமிழக ஊரகப்பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. சட்டசபையிலும் எம்.எல்.ஏ.க்கள் பலர் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

    இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 2 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.600 கோடியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், காலை உணவு திட்ட விரிவாக்கத்தை, மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய காமராஜர் பிறந்த நாளான வரும் 15-ம் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழச்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் காலை 8.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டி.பிரபு சங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள். திருவள்ளூர் மாவட்டம் வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தி.மு.க.வினரும் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • வானவில் மன்றம் கடந்தாண்டு தொடங்கப்பட்டது.
    • அரசுபள்ளி மாணவர்களின் ஈடுபாடு அதிகம் இருந்தது.

    தாராபுரம் :

    அரசு பள்ளிகளில் மாணவர்களின் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்க வானவில் மன்றம் கடந்தாண்டு தொடங்கப்பட்டது. இந்த மன்றத்தின் முக்கிய செயல்பாடாக அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங், கணித கருத்துகளை செயல்வழியில் விளக்க ஸ்டெம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த திட்டத்தின் செயல்பாடுகளை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விளக்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர்.வானவில் மன்றத்தின் நோக்கம் மாணவர்களை சென்றடைந்ததை உறுதி செய்ய, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் அரசுபள்ளி மாணவர்களின் ஈடுபாடு அதிகம் இருந்ததால் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.இதுகுறித்து ஸ்டெம் திட்ட தன்னார்வலர்கள் கூறுகையில், பள்ளிக்கல்வித்துறை இந்தத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தினால் அனைத்து தரப்பு மாணவர்களும் பலனடைவர் என்றனர். 

    ×