search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெபாசிட்"

    • ஜாபர்சாதிக் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதை பொருட்களை கடத்தி பணம் சம்பாதித்து இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
    • பணம் போதை பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த பணமாகவே கருதப்படுகிறது.

    சென்னை:

    டெல்லியில் இருந்து நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சூடோபெட்ரின் என்கிற போதைப் பொருளை கடத்திய வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. அயலக அணி முன்னாள் செயலாளருமான ஜாபர்சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் பிடியில் சிக்கிய ஜாபர்சாதிக் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதை பொருட்களை கடத்தி பணம் சம்பாதித்து இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த நிலையில் ஜாபர்சாதிக் போதை பொருள் கடத்தல் மூலமாக ரூ.40 கோடியை சுருட்டி இருப்பதற்கான ஆதாரங்களை அமலாக்க துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.

    இந்த பணத்தில் ரூ.18 கோடியை ஜாபர்சாதிக் சினிமா மற்றும் ஓட்டல் தொழிலில் முதலீடு செய்துள்ளார். இது தொடர்பான தகவல்களையும் அமலாக்கதுறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். டெல்லியில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஜாபர்சாதிக் ஒரு கிலோ போதைப் பொருளுக்கு ரூ. ஒரு லட்சம் பணத்தை கமிஷனாக பெற்று வந்திருப்பது ஏற்கனவே தெரிய வந்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஜாபர்சாதிக் ஒரே நேரத்தில் மங்கை, இறைவன் மிகப்பெரியவன் உள்பட 4 படங்களை தயாரித்து வந்துள்ளார். இதனால் ரூ.18 கோடி பணத்தையும் தாண்டி சினிமாவில் மேலும் பல கோடிகளை ஜாபர்சாதிக் கொட்டியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

    ஜாபர்சாதிக் தயாரித்து வந்த படங்களை இயக்கிய சினிமா இயக்குனர்களுக்கு எத்தனை கோடி பணம் சம்பளமாக கொடுக்கப்பட்டது? என்பது பற்றிய விவரங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டியுள்ளனர். இதில் சினிமா இயக்குனர்களுக்கு சில கோடிகள் வரையில் குறிப்பிட்ட தொகை பேசப்பட்டு அந்த பணத்தை ஜாபர் சாதிக் கொடுத்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.

    இந்த பணம் போதை பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த பணமாகவே கருதப்படுகிறது.

    போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சினிமா துறையை சேர்ந்தவர்களில் இயக்குனர் அமீர் மட்டுமே விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

    2-வது முறையாக டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அமீரை விசாரணைக்காக அழைத்துள்ளனர். அமீரின் சொத்து விவரங்கள், பண பரிமாற்ற தகவல்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் மேலும் ஒரு இயக்குனரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதை தவிர ஜாபர்சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்டோரிடமும் அமலாக்க துறை அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.

    ஜாபர்சாதிக்கின் வங்கி கணக்கு விவரங்களை அமலாக்க துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் ரூ.21 கோடி பணத்துக்கு உரிய கணக்கு இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பணமும் போதைப் பொருள் கடத்தல் மூலமாக வந்த பணமாகவே இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்த பணத்தை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். ரூ.40 கோடி பணத்தை தவிர மேலும் பல கோடிகளை ஜாபர்சாதிக் சுருட்டியிருப்பதற்கான ஆதாரங்களையும் அமலாக்கதுறை அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள்.

    இதனால் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் மேலும் பல பரபரப்பான புதிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • தேனாம்பேட்டையில் உள்ள மருந்து கடை ஒன்றில் பணிபுரிந்து வருபவர் முகமது இத்ரிஸ்.
    • வங்கி ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாகவே தவறுகள் நடக்கின்றன.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் டிரைவர் ஒருவரின் வங்கி கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடியை தனியார் வங்கி தவறுதலாக செலுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் மருந்து கடை ஊழியர் ஒருவருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அவரது வங்கி கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

    தேனாம்பேட்டையில் உள்ள மருந்து கடை ஒன்றில் பணிபுரிந்து வருபவர் முகமது இத்ரிஸ். கோட்டக் மகேந்திரா வங்கி கிளையில் இவர் கணக்கு வைத்து உள்ளார்.

    இந்த நிலையில் இவரது வங்கி கணக்கில் ரூ.753 கோடி ரூபாய் திடீரென டெபாசிட் ஆகியுள்ளது. இது தொடர்பாக அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

    அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முகமது இத்ரிஸ் இது தொடர்பாக வங்கியில் முறையிட உள்ளார். இவ்வளவு பெரிய தொகை வங்கியில் டெபாசிட் ஆகியிருப்பது தொடர்பாக முகமது இத்ரிஸ் கூறியதாவது:-

    எனது வங்கி கணக்கில் ரூ.753 கோடி பணம் வரவு வைக்கப்பட்டிருப்பதை இன்று காலையில்தான் நான் பார்த்தேன். அது எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. பணம் வந்த சிறிது நேரத்திலேயே, எனது வங்கி கணக்கை முடக்கி வைத்து உள்ளனர்.

    வருமான வரி பிரச்சனை ஏதும் வந்துவிடக்கூடாது என்பதால் வங்கியின் இலவச தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன்.

    ஆனால் இணைப்பு கிடைக்கவில்லை. எனவே வங்கியில் நேரில் சென்று புகார் அளிக்க உள்ளேன். வங்கி ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாகவே இதுபோன்ற தவறுகள் நடக்கின்றன. எனவே அவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோட்டக் மகேந்திரா வங்கியில் இருந்து தஞ்சையில் நேற்று வாடிக்கையாளர் ஒருவரின் வங்கி கணக்கில் ரூ.756 கோடி தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • எஸ்.பி.ஐ வங்கி மட்டுமின்றி அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது.
    • தங்களது வங்கி கணக்கில் எங்கிருந்து யார் பணம் டெபாசிட் செய்தார்கள் என்று யாருக்குமே புரியாமல் குழப்பம் அடைந்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ ஒரு லட்சம் வரை டெபாசிட் ஆனது.

    வங்கிக் கணக்கில் பணம் வந்தது குறித்து அவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. எஸ்.பி.ஐ வங்கி மட்டுமின்றி அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது.

    இதனை கண்ட வங்கி வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

    தங்களது வங்கி கணக்கில் எங்கிருந்து யார் பணம் டெபாசிட் செய்தார்கள் என்று யாருக்குமே புரியாமல் குழப்பம் அடைந்தனர்.

    ஒரு சிலர் உடனடியாக தங்களது வங்கிக் கணக்கில் டெபாசிட்டான பணத்தை ஏடிஎம் கார்டுகள் மூலம் எடுத்தனர். ஒரு சிலர் தங்களது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை தனது மனைவி மற்றும் பிள்ளைகளின் வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்தனர்.

    இந்த செய்தி மாநிலம் முழுவதும் பரவியது. இதனால் மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. எஸ்.எம்.எஸ் வராத வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை சரி பார்த்தனர்.

    இதேபோல் ஆந்திராவில் உள்ள திருப்பதி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொதுமக்கள் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது இந்த சம்பவம் வங்கி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் ஆனது என்பது குறித்த விவரங்களை போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

    • 2000 ரூபாய் நோட்டுகளின் பரிவர்த்தனைகள் வங்கிகளில் குறிப்பிடத்தக்க எழுச்சியை காண முடிகிறது.
    • டெல்லி, அகமதாபாத், கோவை ஆகிய நகரங்களில் ரூ.2000 நோட்டுக்கள் அதிகரித்துள்ளதாக ஐ.ஓ.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.

    சென்னை:

    2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மாதம் அறிவித்தது. கடந்த 23-ந் தேதி முதல் இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி தொடங்கியது. செப்டம்பர் 30-ந் தேதி வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    தொடக்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி குறைவாகவே இருந்தது. தற்போது அதிக அளவில் டெபாசிட் செய்யப்படுகின்றன. 2000 ரூபாய் நோட்டுகளின் பரிவர்த்தனைகள் வங்கிகளில் குறிப்பிடத்தக்க எழுச்சியை காண முடிகிறது.

    வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிக அளவில் பங்களிப்பு இருந்தாலும் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் ரூ.2000 நோட்டுக்களை மாற்றி வருகின்றனர்.

    கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 2000 ரூபாய் நோட்டு பரிவர்தனைகள் அதிகரித்துள்ளதாக தனியார் வங்கி ஒன்று தெரிவித்துள்ளது.

    மே 23 முதல் ஜூன் 5 வரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் டெபாசிட் மற்றும் பரிமாற்றம் மூலம் ரூ.1,950 கோடி மதிப்பிலான 97 லட்சம் யூனிட் 2,000 நோட்டுகளை பரிவர்த்தனை செய்துள்ளது.

    இதில் சுமார் 78 லட்சம் பிங்க் நோட்டுகள் ரூ.1,600 கோடிக்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. டெல்லி, அகமதாபாத், கோவை ஆகிய நகரங்களில் ரூ.2000 நோட்டுக்கள் அதிகரித்துள்ளதாக ஐ.ஓ.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.

    ×