என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரெளபதி முர்மு"

    • தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.
    • இவர் தற்போது குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவரி, நான் ஈ, கத்தி, தங்கமகன், தெறி, 24 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வரும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார்.


    வருண் தவான் -திரெளபதி முர்மு- சமந்தா

    இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சமந்தா மீண்டும் இணைந்தார். இதையடுத்து 'குஷி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சமந்தா நடித்த சிட்டாடல் வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.


    சிட்டாடல் படக்குழுவினர்

    இந்நிலையில், நடிகை சமந்தா செர்பியாவில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்துள்ளார். இவருடன் பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் சிட்டாடல் படக்குழுவினர் இருந்தனர். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் வருண் தவான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



    • தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தீர்ப்பை நடைமுறைப்படுத்த குடியரசுத் தலைவர் அனுமதிக்க கூடாது
    • தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் பின்னணியில் உள்ள அரசின் நோக்கத்தை சந்தேகிப்பது மிக மோசமானது

    பாரத ஸ்டேட் வங்கியின் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வலியுறுத்துமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா கடிதம் எழுதியுள்ளார்.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தீர்ப்பை நடைமுறைப்படுத்த குடியரசுத் தலைவர் அனுமதிக்க கூடாது எனவும், வழக்கு மறுபரிசீலனை செய்யப்படும் வரை தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தக் கோரி கடிதம் மூலம் ஆதிஷ் அகர்வாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அக்கடிதத்தில், "இந்திய நாடாளுமன்றம், அரசியல் கட்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு முழுமையான நீதியை உறுதி செய்ய தேர்தல் பத்திரங்கள் வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும்.

    அரசியலமைப்பு சட்டத்திற்கு முட்டுக்கட்டையை உருவாக்கும் வகையிலும், நாடாளுமன்றத்தின் மகத்துவத்தை குலைக்கும் வகையிலும் உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கக் கூடாது. 

    தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் பின்னணியில் உள்ள அரசின் நோக்கத்தை சந்தேகிப்பது மிக மோசமானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இது தொடர்பான வீடியோவை ஜனாதிபதி அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
    • விளையாட்டின் மீதுள்ள தனது ஆர்வத்தை ஜனாதிபதி திரெளபதி முர்மு வெளிப்படுத்தியுள்ளார்.

    ராஷ்டிரபதி பவனில் உள்ள பேட்மிண்டன் மைதானத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேட்மிண்டன் விளையாடியுள்ளார்.

    இது தொடர்பான வீடியோவை ஜனாதிபதி அலுவலகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    இந்த வீடியோவின் மூலம் விளையாட்டின் மீதுள்ள தனது ஆர்வத்தை முதல் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளிப்படுத்தியுள்ளார்.

    • சச்சின் மனைவி மற்றும் மகளுடன் ஜனாதிபதி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
    • ஜனாதிபதிக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவரது கையொப்பமிட்ட டெஸ்ட் ஜெர்சியை வழங்கினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் இன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை மரியாதை நிமர்த்தமாக குடும்பத்துடன் சந்தித்தார். சச்சின் மற்றும் அவரது மனைவி, மகள் சாரா ஆகியோர் ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    மேலும் ஜனாதிபதிக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவரது கையொப்பமிட்ட டெஸ்ட் ஜெர்சியை வழங்கினார். பின்னர் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

    சச்சின் டெண்டுல்கர், இந்த மாதம் இறுதியில் நடக்கவுள்ள முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×