என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக அழகிப் போட்டி"

    • பெரினி, கொம்மு கோயா, லம்படா மற்றும் ஒக்கு டோலு உள்ளிட்ட தெலுங்கானா பாரம்பரிய நடனங்கள் இடம்பெற்றன.
    • 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் வந்துள்ளனர்.

    72 ஆவது உலக அழகிப் போட்டி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு கோலாகலமாக தொடங்கியது.

    தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மிஸ் வேர்ல்ட் லிமிடெட் தலைவர் ஜூலியா மோர்லி சிபிஇ மற்றும் தற்போதைய மிஸ் வேர்ல்ட் கிறிஸ்டினா பிஸ்கோவா ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்வில், பெரினி, கொம்மு கோயா, லம்படா மற்றும் ஒக்கு டோலு உள்ளிட்ட பாரம்பரிய நாட்டுப்புற மற்றும் பழங்குடி நடன நிகழ்ச்சிகள் மூலம் தெலுங்கானாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் வெளிப்பட்டது.

    உலகெங்கிலும் உள்ள 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை வெல்வதற்காக இந்தப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பாக மிஸ் இந்தியா நந்தினி குப்தா பங்கேற்கிறார்.

    தொடக்க நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போட்டியாளர்களும் விதவிதமான உடைகளில் ஒய்யாரமாக மேடையில் நடைபோட்டனர். 'நோக்கத்துடன் கூடிய அழகு' என்ற கருப்பொருளுடன் இவ்வாண்டுப் போட்டி நடக்கிறது.

    மிஸ் வேர்ல்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான ஜூலியா மோர்லி, "பாரம்பரியம் புதுமையுடன் அழகாகப் பின்னிப் பிணைந்த இடமான தெலுங்கானாவிற்கு மிஸ் வேர்ல்ட் விழாவைக் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டு போட்டி உலக ஒற்றுமை, அமைதி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் உணர்வைப் பிரதிபலிக்கிறது' என்று கூறினார்.

    மே 31 வரை ஒரு மாத காலத்துக்கு நடைபெறும் இந்த விழா, பல்வேறு கலாச்சார, ஆன்மீக மற்றும் தொண்டு நடவடிக்கைகளை உள்ளடக்கியது. வரவிருக்கும் பயணத்திட்டத்தில் மே 12 அன்று நாகார்ஜுனசாகரில் உள்ள புனித புத்தவனத்திற்கு வருகை தருவதும், அதைத் தொடர்ந்து மே 13 அன்று சார்மினார் மற்றும் லாட் பஜாரில் பாரம்பரிய நடைப்பயணம் நடத்துவதும் இடம்பெறும்.

    போட்டியாளர்கள் வரலாற்று சிறப்புமிக்க சௌமஹல்லா அரண்மனையில் நடைபெறும் அரச வரவேற்பு விருந்திலும், இசை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வார்கள். 

    • 1996-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டி.
    • உலக அழகிப் போட்டி வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது.

    இந்தியாவில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்தியாவில் கடைசியாக 1996ம் ஆண்டில் உலக அழகிப்போட்டி நடைபெற்றது. அதன் பிறகு இந்தியாவில் உலக அழகிப் போட்டி நடைபெறவில்லை.

    இந்நிலையில், உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது.

    இதுகுறித்து மிஸ் வேர்ல்ட் உலக அழகிப்போட்டி அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி கூறுகையில், "71-வது உலக அழகிப்போட்டியின் இறுதிப்போட்டி இந்தியாவில் நடக்க உள்ளது.

    ஒரு மாதம் நடைபெறும் இந்தப் போட்டியில் 130 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர். உலக அழகிப் போட்டி வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது" என்றார்.

    • பல்வேறு நாடுகளை சேர்ந்த 117 பேர் போட்டியில் பங்கேற்றனர்.
    • இந்தியாவை சேர்ந்த சினி ஷெட்டி உள்பட 14 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

    இந்தியாவில் நடைபெற்ற 71வது உலக அழகிப் போட்டியில் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா (25) என்பவர் மகுடம் சூடினார்.

    இந்த போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 117 பேர் போட்டியில் பங்கேற்றனர்.

    இந்தியாவை சேர்ந்த சினி ஷெட்டி உள்பட 14 பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

    இந்நிலையில், செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகி பட்டத்தை வென்றார்.

    ×