என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் லஞ்சம்"

    • சாணார்பட்டி அருகில் உள்ள மடூர் புகையிலைப்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது.
    • கடையின் ஊழியரை சஸ்பெண்டு செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகில் உள்ள மடூர் புகையிலைப்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மதுபானம் வாங்க சென்ற குடிமகன் கூடுதலாக ரூ.10 கேட்டதால் தன்னிடம் பணம் இல்லை என்றும், நாளை வரும்போது தருகிறேன் என கூறி உள்ளார்.

    ஆனால் ரூ.130 மதுபான பாட்டிலுக்கு ரூ.140 கொடுத்தால்தான் சரக்கு கிடைக்கும் என்றும், இல்லையெனில் தர முடியாது எனவும் டாஸ்மாக் ஊழியர் கூறினார். எதற்காக ரூ.10 கூடுதலாக கேட்கிறாய் என கேட்டதற்கு ஒரு சில அதிகாரிகளின் பதவிகளை கூறி அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. அதற்காகத்தான் நாங்கள் ரூ.10 கூடுதலாக வாங்குகிறோம்.

    அனைத்து அதிகாரிகளுமே பணம் வாங்குகின்றனர். யார்? யார்? பணம் வாங்குகிறார்கள் என்ற விவரத்தை நான் உனக்கு விளக்கமாக வெளியில் வந்து சொல்கிறேன் என கூறினார். அவர் பேசிய இந்த உரையாடல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட கடையின் ஊழியரை சஸ்பெண்டு செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    ×