என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தோட்டத்துப்பாளையம் சாலை"
- தோட்டத்துபாளையம் பகுதி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
- வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருப்பூர் :
திருப்பூா் தோட்டத்துப்பளையத்தில் சாலையை சீரமைக்கக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினா் பி.மகாலிங்கம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அவா் கூறியதாவது: - திருப்பூா் மாநகராட்சி, தோட்டத்துபாளையம் பகுதி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இச்சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இது குறித்து மாநகராட்சியிடம் பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தோட்டத்துப்பாளையம் சாலை, வாவிபாளையம் முதல் பூலுவபட்டி வரை உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும், சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்ற முறையான வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்றனா்.
ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.முத்துகண்ணன், ஒன்றியச் செயலாளா் ஆா்.காளியப்பன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆ.சிகாமணி, ஆா்.மைதிலி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.