என் மலர்
நீங்கள் தேடியது "நகர்மன்ற நல வாழ்வு மையம்"
- புதிய நகர்மன்ற நல வாழ்வு மையத்தை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
- அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை உழவர் சந்தை பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நகர் மன்ற நல வாழ்வு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் நல வாழ்வு மையத்தில் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், எம்.எல்.ஏ. செந்தில்நாதன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி மையத்தினை பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் வட்ட சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார், டாக்டர்கள் கலாதேவி, அபிராமி, கிருஷ்ணவேணி, வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி, மற்றும் கவுன்சிலர்கள் ராஜா, அயூப்கான், துபாய்காந்தி, ஜெயகாந்தன், ராமதாஸ், ராபர்ட், விஜயகுமார், வீனஸ்ராமநாதன் மற்றும் சுகாராத ஆய்வாளர்கள். அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பலர் கலந்து கொண்டனர்.