என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குண்டுவீச்சு"
- இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர்கள், ஹரிஹரனின் வீட்டின் மீது சரமாரியாக வெடிகுண்டுகளை வீசியிருக்கின்றனர்.
- வெடிகுண்டு கண்டறியும் பிரிவினரும் வந்து சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு கடந்தமாதம் 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. வடகரை தொகுதியில் கேரள மாநில சுகாதாரத்துறை முன்னாள் மந்திரி சைலஜா இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் களமிறக்கப்பட்டார்.
அவருடன் அந்த தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரபுல் கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி சார்பில் ஷாபி பரம்பில் என மொத்தம் 10 பேர் போட்டியிட்டனர். தேர்தல் பிரசாரத்தின் போது சமூகவலைதளங்களில் சைலஜாவின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ வெளியானது.
அதனை ஐக்கிய ஜனநாயக முன்னணி தான் வெளியிட்டது என்று இடதுசாரி ஜனநாயக முன்னணி குற்றம் சாட்டியது. ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அந்த கட்சியே இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக ஐக்கிய ஜனநாயக முன்னணி கருத்து தெரிவித்தது.
இதற்கிடையே மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தங்களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் சார்பில் வடகராவில் கூட்டம் நடத்தப்பட்டது.
அந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் ஹரிஹரன், முன்னாள் மந்திரி சைலஜா மற்றும் நடிகை மஞ்சுவாரியர் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு ஆபாசமான கருத்துக்களை தெரிவித்தார்.
கேரள சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் சதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்த கூட்டத்தில் ஹரிஹரன் பேசிய இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவியது. அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவரது பேச்சு கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் முன்னாள் மந்திரி சைலஜா பற்றி ஆபாசமாக பேசிய ஹரிஹரன் மீது பெண்களை அவமானப்படுத்துதல் (ஐபிசி 509), பாலியல் துன்புறுத்தல் (ஐபிசி 354 ஏ) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள மாநில காவல்துறை தலைவரிடம் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு மாநில செயலாளர் சனோஜ் புகார் அளித்தார்.
மேலும் கோழிக்கோடு காவல் கண்காணிப்பாளரிடம், இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு வடகரா தொகுதி செயலாளர் விகேஷ் என்பவரும் புகார் கூறியிருக்கிறார். அவர்களது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹரிஹரனின் பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால் தனது முகநூல் பக்கத்தில் அவர் வருத்தம் தெரிரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் 'வடகரையில் நான் பேசிய உரையில் தகாத கருத்தை தெரிவித்ததாக நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனது கவனத்துக்கு கொண்டு வந்தனர். அந்த கருத்தை தெரிவித்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கோழிக்கோட்டில் உள்ள ஹரிஹரனின் வீட்டில் மர்ம நபர்கள் நேற்று இரவு வெடிகுண்டுகளை வீசினர். இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர்கள், ஹரிஹரனின் வீட்டின் மீது சரமாரியாக வெடிகுண்டுகளை வீசியிருக்கின்றனர். ஆனால் அந்த குண்டுகள் வீட்டின் சுற்றுச்சுவரில் விழுந்து வெடித்தன.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வெடிகுண்டு கண்டறியும் பிரிவினரும் வந்து சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்தனர்.
முன்னாள் மந்திரி சைலஜா மற்றும் நடிகை மஞ்சு வாரியர் பற்றி ஆபாசமான கருத்துக்களை தெரிவித்த நிலையில, புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி தலைவரின் வீட்டில் வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- காகோவ்கா நீர்மின் அணையின் உடைப்பு மக்களின் துயரத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
- 7,00,000 மக்களுக்கு முறையான குடிநீரின் பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருத்திருக்கிறது
உக்ரைனின் காகோவ்கா அணை இடிந்து விழுவதற்கு முன்பு இருந்ததை விட, உக்ரைனில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று ஐ.நா. சபையின் உயர் உதவி அதிகாரி எச்சரித்துள்ளார்.
ஐ.நா. சபையின் மனிதாபிமான உதவிகளுக்கான ஒருங்கிணைப்பாளராக பணியாற்றும், துணைச் செயலாளர், ஜெனரல் மார்ட்டின் கிரிஃபித்ஸ், ஒரு வருடமாக நடைபெற்று வரும் ரஷிய-உக்ரைன் போரின் விளைவாக குண்டு வீசி தகர்க்கப்பட்ட காகோவ்கா அணையிலிருந்து வெளியேறும் வெள்ளத்தினால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "ஒரு அசாதாரண நிலையாக 7,00,000 பேருக்கு உடனடியாக குடிநீர் தேவைப்படுகிறது. உக்ரைன் போன்ற உலகின் மிக முக்கியமான உணவு வழங்கும் பிராந்தியத்தில் பெரிய அளவு வெள்ளப்பெருக்கு ஏற்படுவது, வரும் காலங்களில் குறைந்தளவு தானிய ஏற்றுமதிக்கே வழிவகுக்கும். இது தவிர்க்க முடியாதது. இதனால், உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலையும் உயரலாம். மேலும் பல லட்சம் மக்களுக்கு அவர்களின் தேவைக்கும் குறைவான அளவு உணவு மட்டுமே கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்" எனவும் தெரிவித்தார்.
அசோசியேட்டட் பிரஸ்ஸிற்கு பேட்டியளித்த அவர், "இது ஒரு தொடரப்போகும் பெரும் பிரச்சனை. ஆனால், இப்பொழுது வெளிப்படுவது (வெள்ளப்பெருக்கு), ஒரு செயலின் (குண்டு வீச்சு) விளைவுகளினால் ஏற்படும் பாதிப்பின் தொடக்கம் மட்டுமே" என கூறினார்.
புதன்கிழமையன்று காகோவ்கா நீர்மின் அணை உடைந்ததும், அதனைத் தொடர்ந்து நீர்த்தேக்கத்திலிருந்து நீர் டினிப்ரோ நதியில் முழுமையாக வெளியேற்றப்பட்டதும், ஏற்கனெவே பீரங்கி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் ஒரு வருடத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு பிராந்தியத்தின் துயரத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
டினிப்ரோ நதியின் மேற்குக் கரை பகுதியை உக்ரைன் தன்னகத்தே கொண்டுள்ளது. அதே சமயம், ரஷிய துருப்புகள் எளிதில் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய தாழ்வான கிழக்குப் பகுதியைக் கட்டுப்படுத்துகின்றன. அணையும் நீர்த்தேக்கமும் தெற்கு உக்ரைனின் குடிநீருக்கும் நீர்ப்பாசனத்திற்கும் அத்தியாவசியமானது. இந்தப் பகுதி கெர்ஸ்ன் பிராந்தியத்திலுள்ளது. இந்த இடத்தை செப்டம்பர் மாதம் ரஷியா சட்டவிரோதமாக ஒரு வருடமாக ஆக்கிரமித்துள்ளது.
உக்ரேனிய உதவிக் குழுக்கள் மூலம் மட்டுமே ஐ.நா. சபை உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள வெள்ளம் பாதித்த பகுதிகளில் 30,000 மக்களை தேடி சென்றுள்ளதாகவும் ஆனால், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கும் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளை அடைய ரஷியா இதுவரை அனுமதிக்கவில்லை, எனவும் கிரிஃபித்ஸ் கூறினார்.
மேலும் இது சம்பந்தமாக கூறிய கிரிஃபித்ஸ், புதன்கிழமையன்று ரஷியாவின் ஐ.நா. தூதரான வாசிலி நெபென்சியாவை தாம் சந்தித்ததாகவும், உக்ரைனில் உள்ள ஐ.நா. குழுக்கள் அந்த பகுதிகளில் நேரிடையாக சென்று அங்குள்ள உக்ரைன் மக்களுக்கு உதவியும், ஆதரவும் தர அனுமதிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும், இது நடக்கும் என தாம் நம்புவதாகவும், அவர் கூறினார்.
"உயிரைக் காப்பாற்றுவதற்கு அவசர கால நடவடிக்கை அத்தியாவசியமானது. அதன் பின்னணியில், உக்ரைன் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும், ரஷியாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும் 7,00,000 மக்களுக்கு முறையான குடிநீரின் பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருத்திருக்கிறது" என்று அவர் கூறினார்.
முக்கிய விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு அணையிலிருந்து விநியோகிக்கப்பட்ட குளிர்ச்சியான நீரை தற்பொழுது தொடர்ந்து வழங்குவதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
மேலும், "போரின்போது நிலத்தில் பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளுடன் கூடிய பகுதிகளிலும் வெள்ள நீர் வேகமாக பாய்ந்துள்ளது. அந்த கண்ணி வெடிகள் மக்கள் சற்றும் எதிர்பார்க்காத இடங்களில் மிதந்து வரலாம்," எனவும் கிரிஃபித்ஸ் குறிப்பிட்டார்.
"இது ஒரு தொடர் சிக்கல். மக்கள் இன்று உயிர் வாழ வழி செய்வதில் தொடங்கி, எதிர்காலத்தில் அவர்களுக்கு நம்பிக்கையூட்டவும் ஏதேனும் செய்ய வேண்டும்" என கூறினார்.
கிரிஃபித்ஸ் கூறுகையில், "அணை உடைப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பரந்த அளவிலான விளைவுகளின் காரணமாக, 'தவிர்க்க முடியாத காரணங்களால்', மேலும் அதிக நிதி உதவி வேண்டி ஐ.நா. ஒரு சிறப்பு கோரிக்கை வைக்க வேண்டியுள்ளது. ஆனால், அந்த முறையீட்டை கோரி அறிவிப்பதற்கு முன்பு பொருளாதார, சுகாதார, மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளைப் பார்க்க சில வாரங்கள் காத்திருக்க விரும்புவதாக அவர் கூறினார்.
"கருங்கடல் தானிய முன்முயற்சியின்" விரிவாக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக, தானும் ஐ. நா. வர்த்தகத் தலைவர் ரெபெக்கா கிரின்ஸ்பானும் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கிரிஃபித்ஸ் கூறினார். துருக்கியும், ஐ.நா.வும் கடந்த ஜூலையில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி உக்ரைனில் தானிய ஏற்றுமதிக்காக மூன்று, "கருங்கடல் துறைமுகங்களை" திறக்கின்றன்.
அந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, ஒரு குறிப்பாணையை ரஷ்யாவும் ஐ.நா.வும் கையெழுத்திட்டது. இது ரஷியாவின் உணவு மற்றும் உரக் கப்பல்கள் அனுப்புவதில் உள்ள தடைகளை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டது.
வோல்கா ஆற்றில் உள்ள ரஷிய துறைமுகமான டோக்லியாட்டியிலிருந்து கருங்கடலுக்கு செல்லும் குழாய் திட்டத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்பதே ரஷியாவின் முக்கிய கோரிக்கையாகும். இந்த தடம் உக்ரைன் மீதான ரஷியாவின் பிப்ரவரி 24, 2022ல் படையெடுப்பிற்கு பிறகு மூடப்பட்டது. உரத்தின் முக்கிய மூலப்பொருளான அமோனியா இந்த குழாய் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது.
"உலக உணவு பாதுகாப்புக்கு அம்மோனியா அத்தியாவசியப் பொருள். அந்த குழாய் வழியை திறந்து கருங்கடலின் குறுக்கே அமோனியாவை உலகத்தின் தெற்கு பகுதிக்கு வழங்குவதே நம் அனைவருக்கும் முக்கிய கடமை," என்று கிரிஃபித்ஸ் கூறினார்.
செவ்வாயன்று ஷெல் தாக்குதல்கள் நடந்ததாகவும், அதனால் அந்த குழாயில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வந்ததாகவும், ஆனால் குழாய்த்திட்டம் போர்ப்பகுதியின் நடுவில் உள்ள காரணத்தால், ஐ.நா.வால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கிரிஃபித்ஸ் கூறினார். மேலும், அந்த பழுது எவ்வளவு விரைவாக சரி செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக சரி செய்யப்பட வேண்டும் என்று தாங்கள் நினைப்பதாகவும், அது மிக மோசமான அளவில் சேதமடைந்திருக்காது என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்