என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குழந்தைத் தொழிலாளர்கள்"
- இந்தியாவில் குழந்தை தொழிலாளர் தடை சட்டம் ஏற்கனவே அமலில் இருக்கிறது.
- உடல் ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.
கொத்தடிமைகளாக இருந்து மீண்டு தங்கள் உழைப்பால், சாதனையால் கெத்து காட்டும் தேவி-துர்கா சகோதரிகள்
சுகத்தையும், சந்தோசத்தையும் மட்டுமே சுமக்க வேண்டிய பருவம் குழந்தை பருவம். அப்படிப்பட்ட பருவத்தை கஷ்டத்தை சுமக்க வைக்கும் பருவமாக மாற்றுவது வேதனையானது.
தோளில் புத்தக பையும், முகத்தில் புன்னகையுமாக துள்ளித்திரிய வேண்டிய பருவத்தில் அவர்களை தொழிலாளர்களாக்கி கல், மண் சுமப்பது முதல் கடினமான பல வேலைகளை செய்யும் தொழிலாளர்களாக மாற்றுவதை ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் குழந்தை தொழிலாளர்கள் எண்ணக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருப்பதாக ஐ.நா. சபையின் யுனிசெப் நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் குழந்தை தொழிலாளர் தடை சட்டம் ஏற்கனவே அமலில் இருக்கிறது. ஆனாலும் குடும்ப வறுமை காரணமாக குழந்தை தொழிலாளர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
2021-22 கால கட்டத்தில் தமிழ்நாட்டில் 2,586 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டார்கள். அதே நேரம் 28 சதவீதமாக இருந்த குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை கொரோனாவுக்கு பிறகு 79 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.
இவர்களுக்கு கடினமான பணிகளை கொடுப்பதால் வளர் இளம் பருவம் முற்றிலுமாக சிதைந்து போகிறது. உடல் ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.
மண்ணுக்கு மரம் பாரமா.... பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா...? என்று பெருமையுடன் கூறிக் கொண்டாலும் குடும்பத்தின் மொத்த பாரத்தையும் சுமக்கும் கட்டாயத்துக்கு குழந்தைகளை ஆக்கி விடுகிறார்கள்.
எதுவும் புரியாத அந்த வயதில் வருமானத்துக்காக, வரும் துயரத்தை உணராமல் தொழிலாளர்களாக்கி விடுகிறார்கள்.
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அந்த குழந்தைகள் அனுபவிக்க வேண்டிய ஆசைகள், கனவுகள் அனைத்தும் சிதைக்கப்படுகின்றன.
குழந்தை தொழிலாளர்கள் நடத்தப்படும் விதமும், அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும் வலி நிறைந்தது. குறைந்த கூலி கொடுத்து நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என்ற உணர்வுடன்தான் தொழில் நடத்துபவர்கள் அவர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்.
இந்த மாதிரி வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களும் சரி, வேலைக்கு அமர்த்துபவர்களும் சரி அந்த குழந்தைகளின் விருப்பு வெறுப்பை பற்றி யோசிப்பது கிடையாது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமான இன்று இருளர் சமூகத்தைசேர்ந்த இளம் பெண்களான தேவி (23), துர்கா (25) என்ற சகோதரிகள் இருவரும் மீட்கப்படும் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதற்கு காரணம் இவர்களும் கொத்தடிமைத் தொழிலாளர்களாக இருந்து மீண்டவர்கள். தாங்கள் அனுபவித்த வேதனைகளையும், கஷ்டங்களையும் மற்ற குழந்தைகளும் அனுபவிக்க கூடாது என்ற வைராக்கியத்துடன் பணியாற்றுகிறார்கள்.
இருளர் சமூகத்தில் பிறந்து அடிமைத் தொழிலாளர்களாக இருள் சூழ்ந்த வாழ்க்கை வாழ்ந்ததையும் மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டார்கள்.
எங்கள் இருளர் சமூகத்தில் கல்வி அறிவு அவ்வளவாக கிடையாது. நாங்கள் பெற்றோருக்கு மொத்தம் உள்ள 5 சகோதரர்களில் நாங்கள்தான் கடைசி பிள்ளைகள். எங்கள் சமூகத்தில் அவ்வளவாக யாரையும் பள்ளிக்கு அனுப்பமாட்டார்கள்.
அதே போல்தான் சிறு வயதிலேயே எங்களையும் திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் ரைஸ்மில் வேலையில் ஈடுபட வைத்தார்கள். அந்த மில்லில் வேலைக்கு கொத்தடிமை தொழிலாளர்களாக அமர்த்தப்பட்டிருந்தோம்.
எங்கள் தாத்தா 20 ஆயிரம் ரூபாயை அந்த மில் உரிமையாளரிடம் முன் பணமாக வாங்கியிருக்கிறார். தனது மகன் மாரியின் திருமணத்துக்காக வாங்கிய அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியாததால் வேலை செய்து கழித்து கொள்வதாக சொல்லி வேலையில் சேர்ந்தோம். திருமணம் முடிந்த மாரி மற்றும் அவரது மனைவி மல்லிகாவும் அதே மில்லில் வேலைக்கு சேர்ந்தார்கள்.
அந்த மில்லில் இரவில் நெல் அவிப்பார்கள். பகலில் அதை உலர வைத்து அள்ளி மூட்டை கட்ட வேண்டும். அதிகாலை 3 மணிக்கெல்லாம் மில் உரிமையாளர் வந்து எங்களை எழுப்புவார். ஏற்கனவே இரவில் நீண்ட நேரம் வேலை பார்த்த களைப்பால் தூக்கம் தூக்கமாக வரும். தூங்கி வழிந்தாலும் அடிப்பார்கள். அந்த அடியை வாங்கிக் கொண்டு வலியோடு வேலை செய்ய ஓடுவோம்.
பல ஆண்டுகள் அங்கேயே அடைத்து வைக்கப்பட்டு இருந்தோம். ஒரு தம்பதி அவர்களது சின்ன குழந்தை மற்றும் எங்களை நெல் ஊற வைத்த தொட்டியை கழுவ வைப்பார்கள். சரியாக கழுவவில்லை என்றாலும் முதலாளி அடிப்பார்.
எத்தனையோ நாட்கள் வலி தாங்க முடியாமல் அழுதிருக்கிறேன். அந்த நெல் ஊற வைத்த தொட்டிக்குள் ஒருமுறை நான் தவறி விழுந்து காப்பாற்றப்பட்டதாகவும் என் அம்மா கூறியிருக்கிறார்.
இரவு பகல் பாராமல் வேலை பார்ப்போம். சரியாக தூங்க முடியாது. தூங்குவதற்கு விரிப்பு கூட கிடையாது. தரையில்தான் படுத்து தூங்க வேண்டும். ஒருவேளை சாப்பாடு கூட வாய்க்கு ருசியாக கிடைக்காது. பெரும்பாலும் பழைய கஞ்சிதான் தருவார்கள்.
திடீரென ஒருநாள் எனது தாத்தா இறந்து போனார். அவரது இறுதிச் சடங்குக்கு கூட எங்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.
அந்த மில் அருகிலேயே உடலை அடக்கம் செய்தார்கள். அப்போதும் எங்களை தப்பி சென்று விடாமல் பார்த்து கொள்வதற்காக மில்லின் கணக்காளர் எங்களோடு நின்று கொண்டார்.
அந்த மில்லில் இருந்து எப்படியாவது விடுதலையாக வேண்டும் என்று நினைத்தாலும் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது ஒரு நாள் எனது சகோதரர் ரகுபதியும், மாமாவும் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்து கொண்ருந்தார்கள்.
அப்போது தண்ணீரில் மூழ்கி மாமா இறந்து போனார். அவரது உடலை ஊருக்கு கொண்டு செல்ல உரிமையாளருடன் பெரும் போராட்டமே நடத்தினோம். ஊருக்கு சென்ற பிறகு திரும்பி வேலைக்கு செல்ல மறுத்தேன். இதனால் எங்களை மட்டும் ஊரில் விட்டு விட்டு அம்மாவும், அப்பாவும் மீண்டும் வேலைக்கு சென்று விட்டார்கள்.
தொடர்ந்து அங்கு நடந்த சித்ரவதைகளை தங்க முடியாத எனது பெற்றோர் ஒரு பொது தொலைபேசியில் இருந்து போன் மூலம் உதவி கேட்டுள்ளார். அந்த தகவல் அடிப்படையில் அரசு அதிகாரிகள் அந்த மில்லுக்கு வந்து அடிமைப்பட்டு கிடந்த அனைவரையும் மீட்டனர் என்று தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்தார்கள்.
வெளியே வந்ததும் எல்லோரும் படிக்க ஆசைப்பட்டுள்ளார்கள். ஆனால் தேவியின் அண்ணன்கள் சின்னராசு, ரகுபதி அக்காள் நாகம்மாள் ஆகியோர் வயது அதிகமாகி விட்டதால் பள்ளியில் சேர்ந்து படிக்க முடியாமல் ஆகி விட்டது.
அந்த நேரத்தில் தந்தையும் குடும்பத்தை விட்டு பிரிந்து விட்டதால் குடும்பத்திற்காக போராட வேண்டியிருந்துள்ளது. அந்த சூழ்நிலையிலும் கஷ்டப்பட்டு துர்கா 12-வது வகுப்பு வரை படித்துள்ளார்.
அதன் பிறகு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து தனது தங்கை தேவியை நர்சிங் படிக்க வைத்துள்ளார். நர்சிங் படித்துள்ள தேவிக்கு அரசு ஆஸ்பத்திரியில் வேலைக்கு சேர்ந்து ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசை. அந்த ஆசை நிறைவேறுமா? என்ற கனவோடு காத்திருக்கிறார்.
- குழந்தைத் தொழிலாளர் முறையானது மனித உரிமை மீறல் என்றும் அதை ஒழிக்க வேண்டும்.
- குழந்தைத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
'குழந்தைத் தொழிலாளர் முறையானது மனித உரிமை மீறல் என்றும் அதை ஒழிக்க வேண்டும்' என்றும்; தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றாக ஒழிப்பதற்கும் மாநிலத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைப்பதற்கும், அவர்களுக்குரிய பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்