search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்களை வரவேற்ற தருமபுரி எம்.எல்.ஏ."

    • பள்ளி நேரத்துக்கு முன்பாகவே முதல் நாள் வகுப்பு என்பதால் ஆர்வத்துடன் பள்ளிக்கு மாணவர்கள் வந்தனர்.
    • அரசு பள்ளிக்கு வரும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

    தருமபுரி,

    தமிழகம் முழுவதும் 6-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

    கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு மற்றும் புதிய மாணவர் சேர்க்கை உள்ளிட்டவை நடைபெற்ற நிலையில் இன்று தனியார் மற்றும் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டன.

    மாணவ, மாணவிகள் இன்று காலை நேரத்திலேயே பள்ளி நேரத்துக்கு முன்பாகவே முதல் நாள் வகுப்பு என்பதால் ஆர்வத்துடன் பள்ளிக்கு மாணவர்கள் வந்தனர்.

    நல்லம்பள்ளி வட்டாரத்தில் உள்ள ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு இப்பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து இலவசமாக நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.

    இந்த அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. தற்போது வரை 1100 மாணவ மாணவிகள் இப்பள்ளியில் உள்ளனர்.

    இப்பகுதி முழுவதும் உள்ள சுற்று வட்டார பகுதிகள் பெரும்பாலும் கிராம பகுதிகளாகவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கிராமப் பகுதியில் உள்ள மாணவர்கள் அதிக அளவில் அரசு பள்ளிகளை நாடி வருவதும் அதே போல் தேர்ச்சி விகிதங்களும் அதிகரித்து வருகின்றன.

    இதன் காரணமாக அரசு பள்ளிக்கு வரும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். கல்வி தரமும் தேர்ச்சியும் அரசு பள்ளியில் அதிக அளவில் உள்ளது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்துக்கள் கூறி வரவேற்றார்.

    ×