என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போபால்"

    • தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் 15 வாகனங்களை ஈடுபடுத்தி உள்ளனர்.
    • மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசி ஏற்பாடு.

    மத்தியப் பிரதேச மாநில தலைநகரான போபாலில் உள்ள சத்புரா பவன் என்ற கட்டிடம் அரசின் பல்வேறு துறைகளுக்கு சொந்தமானது.

    இந்த அரசு கட்டிடத்தில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சத்புரா பவனின் மூன்றாவது மாடியில் இருந்து ஆறாவது மாடிக்கும் தீ பரவியது.

    இதையடுத்து, ஊழியர்கள், அலுவலர்கள் உடனடியாக கட்டிடத்தில் இருந்து வெளியேறினர். இதனால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

    கட்டிடத்தில் இருந்த பர்னிச்சர் மற்றும் ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் 15 வாகனங்களை ஈடுபடுத்தி உள்ளனர்.

    இந்நிலையில், தீ 50 சதவீதம் கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தீயை முழுவதும் அணைக்க இந்திய விமானப் படையின் உதவியை மாநில அரசு நாடியுள்ளது.

    மேலும், மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசி ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் பல அரசு துறை அலுவலகங்களை கொண்ட சத்ராபவன் உள்ளது.
    • முதலில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் பல அரசு துறை அலுவலகங்களை கொண்ட சத்ராபவன் உள்ளது. பழங்குடியினர் நலத்துறையின் பிராந்திய அலுவலகம் அமைந்துள்ள இந்த அரசு கட்டிடத்தின் 3-வது மாடியில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென்று தீப்பிடித்தது. 3-வது மாடியில் இருந்து மேலே உள்ள 3 தளங்களிலும் தீ மளமளவென வேகமாக பரவியது. ஏ.சி. மெஷின்கள், சிலிண்டர்களில் தீ பரவியதால் பல வெடிப்புகள் ஏற்பட்டன. இதனால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    முதலில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டது. 14 மணி நேர கடும் போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

    • சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த காப்பகத்தில் குழந்தைகள் கிறிஸ்துவ மதத்தை பின்பற்ற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்
    • இரவில் ஆண் காப்பாளர்கள் விடுதியில் இருக்கக் கூடாது என்ற விதியை மீறி காப்பகம் செயல்பட்டு வந்துள்ளது

    மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கன்னுங்கோ திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பதிவேட்டில் 68 மாணவிகளின் பெயர்கள் இருந்த நிலையில், 42 மாணவிகள் மட்டுமே அங்கு இருந்தனர். மீதமுள்ள 26 மாணவிகள் காணாமல் போனது தெரியவந்தது. இதுதொடர்பாக எப் ஐ ஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, சட்ட விரோதமாக காப்பகம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த பிரியங்க் கன்னுங்கோ, "இந்தக் காப்பகத்தை மதபோதகர்கள் நடத்தி வந்துள்ளனர். தெருவில் திரிந்த குழந்தைகளை மீட்டு முறையான உரிமம் பெறாமல் இதனை நடத்தி வந்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகள் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்ற கட்டாய படுத்தப்பட்டுள்ளனர். காப்பகத்தில் 6 முதல் 18 வயது நிரம்பிய சிறுமிகள் இருந்தனர். இவர்களில் பலர் இந்துக்கள் என்றும் தெரிகிறது. மிகுந்த சிரமத்துக்கு இடையே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    காப்பகத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. இரண்டு பெண் காவலர்களைத் தவிர்த்து இரவில் இரண்டு ஆண் காப்பாளர்களும் விடுதியில் இருந்துள்ளனர். இரவில் ஆண் காப்பாளர்கள் விடுதியில் இருக்கக் கூடாது என்ற விதியை மீறி செயல்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இச்சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, இச்சம்வத்தில் அரசு துரிதமாக செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • போபால் தொகுதி எம்.பி பிரக்யா சிங் தாக்கூருக்கு வாய்ப்பு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
    • மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே தான் உண்மையான தேசபக்தர் என்று பிரக்யா தாகூர் பாராட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், போபால் தொகுதி எம்.பி பிரக்யா சிங் தாக்கூருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பேசிய பிரக்யா சிங் தாக்கூர், "நான் இதற்கு முன்பும் எம்பி சீட் கேட்கவில்லை, இப்போதும் நான் கேட்கவில்லை. முந்தைய காலத்தில் நான் கூறிய சில வார்த்தைகள் பிரதமர் மோடிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இது குறித்து நான் அவரிடம் மன்னிப்பு கேட்டும், அவர் என்னை மன்னிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே தான் உண்மையான தேசபக்தர் என்று பிரக்யா தாகூர் பாராட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இவர் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே போல், பாராளுமன்றத்தில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை தீவிரவாதி என குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக எம்.பி ரமேஷ் பிதூரிக்கும் மக்களவை வேட்பாளருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார் மோகன் யாதவ்

    மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அரசின் தலைமை செயலகமான வல்லப் பவன் (Vallabh Bhavan), உள்ளது.

    இன்று காலை, தலைமை செயலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

    தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    தீப்பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து கரும் புகை வெளியேறி அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

    தீ விபத்து குறித்து ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ், "ஆட்சியரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வரும் விதமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிய வந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்தார்.

    தற்போது வரை உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

    • தலைமை செயலகமான வல்ல பவனில் 4 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • இந்தியாவில் குறிப்பாக மத்தியப் பிரதேச தலைமை செயலகத்தில் மட்டும் ஏன் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது?

    மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அரசின் தலைமை செயலகமான வல்ல பவன் (Vallabh Bhavan), உள்ளது. இன்று காலை, தலைமை செயலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

    தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீப்பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து கரும் புகை வெளியேறி அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

    தீ விபத்து குறித்து பேசிய ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ், "ஆட்சியரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வரும் விதமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிய வந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்தார்.

    இது தொடர்பாக பேசிய மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர பட்வாரி, "ஏற்கனவே தலைமை செயலகமான வல்லப் பவனில் 4 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பேற்பது? ஆனால் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்தியாவில் குறிப்பாக மத்தியப் பிரதேச தலைமை செயலகத்தில் மட்டும் ஏன் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் உமாங் சிங்கார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், முதலமைச்சர் மோகன் யாதவுக்கும் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. அதனால் தான் சிவராஜ் சிங் சவுகான் தனது ஊழல் கோப்புகளை வல்ல பவனில் வைத்து எரித்து வருகிறார். பாஜக அரசின் உள்கட்சி பிரச்சினைகளால் லட்சக்கணக்கான மக்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. மோசடி செய்து தீ வைப்பது பாஜக அரசின் பழைய வழக்கம் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

    • பாஜக பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாராளுமன்ற தேர்தலின் பொது ஒரு வாக்குச்சாவடிக்கு பாஜக உள்ளாட்சி உறுப்பினர் ஒருவர் தனது மகனை அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    அந்த வீடியோவில் இருப்பது பாஜகவின் பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹரின் மகன் என்றும், 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்த மே 7-ம் தேதி வாக்குச் சாவடிக்கு தனது தந்தையுடன் சென்று வாக்களிக்கும் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

    அந்த வீடியோவில் தந்தையும் மகனும் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக சின்னமான தாமரை சின்னத்துக்கு வாக்களிப்பது பதிவாகியுள்ளது.

    இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, தேர்தல் ஆணையத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாஜக பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை. தேர்தல் சமயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கவுசலேந்திர விக்ரம் சிங் உத்தரவிட்டுள்ளார். அந்த வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரி சந்தீப் சைனி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

    • 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவு 12 கண்டெய்னர் லாரிகளில் ஏற்றப்பட்டு அகற்றம்.
    • பிதாம்பூரில் உள்ள கழிவுகளை எரிக்கும் ஆலையில் பாதுகாப்பாக எரிக்கப்பட இருக்கிறது.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தொழிற்சாலையில் கடந்த 1984-ம் ஆண்டு திடீரென விசவாயு கசிவு ஏற்பட்டது. இதில் மூச்சுத்திணறி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தொழிற்சாலை மூடப்பட்டது.

    ஆனால் தொழிற்சாலையில் இருந்து நச்சுக் கழிவு அகற்றப்படாமல் இருந்தது. நச்சுக் கழிவை பாதுகாப்பாக இங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றம் கெடு விதித்தது.

    இந்த நிலையில் நேற்றிரவு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து பிதாம்பூர் என்ற இடத்திற்கு பலத்த பாதுகாப்புடன் 12 கண்டெய்னர் லாரிகளில் சுமார் 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகள் ஏற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

    250 கி.மீ. தூரம் க்ரீன் காரிடாரில் கண்டெய்னர் லாரிகள் பயணிக்கிறது. ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனம், தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்புடன் நச்சுக் கழிவுகள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்படுகிறது. 50 போலீசார் பாதுகாப்பாக பின்தொடர்ந்து செல்கின்றனர்.

    இதற்காக 12 கண்டெய்னர்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 200 தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். 30 நிமிட ஷிஃப்ட் முறையில் பலத்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு கவசங்களுடன் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பிதாம்பூருக்குப் பதிலாக வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என 10-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    பிதாம்பூரில் உள்ள கழிவுகளை எரிக்கும் ஆலை மிக அதிநவீன ஆலை ஆகும். ஆலையின் தரைமட்டத்தில் இருந்து 25 அடி உயரத்திற்கு மேல் சிறப்பு பிளாட்பார்ம் அமைக்கப்பட்டுள்ளது.

    கடுமையான அறிவியல் நெறிமுறைகளையும் பின்பற்றி எரிப்பு செயல்முறை நடைபெற இருக்கிறது. 337 டன் நச்சுக் கழிவை மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் அழித்தால் 153 நாட்களில் முற்றிலுமாக அழிக்க முடியும். வேகத்தை மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் அழித்தால் 51 நாட்கள் ஆகும்.

    • கார்பைடு தொழிற்சாலை கழிவுகளை போபாலில் இருந்து பிதாம்பூருக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.
    • போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்படும் சூழ்நிலையில் போலீசார் தடியது.

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 1984-ம் ஆண்டு கார்பைடு தொழிற்சாலையில் இருந்து வெளியான விசவாயுவால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால் கடந்த 40 வருங்கடகளாக நச்சுக் கழிவு அங்கேயே சேமித்து வைக்கப்பட்டிருந்தது. சுமார் 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகளை தொழிற்சாலையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி போபால் தொழிற்சாலையில் இருந்து நச்சுக் கழிவை 12 கண்டெய்னர்கள் மூலம் தார் நகரில் உள்ள பிதாம்பூர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு 12 பிரத்யேக கண்டெய்னர்கள் மூலம் பிதாம்பூர் கொண்டு செல்லப்பட்டது. அதேவேளையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து மற்றொரு நகருக்கு கொண்டு செல்லப்படுவது என்ன நியாயம்?. அதை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பெரும்பால அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்த நிலையில் நச்சுக் கழிவை பிதாம்பூருக்கு மாற்றியதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது சிலர் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தினர்.

    இதனால் போராட்டம் நடந்த இடம் போர்க்களம் போன்று காட்சியளித்தது. தனியாக மாட்டிய இளைஞர்களை போலீசார் லத்தியால் மிகக்கொடூரமாக தாக்கினர். இச்சம்பவம் போபாலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிதாம்பூரில் கழிவுகளை எரிக்கும் மிக அதிநவீன ஆலை உள்ளது. இந்த ஆலையில்தான் நச்சுக் கழிவு எரிக்கப்பட இருக்கிறது. ஆலையின் தரைமட்டத்தில் இருந்து 25 அடி உயரத்திற்கு மேல் சிறப்பு பிளாட்பார்ம் அமைக்கப்பட்டுள்ளது.

    கடுமையான அறிவியல் நெறிமுறைகளையும் பின்பற்றி எரிப்பு செயல்முறை நடைபெற இருக்கிறது. 337 மெட்ரிக் டன் நச்சுக் கழிவை மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் அழித்தால் 153 நாட்களில் முற்றிலுமாக அழிக்க முடியும். வேகத்தை மணிக்கு 270 கி.மீ. என அதிகரித்தால் 51 நாட்கள் ஆகும்.

    • 151 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறைச்சாலையில் 2,600 கைதிகள் அடைக்கலாம்.
    • சிறை வளாகத்தில் டிரோன் எப்படி நுழைந்தது என்பது தெரியவில்லை.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் போபாலில் மத்திய சிறைச்சாலை உள்ளது. 151 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறைச்சாலையில் 2,600 கைதிகள் அடைக்கலாம். ஆனால் தற்போது 3,600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புடையவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே இங்கு பன்னடுக்கு உயர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த சிறைச்சாலையின் பி பிளாக் கட்டிடம் அருகே சுமார் 40 கிராம் எடையுள்ள கருப்பு நிற டிரோன் கிடந்ததை, சிறை சூப்பிரண்டு ராகேஷ் குமார் பாங்க்ரே கண்டுபிடித்தார்.

    இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளும், நிபுணர்களும் அங்கு வந்து, அந்த டிரோனை ஆய்வு செய்தனர். அப்போது அந்த டிரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று தெரியவந்தது. போலீசார் அதனை கைப்பற்றி காந்தி நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

    உயர் பாதுகாப்பு பகுதியான சிறைச்சாலைக்குள் சீன டிரோன் எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபற்றி சிறைத்துறையினர் கூறுகையில், சிறை வளாகத்தில் டிரோன் எப்படி நுழைந்தது என்பது தெரியவில்லை. அது தரையிறங்குவதை யாரும் பார்க்கவில்லை. சிறைச்சாலைக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடையதாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

    போபால் மத்திய சிறைச்சாலைக்குள் சீன டிரோன் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மத்திய பிரதேசத்தில் பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
    • அரசின் உத்தரவை மீறி பிச்சை எடுத்தால் 1 ஆண்டுவரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    மத்திய பிரதேச மாநிலத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் மத்திய பிரதேசத்தில் பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

    பிச்சை எடுப்பதற்கான தடையை மீறுவோர் மீது பாரதிய நியாய் சன்ஹிதா சட்டத்தின் 223-வது பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை சிறை தண்டனையும், 5,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், மத்தியபிரதேச மாநில தலைநகர் போபாலில் சாலை சிக்னலில் பிச்சை எடுத்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

    பிச்சை எடுத்தவரிடம் மாற்று வேலை தருவதாகவும் பிச்சை எடுப்பதை கைவிடுமாறும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதனை அவர் ஏற்காததால் பிச்சைக்காரர்கள் தடுப்பு சட்டத்தில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

    • லவ் ஜிகாத் என்ற கூறி முஸ்லிம் இளைஞரை வலதுசாரி அமைப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.
    • இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றத்தில், இந்து பெண்ணை திருமணம் செய்யவிருந்த முஸ்லிம் இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தாக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர் பிபாரியாவைச் சேர்ந்த இந்து பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக போபாலில் உள்ள நீதிமன்றத்துக்கு வந்துள்ளார்.

    அப்போது லவ் ஜிகாத் என்ற கூறி முஸ்லிம் இளைஞரை வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×