என் மலர்
நீங்கள் தேடியது "ஆமை வேகம்"
- களிமேடு பகுதியில் அதிகளவில் வணிக நிறுவனங்களும் உள்ளன.
- சாலையை அகலப்படுத்தவும், சாக்கடையை சீரமைக்கவும் பணிகள் நடப்பதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை.
காங்கேயம் :
காங்கேயம் தாராபுரம் ரோட்டில் உள்ள களிமேடு பகுதியில் அதிகளவில் மக்கள் வசித்து வருகிறார்கள்.வணிக நிறுவனங்களும் உள்ளன. காங்கேயம் நகராட்சியின் 8 வது வார்டு ஆகும்.
சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இங்கு சி. எஸ் தேவாலயம் எதிரே செல்லும் கே. எஸ். ஆர் சந்து பகுதி கடந்த 4 மாதங்களாக துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையை அகலப்படுத்தவும், சாக்கடையை சீரமைக்கவும் பணிகள் நடப்பதால் இந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பணிகள் தொடங்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும் சரிவர பணிகள் நடக்கவில்லை. ஆமை வேகத்தில் பணிகள் நடக்கின்றன. இந்த பகுதியில் இருந்து தினந்தோறும் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி, பள்ளிக்கு சென்று வரும் மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் அவதி அடைந்து வருகின்றனர். பணிகளை விரைந்து முடிக்க கோரி இந்த பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறை, மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் மனுவும் அளித்துள்ளனர்.
அதன் பிறகும் கூட எந்த நடவடிக்கையும் இல்லை. விரைந்து பணிகளை முடிக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.