search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்"

    • ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றுக்கான ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • இந்திய அணி மலேசிய உலக சாம்பியன் ஆரோன் சியா- சோ வூய் யிக் இணையை எதிர்கொண்டது.

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, தென் கொரியா கேங், சியோ ஜோடியுடன் போட்டியிட்டனர்.

    இந்த ஆட்டத்தில், தென் கொரியாவின் கேங், சியோ ஜோடியை 17-21, 21-19, 21-18 செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி வெற்றிப்பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றுக்கான ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை மலேசிய உலக சாம்பியன் ஆரோன் சியா- சோ வூய் யிக் இணையை எதிர்கொண்டது.

    இந்த போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாத்விக் சாய்ராஜ் - சிராஜ் ஷெட்டி இணை 21-17, 21-18 என்ற நேர் செட் கணக்கில் ஆரோன் சியா-சோ வூய்யிக் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    • இந்திய ஜோடி 21-13, 21-13 என்ற செட் கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
    • தென் கொரியாவின் கேங், சியோ ஜோடியை 17-21, 21-19, 21-18 செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்.

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்திய ஜோடி சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி உலகின் நம்பர் ஒன் ஜோடியான ஃபஜர் அல்ஃபியன், முகம்மது ரியான் ஆர்டியான்டோவுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 21-13, 21-13 என்ற செட் கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், இன்று நடந்த இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, தென் கொரியா கேங், சியோ ஜோடியுடன் போட்டியிட்டனர்.

    இந்த ஆட்டத்தில், தென் கொரியாவின் கேங், சியோ ஜோடியை 17-21, 21-19, 21-18 செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் சாத்விக்- சிராக் ஜோடி வெற்றிப்பெற்றது.

    • இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி இந்தோனேசிய ஜோடியுடன் மோதியது.
    • இதில் 21-13, 21-13 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வென்றது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்திய ஜோடி சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி உலகின் நம்பர் ஒன் ஜோடியான ஃபஜர் அல்ஃபியன், முகம்மது ரியான் ஆர்டியான்டோவுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 21-13, 21-13 என்ற செட் கணக்கில் இந்தோனேசிய ஜோடியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் ஜப்பான் வீரருடன் மோதினார்.
    • இதில் 21-18, 21-16 என்ற செட் கணக்கில் பிரனாய் வென்றார்.

    ஜெகார்த்தா:

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் ஜப்பான் வீரர் நராகோவை 21-18, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், டென்மார்க் வீரர் அக்செல்சென்னை எதிர்கொள்கிறார்.

    • இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் ஹாங்காங் வீரருடன் மோதினார்.
    • இதில் 21-18, 21-16 என்ற செட் கணக்கில் பிரனாய் வென்றார்.

    ஜெகார்த்தா:

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச் எஸ் பிரனாய் ஹாங்காங் வீரர் ஆங்க்சை 21-18, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் காலிறுதி சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜப்பான் வீரர் நரகோடாவை எதிர்கொள்கிறார்.

    • இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி சீன வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    • இந்தியாவின் லக்சயா சென் முதல் சுற்றில் மலேசியா வீரரை எதிர்கொண்டார்.

    ஜெகார்த்தா:

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரனோய் ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.

    இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் மலேசிய வீரரை 21-17, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

    இதேபோல், மற்றொரு இந்திய வீரரான ஸ்ரீகாந்த் கிடாம்பி, சீன வீரரை 21-13, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், ஸ்ரீகாந்த் கிடாம்பியை நாளை எதிர்கொள்கிறார்.

    • இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக பிவி சிந்து, எச்.எஸ். பிரணாய் உட்பட பல வீரர்கள் ஜகார்த்தா சென்றுள்ளனர்.
    • இந்தியாவின் பிவி சிந்து முதல் சுற்றில் இந்தோனேசியா வீராங்கனை கிரேகேரியா மரிஸ்காவை எதிர்கொண்டார்.

    இந்தோனேசியா:

    இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் இன்று துவங்கி அடுத்த மாதம் ஜூன் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக பிவி சிந்து, எச்.எஸ். பிரனோய் உட்பட பல வீரர்கள் ஜகார்த்தா சென்றுள்ளனர்.

    இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் 8-ம் நிலை வீரரான பிரனோய் முதல் சுற்றில் 21-16, 21-14 என்ற செட் கணக்கில் உலகின் 11-ம் நிலை வீரரான ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை வீழ்த்தினார்.

    பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து முதல் சுற்றில் இந்தோனேசியா வீராங்கனை கிரேகேரியா மரிஸ்காவை எதிர்கொண்டார்.


    பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-19, 21-15, என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். இதனால் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ×