என் மலர்
நீங்கள் தேடியது "பசு உரிமையாளர்"
- பசு தானாக பால் சுரக்கிறது. இதனை நிறுத்த முடியவில்லை.
- மாட்டை விற்பனைக்காக கொண்டு வந்திருக்கும்போது மடியின் அளவை பொருத்து வியாபாரிகள் வாங்குவார்கள்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை நடந்து வருகிறது.
நேற்று மாட்டுச்சந்தைக்கு விவசாயி ஒருவர் பசுவுடன் வந்திருந்தார். அப்போது அந்த மாட்டின் மடியில் இருந்து பால் தானாக வழிந்தது. இதைப்பார்த்த உரிமையாளர் மடி காம்பின் நுனியில் பசை வைத்து ஒட்டினார்.
பசு தானாக பால் சுரக்கிறது. இதனை நிறுத்த முடியவில்லை. இதனால் டெப் வடிவிலான பசையை வைத்து ஒட்டி வருவதாக அவர் கூறினார்.
சில மாட்டுக்கு அதிகப்படியாக பால் சுரக்கும். அந்த பால் மடியில் இருந்து தானாக வெளியேறுவது இயல்பானது.
ஆனால் அந்த மாட்டை விற்பனைக்காக கொண்டு வந்திருக்கும்போது மடியின் அளவை பொருத்து வியாபாரிகள் வாங்குவார்கள்.
எனவே மடியின் அளவு பெரியதாக இருக்க வேண்டும் என்பதற்காக மடியில் இருந்து பால் வழிவதை தடுக்க பசை மூலம் ஒட்டியிருப்பார்கள்.
இவ்வாறு செய்வது கொடுமையான விஷயம். இதை உரிமையாளர்கள் செய்யக்கூடாது.
இவ்வாறு கூறினர்.