என் மலர்
நீங்கள் தேடியது "திருமண ஊர்வலம்"
- என் தந்தை மற்றும் தாத்தாவின் ஊர்வலம் ஒட்டகங்களில் சென்றது.
- ஊர்வலம் கிராமத்தை அடைந்ததும், அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடந்த திருமண விழாவில் 51 டிராக்டர்களுடன் மணமகன் ஊர்வலம் வந்த நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
குடமலானி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் சவுத்ரி என்பவருக்கும், ரோலி கிராமத்தைச் சேர்ந்த மம்தா என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. மணமகன் வீட்டிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரோலி கிராமத்திற்கு திருமண ஊர்வலம் புறப்பட்டது. இதில் 51 டிராக்டர்களுடன் மணமகன் ஊர்வலம் வந்து அசத்தினார். ஒரு டிராக்டரை மணமகனே ஓட்டினார். மொத்தமுள்ள 51 டிராக்டர்களில் 200க்கும் மேற்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பயணித்தனர்.
இதுகுறித்து மணமகன் கூறுகையில், "தனது குடும்பத்தின் பிரதான தொழில் விவசாயம். ஒரு விவசாயியின் அங்கீகாரமாக டிராக்டர் கருதப்படுகிறது. அவரது தந்தையின் திருமண ஊர்வலம் ஒரு டிராக்டரில் புறப்பட்டது. எனவே, எனக்கு ஏன் 51 டிராக்டர்கள் ஊர்வலத்தில் இருக்கக்கூடாது என்று அனைவரும் நினைத்தனர்" என்றார்.
மேலும், மணமகனின் தந்தை, ஜெதாராம் கூறுகையில் "ஒரு டிராக்டர் 'பூமியின் மகன்' என்று கருதப்படுகிறது. என் தந்தை மற்றும் தாத்தாவின் ஊர்வலம் ஒட்டகங்களில் சென்றது. எங்கள் குடும்பத்தில் ஏற்கனவே 20-30 டிராக்டர்கள் இருந்தன. என் விவசாய நண்பர்களுடன் சேர்ந்து, அவற்றில் மொத்தம் 51 டிராக்டர்களை நான் பதிவு செய்தேன். காலையில் ஊர்வலம் புறப்பட்டபோது மேலும் 10-12 டிராக்டர்கள் சேர்ந்தன. டிராக்டர்கள் மூலம் விவசாயம் செய்கிறோம். அதற்கு ஏன் ஊர்வலம் செல்ல முடியாது? என்று நினைத்தோம்.
ஊர்வலம் கிராமத்தை அடைந்ததும், அனைவரும் ஆச்சரியமடைந்தனர்" என்றார்.
- குதிரையில் கோட்டு சூட்டுடன் மணமகன் அமர்ந்திருக்க திருமண ஊர்வலம் சென்று கொண்டிருந்தது
- வழிப்போக்கர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு அந்த குட்டி யானையை துரத்தியுள்ளார்.
பைக்கில் மற்றொரு வாகனத்தை சேஸ் செய்து அதில் தாவி ஏறுவது எல்லாம் ஆக்ஷன் சினிமாவில் கிளீசேவாக இடம்பெறும் காட்சிதான்.
ஆனால் இதுவே நிஜத்தில் உத்தர பிரதேச சாலையில் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகர சாலையில், குதிரையில் கோட்டு சூட்டுடன் மணமகன் அமர்ந்திருக்க திருமண ஊர்வலம் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அப்போது அவ்வழியாக குட்டி யானையை [மினி டிரக்கை] ஓட்டி வந்தவர் ஊர்வலம் அருகே சென்றபோது குதிரையில் அமர்ந்திருந்த மணமகனின் கழுத்தில் இருந்த பண மாலையை கிழித்துக்கொண்டு சென்றுள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத மணமகன் உடனே குதிரையில் இருந்து இறங்கி வழிப்போக்கர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு அந்த குட்டி யானையை துரத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் பைக்கில் இருந்து குட்டி யானை மீது குதித்து பக்கவாட்டு கதவு வழியாக அதிரடியாக உள்ளே நுழைந்து அதை நிறுத்தச் செய்துள்ளார்.
பின்னர் பண மாலையை பறித்த அந்த டிரைவரை கீழ் இறங்கிச் செய்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதற்குள் மாப்பிள்ளையின் நண்பர்களும் அங்கு வந்து சேரவே டிரைவருக்கு கடுமையான கவனிப்பு கிடைத்துள்ளது.
நான் வேண்டும் என்றே செய்யவில்லை என்று அந்த ஓட்டுநர் மாப்பிள்ளையிடம் கெஞ்சுகிறார். இந்த ஆக்ஷன் சேசிங் காட்சி குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே இதுதொடர்பாக வழக்குப் பதவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரதீப் (26) என்று இளைஞருக்கு திருமணம் ஊர்வலம் நடைபெற்றது.
- குதிரையில் வந்த மாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்தார்.
மத்திய பிரதேசத்தில் திருமணத்தை ஒட்டி குதிரையில் ஊர்வலமாக வந்த மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சியோபூர் மாவட்டத்தில் பிரதீப் (26) என்று இளைஞருக்கு திருமண ஊர்வலம் நடைபெற்றது. அப்போது குதிரையில் வந்த மாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.