என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "மு.கருணாநிதி"
- ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி வருபவர் வைரமுத்து.
- இவர் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு பாடல் ஒன்று எழுதியுள்ளதாக வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.
![வைரமுத்து வைரமுத்து](https://media.maalaimalar.com/h-upload/2023/06/15/1898518-karu2.webp)
வைரமுத்து
இந்நிலையில் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு பாடல் ஒன்று எழுதியுள்ளதாக சமூக வலைத்தளத்தின் வாயிலாக வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். அதில்,
கலைஞர் நூற்றாண்டுக்கு
ஒரு புகழ்ப்பாட்டு
எழுதியிருக்கிறேன்
ஜிப்ரான் இசையில்
யாசின் பாட
நேற்று ஒலிப்பதிவு செய்தோம்
இது
தமிழ்நாட்டரசின் தயாரிப்பு
விரைவில்
தமிழ்கூறு நல்லுலகுக்கு...
என்று பதிவிட்டுள்ளார்.