என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆஷஸ் 2023"
- உலகில் இப்படி நடப்பதை நீங்கள் பார்க்க எந்த வழியும் இல்லை.
- 2 சர்வதேச நடுவர்கள் இப்படி செய்ததை நான் எதிர்பார்க்கவில்லை.
ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. முதல் 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அந்த நிலையில் கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 283 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 295 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதைத்தொடர்ந்து 12 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 395 ரன்கள் எடுத்தது. இதனால் 384 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு கவாஜா 60, வார்னர் 72, ஸ்மித் 72 என முக்கிய வீரர்கள் நல்ல துவக்கத்தை கொடுத்தும் இதர வீரர்கள் சொதப்பினர்.
அதனால் 334 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய அணி இழந்தது. இதன் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2 - 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.
"There's no way in the world you can look at those two balls there and say in any way that they're comparable" ?Ricky Ponting is NOT happy with that 'new' ball ? pic.twitter.com/maDFpv8RhM
— Sky Sports Cricket (@SkyCricket) July 31, 2023
இந்நிலையில் இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் புதிய பந்தை நடுவர்கள் பயன்படுத்தியது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-
எனக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை என்னவெனில் வடிவமற்ற போன பந்திற்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பந்தின் நிலையில் மிகப்பெரிய முரண்பாடு இருந்தது. உலகில் இப்படி நடப்பதை நீங்கள் பார்க்க எந்த வழியும் இல்லை. ஏனெனில் அந்த 2 பந்துகளும் எந்த வகையிலும் ஒப்பிடத்தக்க வகையில் இருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியாது.
பொதுவாக பந்தை மாற்றும் போது அதற்கான பெட்டியில் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய பந்தை எடுத்து நடுவர்கள் அணியிடம் கொடுப்பார்கள். ஆனால் அதை செய்யாத அந்த 2 சர்வதேச நடுவர்கள் இப்படி செய்ததை நான் எதிர்பார்க்கவில்லை. அதுவே போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனை தருணமாக அமைந்ததால் அதைப் பற்றி விசாரணை நடத்த நான் விரும்புகிறேன்.
இவ்வாறு பாண்டிங் கூறினார்.
- முதல் இரண்டு போட்டிகளிலும இங்கிலாந்து வெற்றி
- 3-வது போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்னும், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 237 ரன்னும் எடுத்தன. ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 237 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 251 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ரன்னை எடுத்து வெற்றி பெற்றது. முதல் டெஸ்டில் 2 விக்கெட்டிலும், 2-வது டெஸ்டில் 43 ரன்னிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்தது. 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இங்கிலாந்து அணியின் வெற்றி குறித்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் கூறியதாவது:-
இங்கிலாந்து அணியின் இந்த வெற்றி தொடக்கம்தான். இனிவரும் டெஸ்டுகளிலும் வெற்றி தொடரும். முதல் இரண்டு போட்டியில் தோற்றப் பிறகு 3-வது டெஸ்ட் முக்கியமானது. இதனால் நெருக்கடியில் பெற்ற இந்த வெற்றி சிறப்பானது. எங்கள் அணி வீரர்களின் செயல்பாடு மிக சிறப்பாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் வருகிற 19-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.
- லபுசேன் ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்
- ஸ்மித்தை எல்.பி.டபிள்யூ மூலம் பென் ஸ்டோக்ஸ் வீழ்த்தினார்
ஆஷஸ் தொடரின் முதல் போட்டி நேற்று பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்து ஜோ ரூட்டின் (118 நாட்அவுட்) அபார சதத்தால் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றயை முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர் 8 ரன்னுடனும், கவாஜா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வார்னர் 9 ரன்கள் எடுத்த நிலையில் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுசேன் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். பிராட் அடுத்தடுத்த பந்தில் விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்துக்கு முன்னணி கொடுத்தார்.
நம்பிக்கை வீரரான ஸ்மித் அடுத்து களம் இறங்கினார். அவரை 16 ரன்னில் எல்.பி.டபிள்யூ மூலம் பென் ஸ்டோக்ஸ் வெளியேற்றினார். இதனால் 67 ரன்களுக்குள் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு கவாஜா உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டது.
உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 40 ரன்களுடனும், ஹெட் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி சிறந்த பார்ட்னர்சிப் அமைத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் ஆதிக்கம் செலுத்தும். இல்லையெனில் நெருக்கடியை எதிர்கொள்ளும்.
- இங்கிலாந்தின் பாஸ்பால் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம்
- அதிக அளவில் யோசித்தால் நெருக்கடிதான் ஏற்படும்
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இங்கிலாந்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை 3-2 என 2015-ல் வீழ்த்தியது. அதன்பின் ஆஸ்திரேலியாவை வென்றதில்லை. அதேவேளையில் 2017-18 மற்றும் 2021-22-ல் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் 4-0 என இங்கிலாந்தை வென்றுள்ளது.
பழைய வரலாறு எல்லாம் தேவையில்லை. நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 'பாஸ்பால்' எனப்படும் பயமில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். அதை ஆஷஸ் தொடரிலும் கடைபிடிப்போம் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில் காயம் காரணமாக தொடர் முழுவதும் விளையாடவில்லை.
ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடினாலும் மிகப்பெரிய அளவில் பந்து வீசவில்லை. இதனால் ஆஷஸ் தொடரிலும் பந்து வீசுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தான் உடற்தகுதி பெற்றுவிட்டதாகவும், ஆஷஸ் தொடரில் பந்து வீசுவதாகவும் தெரிவித்துள்ளார். பென் ஸ்டோக்ஸின் இந்த அறிவிப்பு இங்கிலாந்து அணிக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
மேலும் இங்கிலாந்து அணி குறித்து அவர் கூறுகையில் ''ஆஸ்திரேலியா சிறப்பான டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி உள்ளது. அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிக்கு எதிராகவும் வெளிப்படும். இது மிகப்பெரிய சவால் என்பது எனக்குத் தெரியும். ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் இது மிகப்பெரியது என்பது தெரியும்.
பந்து வீசுவது, பேட்டிங் செய்வது மற்றும் பீல்டிங் செய்வது ஆகிய இந்த நோக்கத்தில்தான் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். இந்தத் தொடர் அதிக நாட்கள் பிடிக்கும் என்பதால், வேறு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால் அது அழுத்தத்தை கொடுத்துவிடும்.
நாங்கள் இதற்கு முன் எப்படி விளையாடினோமோ, அதே உத்வேகத்தில் விளையாட விரும்புகிறோம். ஒவ்வொரு தனிப்பட்ட வீரர்களும் திறமையை வெளிப்படுத்த வேண்டும். எதிரணி எதுவாக இருந்தாலும் எங்களுடைய பாஸ்பால் ஆட்டமுறை தொடரும்'' என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்