என் மலர்
நீங்கள் தேடியது "பொதுத்துறை நிறுவனம்"
- அரசு தங்களது சில பணக்கார நண்பர்களின் பயனுக்காக மட்டுமே செயல்படுகிறது.
- அரசாங்கத்தின் கீழ் நாடு வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி தவிக்கிறது.
புதுடெல்லி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
ஒரு காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் பெருமையாக இருந்தது. இளைஞர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிவதை தங்களது கனவாக கொண்டு இருந்தனர்.
ஆனால் இன்று பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. கடந்த 2014-ம் அண்டு 16.9 லட்சமாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிபவர்கள் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 14.6 லட்சமாக குறைந்தள்ளது.
வளர்ச்சியை நோக்கி செல்லும் நாட்டில் இது போன்ற வேலை வாய்ப்புகள் குறையுமா?
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 1,81,127 பேர் வேலை இழந்துள்ளனர். செய்ல்-61,920, எம்.டி.என்.எல். 34,997, எஸ்.இ.சி.எல். 29,140, இந்திய உணவு கழகம் 28,663, ஒ.என்.ஜி.சி.யில் 21,120 பேர் வேலையை இழந்துள்ளனர்.
ஆண்டுதோறும் 2 கோடி வேலை வாய்ப்பு என்று பொய் வாக்குறுதி அளித்தவர்கள் வேலைகளை அதிகரிப்பதற்கு பதிலாக 2 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை நீக்கியுள்ளது. இதன் மூலம் இளைஞர்களின் நம்பிக்கை நசுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களில் ஒப்பந்த ஆட்களை சேர்ப்பது இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிறுவனங்களை தனியார் மயமாக்கும் சதியா?
இந்த அரசு தங்களது சில பணக்கார நண்பர்களின் பயனுக்காக மட்டுமே செயல்படுகிறது. இந்த அரசாங்கத்தின் கீழ் நாடு வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி தவிக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டு மக்களின் சொத்து. அவை இந்தியாவின் முன்னேற்றப் பாதையை வலுப்படுத்தும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
- HAL நிறுவனத்திடம் சுமார் ரூ.12 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தையும் மூக் இங்க் பெற்றது.
- இந்தியா, UAE மற்றும் துருக்கி நாட்டு அதிகாரிகளுக்கு ஆரக்கள் நிறுவனம் ரூ.57 கோடி லஞ்சம் கொடுத்தது.
இந்தியாவில் HAL, தெற்கு ரயில்வே ஒப்பந்தங்களைப் பெற, அதிகாரிகளுக்கு அமெரிக்க நிறுவனமான மூக் இங்க் [Moog Inc] ரூ. 4.2 கோடி லஞ்சம் கொடுத்தது ஆதாரங்களுடன் அம்பலப்பட்டுள்ளது.
மத்திய ரெயில்வேக்கு மோஷன் கண்ட்ரோல் சிஸ்டம் என்ற கருவியை விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தைப் பெற பெற 2020ல் மூக் நிறுவனம் முயற்சி செய்தது.
2020-க்கு முன்பு வரை மத்திய ரயில்வேக்கு கருவியை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர்கள் பட்டியலில் மூக் நிறுவனம் இல்லாத நிலையில் ஒப்பந்த தொகையில் 10% கமிஷன் தருவதாக இடைத்தரகர் மூலம் மூக் நிறுவனம் அந்த ஒப்பந்தத்தை கைப்பற்றி செப்டம்பர் 2020 இல் மத்திய ரயில்வே ஒப்பந்ததாரர்கள் பட்டியலில் சேர்ந்தது.
மேலும் நவம்பர் 2021 இல் HAL நிறுவனத்திடம் சுமார் ரூ.12 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தையும் மூக் இங்க் பெற்றது. இவைதொடர்பாக அமெரிக்க பங்கு வர்த்தக ஆணையத்தில் நடந்த வழக்கில் மூக் இங்க் நிறுவனம், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டது.
எனவே அந்நிறுவனத்துக்கு ரூ.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் சட்ட நடவடிக்கையை தவிர்க்க அபராதத் தொகையை 3 மடங்காக [ 300 சதவீதம் அதிகம்] செலுத்தியுள்ளது மூக் இங்க்.

இதற்கிடையே பன்னாட்டு மென்பொருள் நிறுவனமான ஆரக்கள், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததும் அம்பலமாகியுள்ளது.
இந்தியா, UAE மற்றும் துருக்கி நாட்டு அதிகாரிகளுக்கு ஆரக்கள் நிறுவனம் ரூ.57 கோடி லஞ்சம் கொடுத்தது. இதை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டதால் அதற்கு ரூ.193 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
முன்னதாக அதானி நிறுவனம் இந்தியாவில் ரூ.2,000 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்து ஒப்பந்தங்கள் பெற்றது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்ட நிலையில் தற்போது பிற பொதுத்துறை நிறுவனங்களும் அமெரிக்காவிடம் லஞ்சம் பெற்றுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
