என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனிஷா கிராஸ்டோ"

    • நான்டெஸ் சர்வதேச சாலஞ்ச் பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டின் நான்டெஸ் நகரில் நடைபெற்று வந்தது.
    • கலப்பு இரட்டையர் இறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ-கே.சாய் பிரதீக் ஜோடி தோல்வி கண்டது.

    நான்டெஸ் சர்வதேச சாலஞ்ச் பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டின் நான்டெஸ் நகரில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-15, 21-14 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் ஹுங் என்-டிஸு லின் யு பெய் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

    மொத்தம் 31 நிமிடங்களிலேயே இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதே நேரத்தில் கலப்பு இரட்டையர் இறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ-கே.சாய் பிரதீக் ஜோடி தோல்வி கண்டது.

    இறுதிப் போட்டியில் டென்மார்க்கின் மேட்ஸ் வெஸ்டர்கார்ட்-கிறிஸ்டின் புஷ் ஜோடி 21-14, 14-21, 17-21 என்ற செட் கணக்கில் தனிஷா-சாய் பிரதீக் ஜோடியை வீழ்த்தியது.

    • ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

    பெர்லின்:

    ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

    கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, ஜெர்மனியின் ஜேன்சன்-நுயென் ஜோடி மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-10, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

    பெர்லின்:

    ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

    கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, சீனாவின் ஜியா ஜுவான்-மெங் யங் ஜோடி மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.

    பெர்லின்:

    ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

    கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, இந்தோனேசியாவின் குஷார்ஜண்டோ-குளோரியா ஜோடி மோதியது.

    இதில் இந்திய ஜோடி 23-25, 21-10, 15-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது.

    ×