என் மலர்
நீங்கள் தேடியது "மாற்று திறனாளி பலி"
- வெங்கடேசன் அவ்வப்போது வெளியிலும், வீட்டிலும் மெக்கானிக் வேலை செய்து வந்தார்.
- 11 மணி வீட்டு வாசலில் மழை நீரில் வெங்கடேசன் வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.
புதுச்சேரி:
காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செருமாவிளங்கை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் லதா. இவரது கணவர் வெங்கடேசன் (வயது 45) மாற்றுத்திறனாளியான இவர், அவ்வப்போது வெளியிலும், வீட்டிலும் மெக்கானிக் வேலை செய்து வந்தார். வழக்கம் போல் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இரவு 11 மணி வீட்டு வாசலில் மழை நீரில் வெங்கடேசன் வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக லதா மற்றும் உறவினர்கள் வெங்க டேசனை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோத்த டாக்டர் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். தொடர்ந்து லதா திருநள்ளாறு போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.