search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் ஆசிய கிரிக்கெட்"

    • இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரேயங்கா பட்டீல் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
    • இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    மோங் கோக்:

    23 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஹாங்காங்கில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி தொடரில் மழை காரணமாக 8 ஆட்டங்கள் கைவிடப்பட்டன. இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஒரே ஒரு லீக் ஆட்டத்தில் (ஹாங்காங்குக்கு எதிராக) மட்டுமே ஆடியது.

    மோங் கோக் நகரில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தினேஷ் விரிந்தா 36 ரன்னும், கனிகா அகுஜா ஆட்டம் இழக்காமல் 30 ரன்னும் திரட்டினர்.


    பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி, இந்திய வீராங்கனைகளின் மாயாஜால சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் 96 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரேயங்கா பட்டீல் 4 விக்கெட்டும், மன்னத் காஷ்யப் 3 விக்கெட்டும், கனிகா அகுஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×