என் மலர்
நீங்கள் தேடியது "கின்னஸ் சாதனை சான்றிதழ்"
- தனது 200 சர்வதேச போட்டியில் அவர் கோல் அடித்து முத்திரை பதித்தார்.
- அவர் 123-வது சர்வதேச கோலை பதிவு செய்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.
ரெய்க்ஜவிக்:
ஐரோப்பிய கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 14 முதல் ஜூலை 14 வரை ஜெர்மனியில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜவிக்கில் நடந்த யூரோ தகுதி சுற்று போட்டி ஒன்றில் போர்ச்சுக்கல்- ஐஸ்லாந்து அணிகள் மோதின.
போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இதில் விளையாடினார். அவருக்கு இது 200-வது சர்வதேச போட்டியாகும். இதன் மூலம் ரொனால்டோ புதிய சாதனை படைத்தார். 200 சர்வதேச போட்டிகளில் ஆடிய முதல் வீரர் ஆவார்.
போர்ச்சுக்கல் நாட்டுக்காக 200 போட்டிகளில் விளையாடிய 38 வயதான அவருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.
123- வது கோல் இந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 1-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை தோற்கடித்தது. 89-வது நிமிடத்தில் ரொனால்டோ இந்த கோலை அடித்தார்.
தனது 200 சர்வதேச போட்டியில் அவர் கோல் அடித்து முத்திரை பதித்தார். அவர் 123-வது சர்வதேச கோலை பதிவு செய்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக குவைத் வீரர் அல் முதாவா 196 சர்வதேச போட்டியில் விளையாடி உள்ளார்.
அர்ஜென்டினாவை சேர்ந்த உலகின் மற்றொரு முன்னணி கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி 175 சர்வதேச போட்டியில் பங்கேற்று 10-வது இடத்திலும், 103 கோல்கள் அடித்து 3-வது இடத்திலும் உள்ளார்.