search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வில் ஜேக்ஸ்"

    • பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி தயாகம் திரும்பினர்.
    • ஆர்சிபி அணியில் இடம் பிடித்துள்ள வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்லி உள்ளிட்ட வீரர்கள் நாடு திரும்பி உள்ளனர்.

    ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும். இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ளது. இதன்காரணமாக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    அந்தவகையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி இத்தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்தனர்.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி தயாகம் திரும்பினர். அந்தவகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தாயகம் திரும்பியுள்ளார்.

    அதேபோல் ஆர்சிபி அணியில் இடம் பிடித்துள்ள வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்லி உள்ளிட்ட வீரர்கள் நாடு திரும்பி உள்ளனர். ஆர்சிபி அணியின் இருந்து வில் ஜேக்ஸ் வெளியேறியது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவருக்கு பதிலாக மேக்ஸ்வெல் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவர்களை தவிர ஜானி பேர்ஸ்டோவ், பில் சால்ட், மொயீன் அலி, சாம் கரண் ஆகியோரும் தயாகம் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் உள்ள நிலையில் அணியின் முக்கிய வீரர்கள் விலகியுள்ளது அந்த அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    • முதலில் களமிறங்கிய சர்ரே அணி 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 7 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் சேர்த்தது.
    • அதைத்தொடர்ந்து ஆடிய மிடில்சக்ஸ் அணி 19.2 ஓவரிலேயே 254 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2023 டி20 ப்ளாஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் சர்ரே மற்றும் மிடில்சக்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற மிடில்சக்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய சர்ரே அணி 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 7 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் சேர்த்தது. அதைத்தொடர்ந்து 253 என்ற கடினமான இலக்கை துரத்திய மிடில்சக்ஸ் அணி 19.2 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த சேசிங்கில் மூலம் ஒட்டுமொத்த உலக டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்த 2-வது அணி என்ற மாபெரும் சாதனையை மிடில்சக்ஸ் அணி படைத்துள்ளது. மேலும் டி20 ப்ளாஸ்ட் தொடரில் அதிகபட்ச இலக்கை துரத்திய முதல் அணி என்ற வரலாற்றையும் படைத்தது.


    இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 259 ரன்களை தென்னாப்பிரிக்கா வெற்றிகரமாக சேசிங் செய்ததே உலக சாதனையாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சர்ரே அணியின் பேட்ஸ்மேன் வில் ஜேக்ஸ் 5 பந்திகளில் 5 சிக்சர்களை விளாசி சாதனையை படைத்தார். கடைசி பந்தில் சிக்சர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபுல் டாஸ் பந்தை தவற விட்டு சிங்கிள் மட்டுமே எடுத்தார்.

    அதன் காரணமாக முதல் 5 பந்துகளில் 5 முரட்டுத்தனமான சிக்சர்களை அடித்த அவர் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற யுவராஜ் சிங், ஹெர்சல் கிப்ஸ், கைரன் பொல்லார்ட் ஆகியோரின் உலக சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டார்.

    5 சிக்சர்கள் பறக்கவிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×