என் மலர்
நீங்கள் தேடியது "தைபே ஓபன் சர்வதேச பேட்மிண்டன்"
- தைபே ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது.
- பிரனோய் உலக தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் ஹாங்காங் வீரர் ஆங்கஸ் ங் கா லாங் உடன் மோதினார்.
தைபே:
தைபே ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனோய் உலக தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் ஹாங்காங் வீரர் ஆங்கஸ் ங் கா லாங் உடன் மோதினார்.
38 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் பிரனோய் 19-21, 8-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.