என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோளாறு"
- பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- பயணிகள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் தவித்தபடி உள்ளனர்.
சென்னையில் இருந்து இன்று அதிகாலை லண்டன் செல்ல விமானம் தயாராக இருந்தது. அதில் 276 பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் விமானத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை கண்டு பிடித்தனர். இதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு விமானம் புறப்படும் என்று முதலில் பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
பின்னர் கோளாறை சரிசெய்ய முடியாததால் விமானம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விமானம் நாளை காலை புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் தவித்தபடி உள்ளனர்.
- பாதுகாப்பு சோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்து விட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.
- என்ஜினீயர்கள் விமானத்திற்குள் ஏறி, தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முயன்றனர்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 146 பயணிகள், அதிகாலை 4 மணிக்கு முன்னதாகவே, சென்னை விமான நிலையத்துக்கு வந்து, பாதுகாப்பு சோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்து விட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.
இந்நிலையில், விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்னதாக விமானி, விமானத்தில் இயந்திரங்களை சரி பார்த்தார். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை அறிந்து, பயணிகளை விமானத்தில் ஏற்றாமல், விமானம் தாமதமாக காலை 8 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. என்ஜினீயர்கள் விமானத்திற்குள் ஏறி, தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முயன்றனர். ஆனால் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு சரி செய்ய முடியவில்லை. இதை அடுத்து விமானம் இன்று ரத்து என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் ஆத்திரமடைந்து, ஏர் இந்தியா விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து கொண்டு ஆவேசமாக வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். அதிகாலை 4 மணிக்கு முன்னதாகவே வந்து காத்திருக்கிறோம், இவ்வளவு நேரம் தாமதம் என்று கூறிவிட்டு, இப்போது திடீரென ரத்து என்று கூறுகிறீர்களே? இதை அப்போதே கூறியிருந்தால், நாங்கள் வேறு விமானத்தில் சென்று இருப்போமே என்று அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து பயணிகளை விமான நிலைய அதிகாரிகளும், பாதுகாப்பு படையினரும் சமாதானம் செய்தனர். விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருக்கும்போது, விமானத்தை இயக்குவது பாதுகாப்பானது இல்லை. உங்களுடைய நலன் கருதி தான் விமானத்தை ரத்து செய்து இருக்கிறோம். நாளை காலை விமானம் புறப்பட்டு செல்லும். விருப்பப்பட்டவர்கள் நாளை பயணியுங்கள். மற்றவர்கள் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தனர். இதனால் பயணிகள் வேறு வழியின்றி அமைதி அடைந்தனர். சிலர் தங்களுடைய விமான டிக்கெட்டை வேறு விமானத்திற்கு மாற்றி பயணம் செய்கின்றனர்.
இதற்கிடையே சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 6 மணி நேரம் தாமதமானதால், 328 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் அவதி அடைந்துள்ளனர்.
லண்டனில் இருந்து சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், இன்று அதிகாலை 3:30 மணிக்கு, சென்னை வந்துவிட்டு மீண்டும், காலை 5:30 மணிக்கு, சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும். அந்த விமானத்தில் இன்று சென்னையில் இருந்து 328 பயணிகள் லண்டன் செல்ல இருந்தனர்.
ஆனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக, லண்டனிலிருந்து தாமதமாக புறப்பட்டு, இன்று காலை 10 மணிக்கு மேல் தான் சென்னை வந்தது. எனவே சென்னையிலிருந்து அதிகாலை 5:30 மணிக்கு லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், இன்று 6 மணி நேரம் தாமதமாக, காலை 11:20 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் லண்டன் செல்ல வேண்டிய 328 பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தவித்தனர்.
- தகவலறிந்த ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றொரு என்ஜினை கொண்டு வந்து பழுதடைந்த என்ஜின் மற்றும் சரக்கு ரெயில் பெட்டிகளை இழுத்து சென்றது.
- அடிப்படை வசதி இல்லாத அந்த ரெயில் நிலையத்தில் பசிக்கு கூட சாப்பிட ஏதும் கிடைக்காமல் குழந்தைகளுடன் பயணிகள் தவித்தனர்.
தருமபுரி:
சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்ட ஒரு சரக்கு ரெயில் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ராயக்கோட்டையில் நேற்று நள்ளிரவு வந்தடைந்தது. அந்த ரெயிலில் திடீரென்று என்ஜீனில் ஏற்பட்டது. உடனே ரெயில் என்ஜீன் டிரைவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவறிந்த ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றொரு என்ஜினை கொண்டு வந்து பழுதடைந்த என்ஜின் மற்றும் சரக்கு ரெயில் பெட்டிகளை இழுத்து சென்றது. இதன்காரணமாக பெங்களூருவில் இருந்து தருமபுரி வழியாக செல்லக்கூடிய பெங்களூரு-தருமபுரி பாசஞ்சர் ரெயில், பெங்களூரு-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், குர்லா எக்ஸ்பிரஸ், கண்ணனூர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் உள்பட 6 ரெயில்களும் 3மணி நேரம் தாமதம் ஆனது.
பெங்களூரு-சேலம் ரெயில்கள் தாமதம் ஆனது. இதனால் கெலமங்கலம் ரெயில் நிலையத்தில் வெளியூருக்கு செல்வதற்காக காத்திருந்த பயணிகள் அங்கு 3 மணிநேரம் ரெயில்கள் ஏதும் வராமல் அடுத்தடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் காத்து இருந்தனர். அப்போது அடிப்படை வசதி இல்லாத அந்த ரெயில் நிலையத்தில் பசிக்கு கூட சாப்பிட ஏதும் கிடைக்காமல் குழந்தைகளுடன் பயணிகள் தவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்