என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சப்ராஸ்கான்"
- முதல் இன்னிங்சில் சப்ராஸ் கான் டக் அவுட்டில் வெளியேறினார்.
- 2-வது இன்னிங்சில் 150 ரன்கள் குவித்து தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
பெங்களூரு:
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. 2-வது நாளில் 'டாஸ்' ஜெயித்த இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்து 'ஆல்-அவுட்' ஆனது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 134 ரன்னும், டிவான் கான்வே 91 ரன்னும், டிம் சவுதி 65 ரன்னும் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 49 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது. சர்ப்ராஸ்கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பாக ஆடிய சப்ராஸ் கான் 110 பந்துகளில் சதத்தை எட்டினார். 4-வது டெஸ்டில் ஆடும் 26 வயது சர்ப்ராஸ்கான் அடித்த முதல் சதம் இதுவாகும். தொடர்ந்து ஆடிய சர்ப்ராஸ் கான் (150 ரன், 195 பந்து, 18 பவுண்டரி, 3 சிக்சர்) டிம் சவுதி பந்து வீச்சில் பெவிலியன் திரும்பினார். 4-வது விக்கெட்டுக்கு சர்ப்ராஸ் கான், ரிஷப் பண்ட் ஜோடி 177 ரன்கள் திரட்டினர்.
இறுதியில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 99.3 ஓவர்களில் 462 ரன்கள் குவித்து 'ஆல்-அவுட்' ஆனது. கடைசி 7 விக்கெட்டுகள் 54 ரன்களுக்குள் சரிந்தன.
முதல் இன்னிங்சில் 'டக்-அவுட்' ஆன சர்ப்ராஸ் கான் 2-வது இன்னிங்சில் 150 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ரன்னின்றி ஆட்டம் இழந்து விட்டு 2-வது இன்னிங்சில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த 3-வது இந்திய வீரர் என்ற சிறப்பை சர்ப்ராஸ் கான் பெற்றார். ஏற்கனவே இந்திய வீரர்களில் மாதவ் ராவ், நயன் மோங்கியா இதனை போல் சாதித்துள்ளனர்.
- அவர் விளையாடும் 11 வீரர்களில் இருக்க வேண்டாம் ஆனால் அவரை அணியிலாவது எடுத்திருக்க வேண்டும்.
- ரஞ்சி கோப்பை தொடரில் கடந்த 3 சீசன்களாக சர்பராஸ் கான் 100 ரன்களை கடந்து சராசரி வைத்துள்ளார்.
டெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி வரும் 12-ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது.
இதனிடையே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கான இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. டெஸ்ட் அணியில் புஜாராவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ருதுராஜ் கெய்குவாட், எஸ்எஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயம் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட 25 வயதான இளம் வீரர் சர்பராஸ் கானுக்கு மீண்டும் இடம் கிடைக்காதது பல்வேறு முன்னாள் வீரர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சர்பராஸ் கான் இந்திய அணியில் சேர்க்காதற்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:-
ரஞ்சி கோப்பை தொடரில் கடந்த 3 சீசன்களாக சர்பராஸ் கான் 100 ரன்களை கடந்து சராசரி வைத்துள்ளார். இந்திய அணியில் தேர்வாவதற்கு சர்பராஸ் கான் இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்.
அவர் விளையாடும் 11 வீரர்களில் இருக்க வேண்டாம் ஆனால் அவரை அணியிலாவது எடுத்திருக்க வேண்டும். அவரது திறமைக்கு வாய்ப்பு வழங்கப்படும் என பிசிசிஐ அவரிடம் கூற வேண்டும். இந்திய அணியின் தேர்வு முழுக்க முழுக்க ஐ.பி.எல் தொடரை சார்ந்தே இருக்கிறது. அதனால் இனிவரும் காலங்களில் சர்ஃபராஸ் கான் போன்ற இளம் வீரர்கள் ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்