என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோப்-கார்"

    • செப்டம்பர் மாதம் தொடங்க நடவடிக்கை
    • ரூ.50 கட்ட ணமாக வசூலிக்கப்படும்

    சோளிங்கர்,:

    சோளிங்கர் மலை மீது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.

    இது ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிக முக்கிய ஆன்மீக தலமாகவும் விளங்குகிறது.

    இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம்,பெங்களூர், மைசூர்,சித்தூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வருகின்றனர்.

    சராசரியாக வார இறுதி நாட்களில் 3000 பக்தர்கள் வருகின்றனர்.

    குறிப்பாக கார்த்திகை தீப பூஜை காலங்களில் 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.

    மலையின் அடித்தளத்தில் இருந்து கோவிலுக்கு சென்றடைய 1,306 படிக்கட்டுகள் ஏறி சென்றடைய வேண்டும்.

    இந்தக் கோவில் ஒழுங்கற்ற பாறைகளை கொண்ட மலை மீது அமைந்துள்ளதால் பக்தர்கள் நடந்து செல்வ தற்கு சிரமப்படுகின்றனர்.

    மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், சிறுவர்கள் கோவிலுக்கு சென்று வழிபடுவது கடினமாக இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் பல ஆண்டுகளாக ரோப் கார் சேவை அமைக்க வேண்டும் என் இந்து சமய அறநிலைத்துறையிடம் கோரிக்கை வைத்தனர்.

    இந்த சேவை குறித்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள்கூறியதாவது:

    ரோப் கார் சேவை அமைக்க 2010 ஆம் ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டது.

    பின்னர் இதற்கான பணிகள் ரூ.8.26 கோடி மதிப்பீட்டில் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    தற்போது ரோப் கார் வசதி 750 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    மலையின் அடித்தள உயரத்திலிருந்து கோவிலுக்கு சென்றடைய 430 மீ தூரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த சேவை 8 ரோப்-கார்கள் கொண்டதாக இருக்கும். 4 ரோப்-கார்கள் மேலே செல்வதற்கும் 4 ரோப் கார்கள் கீழே வருவதற்குமாக அமைக்கப்படுகிறது.

    மேலும் 250 வாட் மின் திறனுடன் இயக்கப்படுகின்ற இந்த சேவையில் அவசரகால வசதிகளும் உள்ளன.

    மொத்தம் 8 இருக்கைகளைக் கொண்டு இந்த ரோப்-கார் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

    இதில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு ரூ.50 கட்ட ணமாக வசூலிக்கப்படும். மேலும் இந்த ரோப்-கார் வசதி வரும் செப்டம்பரில் நடைமுறைக்கு என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ×