search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹசரங்கா"

    • இலங்கை வீரர்கள் பந்து வீச்சில் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் திணறினர்.
    • 10 ரன்னுக்குள் மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி பெற்றி பெற இலங்கை திட்டமிட்டது.

    டி20 உலகக் கோப்பையில் தல்லாஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் இலங்கை- வங்காளதேசம் அணிகள் மோதின. வங்காளதேசம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பதுன் நிஷாங்கா அதிரடியாக விளையாடி 28 பந்தில் 47 ரன்கள் விளாசினார். என்றாலும் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களே சேர்த்தது.

    பின்னர் 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச வீரர்கள் களம் இறங்கினர். இலங்கை வீரர்கள் பந்து வீச்சில் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் திணறினர்.

    தொடக்க வீரர்கள் தன்ஜித் ஹசன் 3 ரன்னிலும், சவுமியா சர்கார் டக்அவுட்டிலும் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு லிட்டோஸ் தாஸ் உடன் தவ்ஹித் ஹிரிடோய் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 11.4 ஓவரில் 91 ரன்கள் எடுத்திருக்கும்போது ஹிரிடோய் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். லிட்டோன் தாஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் அணியின் ஸ்கோர் 99 ரன்னாக இருக்கும்போது ஆட்டமிழந்தார்.

    அப்போது வங்காளதேசம் 14.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 113 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. 10 ரன்னுக்குள் மேலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி பெற்றி பெற இலங்கை திட்டமிட்டது.

    ஆனால் மெஹ்முதுல்லா ஒருபக்கம் நிலைத்து நின்று 16 ரன்கள் அடிக்க வங்காளதேசம் 19 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நுவான் துஷான் 4 விக்கெட் வீழ்த்தியது பயனில்லாமல் போனது.

    நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஐசிசி டி20 உலகக் கோப்பை மோதலின் போது, இலங்கை அணியின் கேப்டனும், லெக் ஸ்பின்னருமான ஹசரங்கா புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் சாதனையை முறியடித்துள்ளார்.

    சர்வதேச டி20 போட்டிகளில் 108 விக்கெட்டுகளை வீழ்த்தி, மலிங்காவின் 107 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்துள்ளார். இந்த விக்கெட்டுகள் மூலம் அவர் ஒரு மைல்கல்லை எட்டினார்.

    டி20 ஆட்டத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை ஹசரங்கா பெற்றுள்ளார்.

    • 30 வருடத்திற்குப் பிறகு ஜாஃப்னாவில் இருந்து கிரிக்கெட்டிற்கு வந்த வீரர்.
    • கடந்த வருடம் ராஜஸ்தான் அணியின் நெட் பவுலராக இருந்தார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இலங்கையின் வணிந்து ஹசரங்கா இடம் பிடித்திருந்தார். இவர் ஐபிஎல் போட்டியின் தொடக்கத்தில் அணியில் இணைவது தாமதமாகி வந்தது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை காயம் காரணமாக ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அவருக்குப் பதிலாக 22 வயது இளம் வீரரான மற்றொரு இலங்கை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் மாற்று வீரரான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இணைந்துள்ளார். இவர் ஒரேயொரு டி20 போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.

    லங்கா பிரீமியர் லீக்கில் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக தனது 18 வயதில் 2020-ம் ஆண்டு விளையாடினார். 30 வருடத்திற்குப் பிறகு இலங்கையின் வடக்குப் பகுதியான ஜாஃப்னா பகுதியில் இருந்து வந்த முதல் வீரர் ஆவார்.

    கடந்த ஐபிஎல் தொடரின்போது குமார் சங்கக்கரா இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நெட் பவுலராக கொண்டு வந்தார். தற்போது முத்தையா முரளீதரன் அவரை ஐபிஎல் அணிக்கு கொண்டு வந்துள்ளார். வங்காளதேசம் பிரீமியர் லீக்கிலும் விளையாடியுள்ளார். மொத்தமாக 33 டி20 போட்டியில் விளையாடி 42 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவர் ரிஸ்ட் லெக் ஸ்பின்னர் ஆவார்.

    • ஜிம்பாப்வே அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
    • இந்த தொடர் அடுத்த மாதம் 6-ம் தேதி தொடங்குகிறது.

    காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரை தவற விட்ட ஹசரங்கா தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இதனால் அடுத்த வரும் தொடர்களில் அவரை காணலாம். அடுத்த மாதம் ஜிம்பாப்வே அணி 3 ஒருநாள் , 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு வர உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 6-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணியின் டி20 கேப்டனாக வனிந்து ஹசரங்காவும் ஒருநாள் கேப்டனாக குசல் மெண்டீஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஜிம்பாப்வே தொடரில் இருந்து கேப்டன்களாக செயல்பட உள்ளனர்.

    • லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட்டின் போது பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் மிரட்டிய சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா தொடையில் காயமடைந்தார்.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கலக்கிய பத்திரனா இந்த அணியில் இடம் பிடித்துள்ளார்.

    கொழும்பு:

    6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற நாளை முதல் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. நாளை நடைபெற உள்ள முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள அணிகள் மோத உள்ளன.

    இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் இலங்கையின் சில முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை. ஹசரங்கா, சமீரா, குசல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கலக்கிய பத்திரனா இந்த அணியில் இடம் பிடித்துள்ளார்.

    ஆசிய கோப்பைக்கான இலங்கை அணி:-

    தசுன் ஷனகா, பதும் நிசானகா, திமுத் கருணாரத்ணே, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, தனஞ்சயா டி சில்வா, சதீர சமரவிக்ரம, மகேஷ் தீக்சனா, துனித் வெல்லலகே, மதீஷா பத்திரனா, குசன் ரஜிதா, துஷான் ஹேமந்த, பினுர பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன்.

    • லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட்டின் போது பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் மிரட்டிய சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா தொடையில் காயமடைந்தார்.
    • ஆசிய கோப்பையில் இலங்கையின் சில முன்னணி வீரர்கள் விளையாடுவதில் சந்தேகமாகியுள்ளது.

    கொழும்பு:

    6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த போட்டியில் இலங்கையின் சில முன்னணி வீரர்கள் விளையாடுவதில் சந்தேகமாகியுள்ளது. சமீபத்தில் லங்கா பிரிமீயர் லீக் கிரிக்கெட்டின் போது பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் மிரட்டிய சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா தொடையில் காயமடைந்தார். இதனால் அவர் ஆசிய போட்டியில் குறைந்தது முதல் 2 ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று தெரியவந்துள்ளது.

    இதே போல் தோள்பட்டை காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் சமீரா ஆசிய போட்டியை முழுமையாக தவறவிட வாய்ப்புள்ளது. பேட்ஸ்மேன்கள் குசல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

    அவர்கள் வேகமாக குணமடைவதை பொறுத்து அணியில் இடம் கிடைக்குமா என்பது தெரிய வரும். இது இலங்கைக்கு நிச்சயம் பின்னடைவு தான். அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் 31-ந்தேதி வங்காளதேசத்தை பல்லகெலேவில் சந்திக்கிறது.

    • அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • ஹசரங்கா 10 ஓவர்களில் 79 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 10 ஓவர்களில் 79 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸின் உலக சாதனையை ஹசரங்கா சமன் செய்துள்ளார்.

    ஹசரங்கா முந்தைய இரு ஆட்டங்களில் முறையே ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 6 விக்கெட்டும், ஓமனுக்கு எதிராக 5 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தார்.

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் 5 விக்கெட் வீழ்த்திய 2-வது பவுலர் என்ற சிறப்பை அவர் பெற்றார். ஏற்கனவே பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் 1990-ல் தொடர்ந்து 3 முறை 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

    அவருடன் அந்த அரிய சாதனை பட்டியலில் 25 வயதான லெக்ஸ்பின்னர் ஹசரங்கா இப்போது இணைந்துள்ளார்.

    ×