என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வழக்க"
- போதைப்பொருள் வழக்கில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்பட்டார்.
- 72 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் ஷீலா மீது சுமத்தப்பட்டது போலியான வழக்கு என தெரியவந்துள்ளது
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் அழகுநிலையம் நடத்தி வருபவர் ஷீலா. இவர் போதைப்பொருள் வழக்கில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்பட்டார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இருப்பினும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஷீலா 72 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டது போலியான வழக்கு என தெரியவந்துள்ளது. சுங்கத்துறை இன்ஸ்பெக்டர் சதீசன், போலி போதைப் பொருள் வழக்கில் ஷீலாவை சிக்க வைத்திருப்பது, சுங்க இலாகா கமிஷனரின் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சதீசன், சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட ஷீலா, தன் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டியும், பொய் புகார் கூறியவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கைது நடவடிக்கையால், தான் கடன் வாங்கி தொடங்கிய அழகு நிலையத்தை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.