என் மலர்
நீங்கள் தேடியது "ஏரி மண் கடத்தல்"
- மண் கடத்திய லாரியை கலெக்டர் ஷ்ரவன்குமார் மடக்கி பிடித்தார்.
- தலைமறைவாகியுள்ள லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் ஏரிக்கரையில் இருந்து மண் கடத்திய லாரியை நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் மடக்கி பிடித்தார். இதனை சின்னசேலம் தாசில்தார் இந்திரா, இன்ஸ்பெகடர் ராஜாராம் ஆகியோரிடம் ஒப்படைத்து சென்றார். இது குறித்து சின்னசேலம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சின்னசேலத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசன் (வயது 46), சூரியபிரகாஷ் (27), சதீஷ்குமார் (45), ராமர் (58), டிரைவர் வரதராஜ் (43) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள லாரி உரிமையாளர் பேட்டரி வெங்கடேசன் மற்றும் ராமரை போலீசார் தேடி வருகின்றனர். அரசிடம் அனுமதி பெறாமல் ஏரி மண் எடுத்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தாசில்தார் இந்திரா, இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.