என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆடம் கில்கிறிஸ்ட்"
- ஜோ ரூட் நீண்ட காலமாக இங்கிலாந்தின் சிறந்த வீரராக செயல்பட்டு வருகிறார்.
- விராட் கோலியை விட ரூட் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று மைக்கேல் வாகன் கூறினார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் 12000 ரன்களை கடந்த அவர் 34 சதங்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்த அவர் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகிய 4 வீரர்களையும் மிஞ்சியுள்ளார்.
அதனால் விரைவில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் உடைப்பார் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. அத்துடன் விராட் கோலியை விட ரூட் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று மைக்கேல் வாகன் போன்ற அந்நாட்டின் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட்டை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஜோ ரூட்டின் புள்ளிவிவரங்கள் சிறப்பாக இருக்கிறது. அதே போல் விராட் கோலியின் புள்ளிவிவரங்களையும் நான் பார்க்கிறேன். இதை நான் இயன் சேப்பல், ரிக்கி பாண்டிங் போன்ற ஆஸ்திரேலியர்கள் பார்வையில் பார்க்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 பேட்டிங் சராசரி மகத்துவத்திற்கான பெஞ்ச மார்க் அல்லவா?
அதே சமயம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் நான் விராட் கோலியை தேர்ந்தெடுப்பேன். ஜோ ரூட் நீண்ட காலமாக இங்கிலாந்தின் சிறந்த வீரராக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் ஆஸ்திரேலியாவில் அவர் சதமடித்துள்ளதாக எனக்குத் தெரியவில்லை.
ஆனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் விளையாடிய முதல் போட்டியிலேயே பெர்த் மைதானத்தில் நான் பார்த்த சிறந்த சதத்தை அடித்தார். அந்த வித்தியாசமான சதத்தை அடித்த விராட் கோலியை ஆஸ்திரேலிய மண்ணில் நான் தேர்ந்தெடுப்பேன்.
என்று கூறினார்.
ஆஸ்திரேலிய மண்ணில் ரூட் 1 டெஸ்ட் சதம் கூட அடித்ததில்லை. ஆனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் 6 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார்.
- ரிஷப் பண்ட் வலது புறத்தில் இருந்து இடது புறத்திற்கு திரும்பி மிகவும் அற்புதமான ஒரு கேட்ச் எடுத்தார்.
- இது நம்ப முடியாத ஒன்று. அவர் மிக வேகமாக இருந்தார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிக் செய்த குஜராத் அணி 89 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய டெல்லி அணி 8.4 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ரிஷப் பண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். சாலை விபத்தில் சிக்கி குணமடைந்து திரும்ப ஐபிஎல் தொடருக்கு வந்திருக்கும் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் செயல்பாடு மிகவும் திருப்தி அளிக்க கூடியதாக இருக்கிறது. இதன் காரணமாக அவர் வருகின்ற டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வாகவும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கின்றது.
இந்த நிலையில் நேற்று ரிஷப் பண்ட் தொட்டதெல்லாம் தங்கமாக மாறியது என ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பந்து வீச்சாளர் ரவுண்ட் த ஸ்டெம்பில் இருந்து வந்து பேட்ஸ்மேனுக்கு பந்தை வீசுகிறார். இந்த கோணத்திலிருந்து பந்து ரிஷப் பண்ட்டுக்கு வெளியே செல்லும். ஆனால் பந்து மில்லருக்கு எட்ஜ் ஆகி திரும்பி உள்ளே செல்கிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட் வலது புறத்தில் இருந்து இடது புறத்திற்கு திரும்பி மிகவும் அற்புதமான ஒரு கேட்ச் எடுத்தார். இது நம்ப முடியாத ஒன்று. அவர் மிக வேகமாக இருந்தார்.
இந்த இடத்தில் உங்களுடைய டெக்னிக் மிக சரியாக இருக்க வேண்டும். அந்தப் பந்துக்கு உண்மையில் நீங்கள் திரும்பி வந்து பிடிப்பது மிகவும் கடினமான ஒன்று. அதற்குப் பெரிய அளவில் சக்தி வேண்டும். நேற்று டாஸ் முதல் ரிஷப் பண்ட்டுக்கு எல்லாம் நல்லதாக சென்றது. அவர் பந்துவீச்சு மாற்றங்களை சரியாக செய்தார். மேலும் பேட்டிங்கிலும் சில ஷாட் சிறப்பாக விளையாடினார். நேற்று அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறியது.
என்று ஆடம் கில்கிறிஸ்ட் கூறியிருக்கிறார்.
- இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியிருந்தாலும் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் 3 உலக சாதனைகளை படைத்துள்ளார்.
- 9 சிக்சர்களை விளாசிய அவர் ஆசஸ் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கெவின் பீட்டர்சன் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. வெற்றிக்காக போராடிய பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியிருந்தாலும் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் 3 உலக சாதனைகளை படைத்துள்ளார்.
? All the highlights from Day 5 at Lord's ?
— England Cricket (@englandcricket) July 3, 2023
? @HomeOfCricket#EnglandCricket | #Ashes pic.twitter.com/8LgDaPYSbW
இப்போட்டியில் 6-வது இடத்தில் களமிறங்கி 155 ரன்கள் குவித்த பென் ஸ்டோக்ஸ் 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட்டின் 24 வருட சாதனையைத் தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
பென் ஸ்டோக்ஸ் : 155, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2023*
ஆடம் கில்கிறிஸ்ட் : 149*, பாகிஸ்தானுக்கு எதிராக, 1999
டேனியல் வெட்டோரி : 140, இலங்கைக்கு எதிராக, 2009
அதைவிட இந்த போட்டியில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்த அவர் ஏற்கனவே 2017-ல் தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகாராஜுக்கு எதிராக இதே போல் ஹாட்ரிக் சிக்சர்களை அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார்.
அத்துடன் இப்போட்டியில் 9 சிக்சர்களை விளாசிய அவர் ஆசஸ் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கெவின் பீட்டர்சன் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்தார்.
அந்த பட்டியல்:
1. பென் ஸ்டோக்ஸ் : 33*
2. கெவின் பீட்டர்சன் : 24
3. இயன் போத்தம் : 20
4. ஸ்டீவ் ஸ்மித் : 19
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்