என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய மகளிர் கிரிக்கெட் அணி"
- இத்தொடருக்கான இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
- காஷ்வி கௌதம், ஸ்ரீசாரனி, சுச்சி உபாத்யாய் ஆகிய அறிமுக வீராங்கனைகளுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் ஏப்ரல் 27-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளன.
இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் உள்ள ஆர் பிரமதோசா கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே நடைபெறவுள்ளது.
இந்தாண்டு இந்தியாவில் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், அத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்த முத்தரப்பு தொடரானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் அணி களமிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கிறார்.
அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியில் ஷபாலி வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் டைட்டஸ் சாது ஆகியோரும் காயம் காரணமாக இந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை.

இருப்பினும் நடந்து முடிந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காஷ்வி கௌதம், ஸ்ரீசாரனி ஆகியோரும், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட சுச்சி உபாத்யாய் ஆகிய அறிமுக வீராங்கனைகளுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முத்தரப்பு தொடருக்கான இந்திய மகளிர் அணி:
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், காஷ்வீ கௌதம், சினே ராணா, அருந்ததி ரெட்டி, தேஜல் ஹசாப்னிஸ், ஸ்ரீ சரணி, சுசி உபாத்யாய்.
- ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
- ஸ்மிருதி மந்தனா இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் துணைகேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய மகளிர் ஒருநாள் மற்றும் டி20 அணியை அறிவித்துள்ளது.
இந்திய மகளிர் அணி வங்கதேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. 6 போட்டிகளும் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் (எஸ்பிஎன்சிஎஸ்) நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ஸ்மிருதி மந்தனா இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் துணைகேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே, வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் பேட்டர் ரிச்சா கோஷ் ஆகியோர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு உள்ளனர்.இதனால் இந்திய அணி அனுபவமில்லாத பந்து வீச்சாளர்களுடன் விளையாட உள்ளது.
இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டு உள்ள இந்திய அணி பின்வருமாறு:-
இந்திய டி20 அணி:-
ஹர்மன்ப்ரீத் கவுர் (சி),ஸ்மிருதி மந்தனா (விசி), தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா , ஹர்லீன் தியோல், தேவிகா வைத்யா, உமா செத்ரி, அமன்ஜோத் கவுர், மேகனா, மேகனா பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், அஞ்சலி சர்வானி, மோனிகா பட்டேல், ராஷி கனோஜியா, அனுஷா பாரெட்டி, மின்னு மணி.
இந்திய ஒருநாள் அணி:-
ஹர்மன்ப்ரீத் கவுர் (சி), ஸ்மிருதி மந்தனா (விசி), தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா , ஹர்லீன் தியோல், தேவிகா வைத்யா, உமா செத்ரி ,அமன்ஜோத் கவுர், பிரியா புனியா, பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், அஞ்சலி சர்வானி, மோனிகா பட்டேல், ராஷி கனோஜியா, அனுஷா பரெட்டி, சினே ராணா. இவ்விரு அணிகளுக்கான முதலாவது டி20 போட்டி வரும் 9-தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- நான் இந்தியாவுக்காக விளையாட விரும்பினேன், அது இறுதியாக தற்போது நடந்துள்ளது.
- 33 வயதில் நான் ஒருநாள் அணிக்காக அறிமுகமாகியுள்ளேன் என்பதால் இதை அதிசயம் என்று சொல்வேன்.
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி ஸ்மிருதி மந்தனாவின் அபாரமான சதத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது 37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் வெறும் 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீராங்கனை ஆஷா சோபனா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
33 வயதில் நான் ஒருநாள் அணிக்காக அறிமுகமாகியுள்ளேன் என்பதால் இதை அதிசயம் என்று சொல்வேன் என ஆஷா சோபனா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
என்னிடம் தற்போது பேச வார்த்தைகளே கிடையாது. ஏனேனில் நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த போது ஒருநாள் கிரிக்கெட்டை இதுநாள் வரை டிவியில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அப்போது நான் இந்தியாவுக்காக விளையாட விரும்பினேன், அது இறுதியாக தற்போது நடந்துள்ளது.
இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவது எனக்கு ஒரு கனவு. அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது. 33 வயதில் நான் ஒருநாள் அணிக்காக அறிமுகமாகியுள்ளேன் என்பதால் இதை அதிசயம் என்று சொல்வேன். எனது முதல் சர்வதேச விக்கெட்டாக மரிஸான் கேப்பின் விக்கெட்டை வீழ்த்தியது சிறப்பு வாய்ந்த தருணம். ஏனெனில், சில நாள்களுக்கு முன் நான் என்சியாவில் இருந்த போது ஜெமிமாவிடம் உரையாடிக்கொண்டிருந்தேன்.
அப்போது நான் அவரிடம், எனது அறிமுக விக்கெட்டாக மரிஸான் கேப்பின் விக்கெட் இருக்க வேண்டும் என்று கூறினேன். நீங்கள் எந்தப் போட்டியில் விளையாடினாலும், மரிஸான் கேப்பின் விக்கெட்டைப் பெறுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ளதுடன், தற்போது விளையாடி வரும் அனுபவ வாய்ந்த வீராங்கனைகளில் ஒருவரும் கூட. அவரைது விக்கெட்டை வீழ்த்த கடவுள் கருணை காட்டியுள்ளார்.
இவ்வாறு ஆஷா கூறினார்.