என் மலர்
நீங்கள் தேடியது "அலெக்ஸ் கேரி"
- ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பேர்ஸ்டோவ் அவுட் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- அலெக்ஸ் கேரியின் புத்திக் கூர்மையை நாம் பாராட்ட வேண்டும் என அஸ்வின் கூறியுள்ளார்.
லண்டன் :
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் ஓவர் முடிந்து விட்டது என எண்ணி கிரீசை விட்டு வெளியே வந்தார். அப்போது விக்கெட் கீப்பர் ஸ்டம்பில் பந்தை அடித்து ரன் அவுட் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பலரும் இதை கிரிக்கெட் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் அலெக்ஸ் கேரியின் புத்திக் கூர்மையை நாம் பாராட்ட வேண்டுமே தவிர இது நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது. என்றெல்லாம் திட்டக்கூடாது என அஸ்வின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு விக்கெட் கீப்பர் ஸ்டெம்பில் இருந்து அதிக தூரம் நின்று கொண்டு பந்தை எரிந்து சும்மா ஆட்டம் இழக்க செய்திருக்க மாட்டார். ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து பந்து முடிவதற்குள் கிரீசை விட்டு வெளியே செல்வதை கவனித்து இருந்தால் மட்டுமே இப்படி ஆட்டம் இழக்க வைத்திருக்கக்கூடும். இந்த தருணத்தில் அலெக்ஸ் கேரியின் புத்திக் கூர்மையை நாம் பாராட்ட வேண்டுமே தவிர இது நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது. இது நல்ல கிரிக்கெட் கிடையாது என்றெல்லாம் திட்டக்கூடாது.
இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.
அஸ்வினின் இந்த கருத்துக்கு இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- ஆஸ்திரேலியா 2-ம் நாள் முடிவில் 80 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது.
- அலெக்ஸ் கேரி 139 ரன்களுடனும், ஸ்டீவ் சுமித் 120 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
காலே:
இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை தனது முதல் இன்னிங்சில் 257 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 85 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், குனமென், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹேட் 21, கவாஜா 36, லெபுசென் 4 என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனை தொடர்ந்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினர்.
இதன் மூலம் ஆஸ்திரேலியா 2-ம் நாள் முடிவில் 80 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா தற்போது வரை 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அலெக்ஸ் கேரி 139 ரன்களுடனும், ஸ்டீவ் சுமித் 120 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.