search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜார்ஜியா"

    • ஜார்ஜியா அணிக்காக பெனால்டி முறையில் கோல் அடித்தார்.
    • இந்த போட்டியில் அவர் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.

    யூரோ கோப்பை கால்பந்து தொடரின் க்ரூப் எஃப் பிரிவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் ஜார்ஜியா மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதின. இந்த போட்டி துவங்கிய 2-வது நிமிடத்தில் ஜார்ஜிாய வீரர் விச்சா குவார்ட்ஸ்கெலியா (khvicha kvaratskhelia) முதல் கோலை அடிக்க அந்த அணி முன்னிலை பெற்றது.

    பிறகு போட்டியின் 57-வது நிமிடத்தில் மிகுடாட்ஸ் ஜார்ஜியா அணிக்காக பெனால்டி முறையில் கோல் அடித்தார். இதன் காரணமாக ஜார்ஜியா அணி 2-0 என்ற அடிப்படையில் போர்ச்சுகலை வீழ்த்தி வரலாற்று பெற்றியை பதிவு செய்தது. இந்த தொடரில் ஏற்கனவே போர்ச்சுகல் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    எனினும், ஜார்ஜியா அணியின் வெற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஜார்ஜியா நாட்டில் ரொனால்டோ துவங்கி வைத்த கால்பந்து பயிற்சி மையத்தில் சிறுவர்களாக பயிற்சி பெற்றவர்களில் ஒருவர்தான் குவார்ட்ஸ்கெலியா.

     


    அன்று ரொனால்டோ துவங்கி வைத்த பயிற்சி மையத்தை சேர்ந்த சிறுவன் இன்று ரொனால்டோ அணிக்கு எதிரான போட்டியில் ஜார்ஜியா அணிக்காக விளையாடி உள்ளார். மேலும், தனது அணி வெற்றி பெறவும் காரணமாக விளங்கினார். இந்த போட்டியில் அவர் ஆட்ட நாயகன் விருதும் வென்றுள்ளார்.

    இந்த நிலையில், நேற்றைய போட்டிக்கு பிறகு ஜார்ஜிய வீரர் குவார்ட்ஸ்கெலியா போர்ச்சுகவல் வீரரும், கால்பந்து ஜாம்வானுமான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஜெர்சியை வாங்கிக் கொண்டார். பிறகு, ரொனால்டோவின் ஜெர்சி மற்றும் ஆட்டநாயகன் விருது ஆகியவற்றின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு அதற்கு "கனவு" என தலைப்பிட்டுள்ளார்.

    கடந்த பத்து நாட்களுக்கு முன், "போட்டிக்கு பிறகு கிறிஸ்டியானோவிடம் அவரது ஜெர்சியை கேட்கலாமா? ஏன் கேட்க கூடாது? அவர் எனது ரோல்மாடல். அவரிடம் அதை தெரிவிப்பேன். இதனால் எங்களால் அவரை வீழ்த்த முடியாது என்றில்லை," என்று பதிவிட்ட குவார்ட்ஸ்கெலியோ நேற்றைய போட்டியில் வெற்றியை பெற்றதோடு ரொனால்டோவின் ஜெர்சியையும் வாங்கிக் கொண்டுள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லாங் ரேஞ்சில் இருந்து அடித்த கோல் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.
    • மறுபுறம் ஜார்ஜியா வீரர்கள் விட்டுக்கொடுக்காமல் ஆடினர்.

    யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பாரா திருப்பங்கள் மற்றும் சுவாரஸ்யங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், க்ரூப் எஃப் பிரிவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் துருக்கி மற்றும் ஜார்ஜியா அணிகள் மோதின.

    இந்த போட்டியில் இளம் வீரர் அர்டா குலெர் லாங் ரேஞ்சில் இருந்து அடித்த கோல் துருக்கி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. போட்டி முழுக்க ஆதிக்கம் செலுத்திய துருக்கி அணி கோல் அடிப்பதில் தீவிரம் காட்டியது.

    இதற்கு பலன் அளிக்கும் வகையில், போட்டியின் 25-வது நிமிடத்தில் துருக்கியின் மெர்ட் முல்துர் வேகமாக அடித்த ஷாட் கோலாக மாறியது. மேலும், போட்டியில் துருக்கி அணிக்கு முன்னிலையை பெற்றுக் கொடுத்தது.

    மறுபுறம் ஜார்ஜியா வீரர்கள் விட்டுக்கொடுக்காமல் ஆடினர். இதன் காரணமாக ஜார்ஜியா அணி போட்டியன் 32-வது நிமிடத்தில் கோல் அடித்தது. இதையடுத்து போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்த சமனில் இருந்தன.

    போட்டியின் இரண்டாம் பாதி எந்த அணி இன்னொரு கோல் அடித்து வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புடன் துவங்கியது. இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். முடிந்த வரை போட்டியில் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த துருக்கி வீரர்கள், இடையில் கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்றும் முயற்சியிலும் இறங்கினர்.

     


    அந்த வகையில், போட்டியின் 65-வது நிமிடத்தில் துருக்கி அணிக்காக களமிறங்கிய 19 வயது இளம் வீரர் அர்டா குலெர் யாரும் எதிர்பாரா நிலையில் கோல் அடித்தார். இதன் மூலம் துருக்கி அணி 2-1 என்ற வகையில் போட்டியில் முன்னிலை பெற்றது. போட்டி முடிவில் துருக்கி அணி 3 கோல்களை அடித்து இருந்தது. இதன் மூலம் இந்த போட்டியில் துருக்கி அணி 3-1 என்ற வகையில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் துருக்கி வீரர் அர்டா குலெர் கோல் அடித்ததன் மூலம் யூரோ கோப்பையில் சாதனை ஒன்றை படைத்துள்ளார். யூரோ கால்பந்து வரலாற்றின் அறிமுக போட்டியில் முதல் கோல் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை அர்டா குலெர் பெற்றிருக்கிறார்.

    முன்னதாக 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 19 வயது 128 நாளில் முதல் கோல் அடித்தது சாதனையாக இருந்தது. நேற்றைய போட்டியில் கோல் அடித்த அர்டா குலெர் தனது 19 வது 114-வது நாளில் கோல் அடித்து சாதனை படைத்துள்ளார். 

    • இரண்டு முறை ஜார்ஜியா அதிபராக இருந்த சாகாஷ்விலி உக்ரைன மாகாண கவர்னராகவும் இருந்துள்ளார்
    • விசாரணையின்போது மிகவும் மெலிந்து காணப்பட்டதால் உக்ரைன் கண்டனம்

    ஜார்ஜியாவின் முன்னாள் அதிபர் சாகாஷ்விலி. இவர் 2004 முதல் 2013 வரை இரண்டு முறை ஜார்ஜியாவின் அதிகபராக இருந்துள்ளார். அதன்பின் உக்ரைன் சென்று 2015-16 ஒடேசா மாகாணத்தின் கவர்னராக இருந்துள்ளார். இவருக்கு உக்ரைன் நாட்டின் குடியுரிமையும் உள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு நாடு திரும்பிய அவரை, நாடு தழுவிய நகராட்சி தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சி படைகளை ஒன்றிணைத்து வலுப்படுத்த முயற்சி செய்ததாக ஜார்ஜியா அரசு கைது செய்தது. மேலும், 2007-ம் ஆண்டு எதிர்க்கட்சி பேரணியின்போது வன்முறையை பரப்பியதாக புதிதாக ஒரு குற்றச்சாட்டும் அவர் மீது போடப்பட்டுள்ளது.

    ஜெயிலில் இருக்கும் சாகாஷ்விலி சில தினங்களுக்கு முன் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் உடல் மெலிந்து காணப்பட்டார். கைது செய்யப்பட்டபோது இருந்ததைவிட தற்போது பாதி எடையுடன் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலும், சிறையில் இருக்கும்போது அவருக்கு விசம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர்.

    இந்த நிலையில் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஜார்ஜியா தூதருக்கு சம்மன் அனுப்பியது. அதில், சாகாஷ்விலியின் உடல்நலம் குறித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தது. அவரை மருத்துவ பரிசோதனைக்காக உக்ரைனுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறியதோடு, ஜார்ஜியா தூதர் சொந்த நாடு திரும்ப வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தது.

    இதற்கு ஜார்ஜியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில உக்ரைன் நடவடிக்கை மிகவும் அதிகமானது என ஜார்ஜியா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில் ''உக்ரைன் அதிகாரிகள் எடுத்த இந்த முடிவால் இருநாட்டு மூலோபாய உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், ஒரு இறையாண்மை நாட்டின் உள்விவகாரத்தில் நேரடியாக தலையிடுவதாக உள்ளது'' எனவும் தெரிவித்துள்ளது.

    மருத்துவ சிகிச்சைக்காக சாகாஷ்விலியை உக்ரைனுக்கு அனுப்ப வேண்டும் ஜெலன்ஸ்கியும் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×