என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருப்புகழ்"
பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெறிந்து
பிணிக ளான துயர்உ ழன்று- தடுமாறிப்
பெருகு தீயவினையி னொந்து கதிகள்தோறு மலைபொருந்தி
பிடிப டாத ஜனன நம்பி- அழியாதே
நறைவி ழா த மலர்மு கணந்த அரிய மோன வழிதிறந்த
நளின பாதம் என சிந்தை- அகலாதே
நரர்சு ராதி பரும்வ ணங்கும் இனிய சேவைதனை விரும்பி
நல ன்தாக அடியன் என்று- பெறவேனோ
பொறிவ ழாத முனிவர் தங்கள் நெறிவழாத பிலனுழன்று
பொருநி சாச ரனைநி னைந்து- வினைநாடிப்
பொருவி லாமல் அருள்புரிந்து மயிலின் ஏறி நொடியில் வந்து
புளக மேவ தமிழ் புனைந்த- முருகோனே
சிறுவ ராகி இருவர் அந்த கரிபதாதிகொடு
பொருஞ் சொல்
சிலைஇ ராமன் உடன்எ திர்ந்து- சமராடிச்
செயம தான நகர்அ மர்ந்த அளகை போல வளமி குந்த
சிறுவை மேவி வரமி குந்த - பெருமாளே.
சீதாபிராட்டியை கொடுஞ் சொல்லால் கானகத்துக்கு அனுப்பிய, வில்லேந்திய ராமனை, சிறுவரான லவ- குசலவர் இருவரும், யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை இவற்றுடன் வந்த போது, எதிர்த்து போரிட்டு வெற்றி கொண்ட குபேர பட்டணமான அளகாபுரி போல எல்லா வளங்களும் மிகுந்துள்ள இச்சிறுவாபுரியில் வீற்றிருந்து வரங்களை நிரம்ப இருப்பு வைத்துள்ள பெருமானே, முருகோனே எனக்கு வேண்டிய வரங்களை அருள்வாய் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
- முதல் பன்னிரண்டு அடிகளில் அர்ச்சனை திருப்புகழில் முருகப் பெருமானின் பராக்கிரமம், அழகு, உறவு கூறப்படுகின்றன.
- பின் பன்னிரண்டு அடிகளில் சிறுவாபுரியின் செல்வ சிறப்பு அழகு, பெருமை ஆகியவையும் கூறப்படுகின்றன.
அருணகிரிநாதர் சிறுவாபுரி முருகனைப் போற்றிப் பாடி இருக்கும் நான்கு திருப்புகழையும், அதில் மறை பொருளாகச் சொல்லி இருக்கும் பிரார்த்தனைகளையும் அதன்மூலம் நாம் பயன்பெறும் முறைகளையும் இங்கே காணலாம்.
சீதள வாரிஜ பாதா! நமோநம
நாரத கீத விநோதா நமோநம
சேவல மாமயில் ப்ரீதா! நமோநம - மறைதேடுஞ்
சேகரமான ப்ரதாபா! நமோநம
ஆகமசார சொரூப நமோநம
தேவர்கள் சேனைமகீபா! நமோநம- கதிதோயப்
பாதக நீவுகுடாரா! நமோநம
மாவசு ரேசர்கடோரா நமோநம
பாரினி லேஜய வீரா! நமோநம- மலைமாது
பார்வதி யாள்தரு பாலா! நமோநம
நாவல ஞான மனோலா நமோநம
பால குமார சுவாமி! நமோநம- அருள்தாராய்
போதக மாமுகன் நேரான சோதர
நீறணி வேணியர் நேயா! நமோநம
பூமக ளார்மரு கேசா மகோததி- இகல்சூரா
ேபாதக மாமறை ஞான! தயாகரா!
தேனவிழ் நிபநறா வாரு மார்பக
பூரணி மாமதி போல் ஆறு மாமுக!- முருகேசா
மாதவர் தேவர்களோடேமுராரியும்
மாமலர் மீதுறை வேதாயு மேபுகழ்
மாநிலம் ஏழினும் மேலான நாயக!- வடிவேலா
வானவர் ஊரினும் வீறாகி வீறள
காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
வாழ்சிறு வாபுரி வாழ்வே! சுராதிபர்- பெருமாளே
இந்த அர்ச்சனை திருப்புகழை பாடும் போது பொருளை உணர்ந்து நமோ நம என முடியும் போது, மலர்களை சிறுவை பால சுப்பிரமணியனின் திருவடிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
முதல் பன்னிரண்டு அடிகளில் அர்ச்சனை திருப்புகழில் முருகப் பெருமானின் பராக்கிரமம், அழகு, உறவு கூறப்படுகின்றன.
பின் பன்னிரண்டு அடிகளில் சிறுவாபுரியின் செல்வ சிறப்பு அழகு, பெருமை ஆகியவையும் கூறப்படுகின்றன.
இந்த வரிகளை பாடும் போது முருகனை உணர்ந்து வேண்டி, அவனருளால் எல்லா செல்வங்களையும் பெற பிரார்த்தனை செய்ய வேண்டும்.
- முருகனுக்கு விளக்கேற்ற நல்லெண்ணெய் உகந்தது.
- கன்னிப்பெண்கள் இவ்விரதத்தை மேற்கொண்டால் சீக்கிரமே திருமணம் நடைபெறும்.
வைகாசி மாதத்தில் பூரணச்சந்திரனும், விசாக நட்சத்திரமும் கூடிவரும் தினத்தை வைகாசி என்பார்கள்.
விசாக தினத்தில் காலையில் குளித்துப் பூசை அறையில் முருகன் படத்திற்கு பூ, பொட்டிட்டு அஷ்டோத்திரம் செய்து.
நைவேத்தியம் சமர்ப்பித்து பூசிக்க வேண்டும்.
திருப்புகழ், கந்தர் சஷ்டிகவசம், கந்தர் அநுபூதி ஆகிய நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.
பூசை மேற்கொண்ட தினத்தில் இரவில் பால் மட்டும் உண்டு விரதமிருந்தால் பூரண பலன் கிடைக்கும்.
கோவிலில் சென்று முருகனை அபிஷேக ஆராதனைகளுடனும் வழிபடலாம்.
முருகனுக்கு விளக்கேற்ற நல்லெண்ணெய் உகந்தது.
சந்நிதியில் நெய் விளக்குப்போடுவது சாலச்சிறந்தது.
கன்னிப்பெண்கள் இவ்விரதத்தை மேற்கொண்டால் சீக்கிரமே திருமணம் நடைபெறும்.
- திருப்புகழில் சிங்கார வேலனைப் போற்றிப் புகழ்கிறார் அருணகிரிநாதர்.
- திருப்புகழில் சிக்கல் சிங்கார வேலவரின் சிறப்புகளும், சிக்கல் தலத்தின் பெருமைகளும் கூறப்படுகின்றன.
சிக்கல் சிங்காரவேலவர் கோவில் முருகப் பெருமானின் அறிவிக்கப்படாத 7-ம் படைவீடாகப் போற்றப்படுகிறது.
விஸ்வாமித்திரர், அகத்தியர், கார்த்தியாயனர், நாரதர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.
'கன்னல் ஒத்த மொழிச் சொல்' எனத் தொடங்கும் திருப்புகழில் சிக்கல் சிங்கார வேலவரின் சிறப்புகளும், சிக்கல் தலத்தின் பெருமைகளும் கூறப்படுகின்றன.
'அற்ப குணம் படைத்தவர்கள் பக்கம் என் மனதை செலுத்தவிடாமல், இயல், இசை, நாடகம் என்று முத்தமிழில் விருப்பம் கொண்டவனாக விளங்கும் நீ, எனக்கு அருள் புரிவாயாக!
அரக்கர்களின் தலைகளை பூமியில் உருளச் செய்யும் வீரம் கொண்டவனே!
கொடிய பாம்பின் விஷத்தைப் போன்ற மனம் கொண்ட சூரனை, வெற்றி காண வேலாயுதத்தை உடையவனே! செம்மை குணம் கொண்ட பெரியோரின் உள்ளத்தில் வீற்றிருக்கும் சிக்கல் சிங்கார வேலவரே!'
- என்று தனது திருப்புகழில் சிங்கார வேலனைப் போற்றிப் புகழ்கிறார் அருணகிரிநாதர்.
இங்கு வரும் பக்தர்கள், 'சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் போர் முடித்து சிக்கல் தவிர்க்கின்ற சிங்கார வேலவனை நித்தம் பாடுவோம்' என்று கூறியும், திருப்புகழைப் பாடியும் தங்கள் வழிபாட்டை நிறைவு செய்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்