என் மலர்
நீங்கள் தேடியது "தங்கும் இடம்"
- வருகின்ற 13-ந் தேதி சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
- பயனாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் மற்றும் உணவு தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில கூறி இருப்பதாவது:- கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வருகின்ற 13-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில் 18 வயது முதல் 26 வயது வரை உள்ளமாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் மற்றும் உணவு தங்கும் இடம் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ முடித்துள்ள மாணவர்கள் இந்த சிறப்பு வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.