என் மலர்
நீங்கள் தேடியது "துணை முதல் அமைச்சர்"
- பிரச்சனை இருந்தால் அதை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சரி செய்ய வேண்டும்.
- துணை முதல் அமைச்சரையே கேள்வி கேட்கும் அளவிற்கு தைரியம் வந்துவிட்டதா என மக்கள் முன்பாகவே நாராயணசாமி ஆவேசப்பட்டார்.
திருப்பதி:
ஆந்திரா அரசு "வீட்டிற்கு வீடு நம் ஆட்சி" என்னும் பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி அமைச்சர்கள் எம்.பி,எம்.எல்.ஏ என அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அவரவர் தொகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிய வேண்டும்.
பிரச்சனை இருந்தால் அதை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சரி செய்ய வேண்டும்.
இந்நிலையில் துணை முதல் அமைச்சர் நாராயணசாமி சித்தூர் மாவட்டம், குண்ட்ராஜு இன்லு எனும் கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது திருப்பதி ஆயுதப்படை போலீஸ்காரர் யுகேந்திரன், கிராமத்தில் உள்ள சாலை குறித்து அவரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
கடந்த 4 ஆண்டுகளாக இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளது என அவரது குறைகளை எடுத்துக் கூறினார். மேலும் இதுபற்றி அவர் கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த துணை முதல் அமைச்சர் நாராயணசாமி, யுகேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து துணை முதல் அமைச்சரையே கேள்வி கேட்கும் அளவிற்கு தைரியம் வந்துவிட்டதா என மக்கள் முன்பாகவே நாராயணசாமி ஆவேசப்பட்டார்.
அதன் பின்னர் அதிகாரிகள் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
பின்னர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென துணை முதல் அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார். அதன் பேரில் போலீஸ்காரர் யுகேந்திரன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.