என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூங்கிய லோடுமேன்"

    • ராமு லாரி லோடுமேனாக வேலை செய்துவந்தார்.
    • விழுந்த இடத்தில், கம்பி கேட் இருந்ததால், அந்த கம்பி குத்தி ராமு உயிருக்கு போராடினார்.

    புதுச்சேரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி மகுடஞ்சாவடி எர்ணாபுரம் பகுதியைச்சேர்ந்தவர் ராமு (வயது48). இவர், கேராளாவிற்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் சென்று, அங்கேயே லாரி லோடுமேனாக வேலை செய்துவந்தார். இவரது தம்பி லட்சுமணன். இவரும் லோடுமேனாக சேலத்தில் வேலை செய்து வந்தார். ராமு, அடிக்கடி சேலம் வந்து தம்பி லட்சுமணனை பார்த்து செல்வது வழக்கம். அதேபோல், கடந்த 6-ந் தேதி சேலம் வந்த ராமு, தம்பி லட்சுமணன் மற்றும் சிலருடன், நாகை மாவட்டம் பூந்தோட்டத்தில் பஞ்சு ஏற்று வதற்காக சென்றார். பின்னர், அங்கிருந்து, காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் சென்றனர்.

    அங்கு வேலை முடிந்ததும், இரவு, அங்குள்ள மதுக்கடையில் அனைவரும் மது அருந்திவிட்டு, லாரி மேலே ராமுவும், லாரியின் கீழே தம்பி லட்சுமணன் உள்ளிட்ட சிலரும் தூங்கி னர். லாரி மேலே தூங்கிய ராமு, தூக்ககலக்கத்தில், லாரியில் இருந்து கீழே விழுந்தார். அவர் விழுந்த இடத்தில், கம்பி கேட் இருந்ததால், அந்த கம்பி குத்தி ராமு உயிருக்கு போராடினார். தொடர்ந்து, லட்சுமணன் உள்ளிட்ட சிலர் ராமுவை, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோ தித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து, லட்சுமணன் திருநள்ளாறு போலீசில் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×